english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. போதுமானதை விட அதிசயம் செய்யும் தேவன்
అనుదిన మన్నా

போதுமானதை விட அதிசயம் செய்யும் தேவன்

Tuesday, 28th of November 2023
0 0 1396
Categories : Prayer
“அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் பார்த்து: உனக்கு என்னவேண்டும் என்றான். அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; எனக்கு வறட்சியான நிலத்தைத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலத்தையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது அவளுக்கு மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.”
‭‭யோசுவா‬ ‭15‬:‭18‬-‭19‬ ‭

இன்று, நமது உரையில், அக்சாள் தன் தந்தை காலேபிடம், தனக்கு "வறட்சியான நிலம்" கொடுக்கப்பட்டதாகக் கூறியதைக் காண்கிறோம், எபிரேய மொழியில் "வறண்ட" என்று பொருள்படும். ஏனெனில் பாலஸ்தீனத்தின் தெற்குப் பகுதி பாலைவனம் போல் வறண்டிருந்தது. "பலன் தராத நிலம்" தனக்குச் சொந்தமானது என்று அக்சாள் தன் தந்தை காலேபிடம் கூறிக்கொண்டிருந்தாள்.

அவள் அப்பாவிடம் வந்ததும் இதைத்தான் கேட்டாள். "எனக்கும் நீரூற்றுகளைக் கொடுங்கள்." அவள் வெட்கப்படவில்லை. அவள் தன்னை நேசித்த வேண்டப்பட்ட தன் தந்தையிடம் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் வந்தாள்.

இப்போது, ​​தைரியம் என்றால் அவமரியாதை என்று அர்த்தம் இல்லை. “அவள் கழுதையை விட்டு இறங்கினாள்” என்று வேதம் கூறுவதை கவனியுங்கள். தன் தந்தைக்கு உரிய மரியாதை கொடுத்தாள். (ரோமர் 13:7-ஐ வாசியுங்கள்)

இப்போது இந்தக் கதை நம் எல்லா கனவுகளையும் விஞ்சி, எபேசுவில் உள்ள கிறிஸ்தவர்களிடம் அப்போஸ்தலனாகிய  பவுல் சொல்கிறார், நம் தேவன் "நாம் கேட்பதற்கும் நினைப்பதற்கும் மேலாக" செய்வார். (எபேசியர் 3:20).

காலேபைப் போன்ற ஒரு பூமிக்குரிய தகப்பன் அத்தகைய இருதயம் கொண்டவராக இருந்தால், அதில் அவர் தனது மகள் கேட்டதை விட அதிகமாக ஆசீர்வதித்தார் என்றால், நம்முடைய பரலோகத் தகப்பன் எவ்வளவு அதிகம் செய்வார்?

நம்முடைய தேவனின் நாமங்களில் ஒன்று யெகோவாயீரே, அதாவது “எல்லாவற்றையும் தருபவர்”. அவர் எப்போதும் போதுமானதை விட அதிகமாக வழங்குகிறார். இந்த அளவுக்கு அதிகமான தேவன் மாம்சத்தில் வந்து தம் ஜனங்கள்  மத்தியில் வாசம் செய்தார். அவர் கலிலேயாக் கடலின் கரையோரம் நடந்து செல்லும்போது, ​​பேதுருவிடம், “ஆழத்தில் வலைகளைப் போடுங்கள்” என்றார். (லூக்கா 5:4)

அது என்ன ஒரு  அற்புதமாக மாறியது—படகு மூழ்கத்தக்க, வலை கிழிந்து போகத்தக்கதாக பிடித்தார்கள்! இது ஒரு பெரிய எதிர்பாராத ஆசீர்வாதமாக இருந்தது, பேதுரு மற்றும் அவருடன் இருந்த அனைவரும் "தாங்கள் கண்ட அற்புதத்தை கண்டு வியந்தனர்".

எதற்கும் குறையாதீர். உங்களுக்கு வேலை இல்லை என்றால், உங்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். உத்தியோகம் இருந்தால் பதவி உயர்வு, பதவி கிடைக்கும். உங்களுக்கு வீடு இல்லையென்றால், கர்த்தர் உங்களுக்கு ஒரு வீட்டைக் கொடுப்பார், உங்களிடம் ஏற்கனவே ஒரு வீடு இருந்தால், அவர் உங்கள் வீட்டை நன்மைகளால் நிரப்புவார். அவர் போதுமானதை விட அதிகமாக செய்கிற தேவன்.
ఒప్పుకోలు
நான் முதலில் தேவனுடைய ராஜ்யத்தைத் தேடுவேன்; ஆகையால், எனக்குத் தேவையான அனைத்தும் எனக்கு கொடுக்கப்படும். (லூக்கா 12:31)

ஆபிரகாமின் ஆசீர்வாதம் என்னுடையது. (கலாத்தியர் 3:14)


Join our WhatsApp Channel


Most Read
● புளிப்பில்லாத இதயம்
● ஞானமடையுங்கள்
● சூழல்கள் பற்றிய முக்கிய நுண்ணறிவு - 1
● மரியாதையும் மதிப்பும்
● பரலோகத்தின் வாக்குத்தத்தம்
● உங்கள் விதியை மாற்றவும்
● சொப்பனம் காண தைரியம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్