english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. அப்பாவின் செல்ல மகள் - அக்சாள்
అనుదిన మన్నా

அப்பாவின் செல்ல மகள் - அக்சாள்

Friday, 27th of September 2024
0 0 668
Categories : பிரார்த்தனை (Prayer) விசுவாசம் ( Faith)
“அப்பொழுது காலேப்: கீரியாத்செப்பேரை சங்காரம்பண்ணிப் பிடிக்கிறவனுக்கு என் குமாரத்தியாகிய அக்சாளை விவாகம்பண்ணிக் கொடுப்பேன் என்றான். அப்பொழுது காலேபுடைய தம்பியாகிய கேனாசின் குமாரன் ஒத்னியேல் அதைப் பிடித்தான்; ஆகையால் தன் குமாரத்தியாகிய அக்சாளை அவனுக்கு விவாகம்பண்ணிக் கொடுத்தான்.”
‭‭நியாயாதிபதிகள்‬ ‭1‬:‭12‬-‭13‬ ‭

காலேப் எண்பத்தைந்து வயதாக இருந்தபோதிலும், தேவனின் வாக்குத்தத்தங்களில் அவருக்கு முழு விசுவாசம் இருந்தது. மேலும், அவர் வலுவான குணம் கொண்ட நல்ல மனிதராக இருந்தார். அவருக்கு அக்சாள் என்ற மகள் இருந்தாள், அவள் ஒத்னியேல் என்ற நபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள்.

குழந்தையின் நம்பிக்கையில் மிக முக்கியமான செல்வாக்கு பெற்றோர். மேலும் இதில் ஆவிக்குரிய தாக்கமும் அடங்கும்.

சிறுவனாக இருந்தபோது, ​​​​என் அம்மா என்னை சபைக்கு அழைத்துச் செல்வதை நான் அன்புடன் நினைவில் கொள்கிறேன். அவர்களுக்கு அதிக படிப்பு இல்லையென்றாலும், இரவு உணவின் போது, ​​என் சிறிய சகோதரனுடனும் என்னுடனும் வேதாதிலிருந்து கதைகளை அவள் தொடர்ந்து பகிர்ந்து கொள்வாள். இயற்கையாகவே, சிறுவனாக இருந்த என்னை இது பெரிதும் பாதித்தது

என்னுடைய இளம் வாலிப பருவத்தில், நான் முரடாடம் பிடித்து, ஹெவி மெட்டல் இசை மற்றும் தற்காப்புக் கலைகளின் உலகிற்குள் நுழைந்தேன். ஆனால், அப்போதும், நான் தேவனிடம் திரும்புவதற்காக என் தாய் எனக்காக தொடர்ந்து ஜெபிப்பதையும் உபவாசம் இருப்பதையும் நான் பார்த்து இருக்கிறேன். பல சமயங்களில், என் பாதுகாப்பிற்காக அவர்கள் இன்னும் ஜெபம் செய்வதைக் கண்டு நான் இரவு தாமதமாக வருவேன். இது என் வாழ்க்கையை ஆழமாக பாதித்தது, பின்னர் அது என்னை தேவனிடம் திருப்பியது.

ஒரு பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியின் விசுவாசம் கூட ஒரு குடும்பத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். பவுல் தீமோத்தேயுவை நினைவு கூர்ந்தார், “அந்த விசுவாசம் முந்தி உன் பாட்டியாகிய லோவிசாளுக்குள்ளும் உன் தாயாகிய ஐனிக்கேயாளுக்குள்ளும் நிலைத்திருந்தது; அது உனக்குள்ளும் நிலைத்திருக்கிறதென்று நிச்சயித்திருக்கிறேன்.”
‭‭(2 தீமோத்தேயு 1:5).

இது தீமோத்தேயுவின் வாழ்க்கையில் அடித்தளத்தை அமைத்தது, இது அவரை ஆதிதிருசபையின் நற்செய்தி ஊழியத்தில் வல்லமைவாய்ந்த ஊழியராகவும், மிகப்பெரிய அப்போஸ்தலர்களில் ஒருவரான அப்போஸ்தலனாகிய பவுலுடன் உண்மையுள்ள தோழராகவும் சக ஊழியராகவும் வளர உதவியது.

“அவள் புறப்படுகையில், என் தகப்பனிடத்தில் ஒரு வயல்வெளியைக் கேட்கவேண்டும் என்று அவனிடத்தில் உத்தரவு பெற்றுக்கொண்டு, கழுதையின்மேலிருந்து இறங்கினாள். காலேப் அவளை நோக்கி: உனக்கு என்னவேண்டும் என்றான். அப்பொழுது அவள்: எனக்கு ஒரு ஆசீர்வாதம் தரவேண்டும்; வறட்சியான நிலத்தை எனக்குத் தந்தீர்; நீர்ப்பாய்ச்சலான நிலங்களையும் எனக்குத் தரவேண்டும் என்றாள்; அப்பொழுது காலேப்: மேற்புறத்திலும் கீழ்ப்புறத்திலும் அவளுக்கு நீர்ப்பாய்ச்சலான நிலங்களைக் கொடுத்தான்.”
‭‭நியாயாதிபதிகள்‬ ‭1‬:‭14‬-‭15‬ ‭

ஒரு புதிய மணப்பெண்ணாக, அக்சாள் தன் தகப்பனிடம் திரும்பி வந்து தன் திருமண வாழ்க்கையிலும் திருமணத்திளும் ஆவிக்குரிய ஆசீர்வாதத்தைக் கோரினாள். அவள் வாழ்க்கையில் தேவனின் ஆசீர்வாதம் தேவை என்பதை அவள் அறிந்தாள். முதலில் தன் தந்தையிடம் வரம் கேட்கும்படி கணவனை வற்புறுத்தினாள், ஆனால் அவன் அமைதியாக இருந்ததால், தைரியமாக அவளே தன் தகப்பனிடம் வரம் கேட்டாள்.

ஒரு மகளாக, அவள் தந்தையுடன் அற்புதமான உறவைக் கொண்டிருந்தாள் என்பதை இது எனக்குச் காண்பிக்கிறது. தந்தையுடனான இந்த நெருங்கிய உறவே, தன் தந்தையிடம் வரம் கேட்கும் நம்பிக்கையை அவளுக்குக் கொடுத்தது. அப்பாவிடம் கேட்டால் மறுக்க மாட்டார் என்ற நம்பிக்கை அவளுக்கு இருந்தது.

இது ஜெபத்தை பற்றிய ஒரு அற்புதமான பாடம்.

“நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம். நாம் எதைக் கேட்டாலும், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்று நாம் அறிந்திருந்தோமானால், அவரிடத்தில் நாம் கேட்டவைகளைப் பெற்றுக்கொண்டோமென்றும் அறிந்திருக்கிறோம்.”
‭‭1 யோவான்‬ ‭5‬:‭14‬-‭15‬ ‭

ஜெபத்தில் நம்பிக்கை என்பது தேவனுடைனான தினசரி உறவிலிருந்து வெளிவருகிறது. தன்னம்பிக்கை நம்மைக் கேட்பதில் தைரியமாக்கும். தேவனுடனான உறவு, அவருக்குப் பிடிக்காத எதையும் நாம் ஒருபோதும் கேட்க மாட்டோம் என்பதை உறுதிப்படுத்தும். ஜெபத்திற்கான பதிலை பெறுவதின் ரகசியம் இதுதான். அக்சாளின் திருமணமும் இல்லறமும் ஆசீர்வதிக்கப்பட்டது, இந்தக் கொள்கைகளை நாம் நடைமுறைக்குக் கொண்டுவரும்போது நீங்களும் நானும் அப்படியே ஆசீர்வதிக்க படுவோம்.
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், வரம்பற்ற வெற்றி வாழ்விற்கும் தயவிற்கு என்னை உமது ஆவியினாலும் வார்த்தையினாலும் வழிநடத்தும். தகப்பனே, இயேசுவின் நாமத்தில், என் வாழ்க்கைக்கும் என் குடும்பத்திற்கும் எதிரான ஒவ்வொரு வகையான சாத்தானின் குறுக்கீடும் பரிசுத்த ஆவியின் வல்லமையால் சிதறடிக்கப்படும்.


Join our WhatsApp Channel


Most Read
● பாலங்கள் கட்டும், தடைகள் அல்ல
● தேவனுக்காக மற்றும் தேவனுக்கும்
● உங்கள் பழிவாங்கலை தேவனிடம் கொடுங்கள்
● சொப்பனம் காண தைரியம்
● மற்றவர்களுக்கான பாதைக்கு வெளிச்சத்தை காண்பித்தல்
● நன்றி செலுத்தும் ஸ்தோத்திரபலி
● இயேசு இப்போது பரலோகத்தில் என்ன செய்துகொண்டிருக்கிறார்?
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్