english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. உங்கள் வழிகாட்டி யார் - |
అనుదిన మన్నా

உங்கள் வழிகாட்டி யார் - |

Wednesday, 29th of January 2025
0 0 329
Categories : வழிகாட்டி (Mentor)
“கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே; கிறிஸ்து இயேசுவுக்குள் சுவிசேஷத்தினால் நான் உங்களைப் பெற்றேன். ஆகையால், என்னைப் பின்பற்றுகிறவர்களாகுங்களென்று உங்களுக்குப் புத்தி சொல்லுகிறேன்.”
(1 கொரிந்தியர்‬ ‭4‬:‭15‬-‭16‬) ‭

சில பெரிய வேதாகம ஹீரோக்களின் வெற்றியின் ரகசியங்களில் ஒன்று வழிகாட்டிகளைக் கொண்டிருப்பது. நீங்கள் பின்பற்றக்கூடி, கற்றுக்கொள்ளக்கூடிய வழிகாட்டி உங்களிடம் உள்ளதா? இல்லையென்றால், கொரிந்தியர்களுக்கு பவுல் செய்தது போல், உங்களுக்காக இந்த பாத்திரத்தை நிரப்ப ஒரு நபரை ஜெபத்துடன் தேடுங்கள். நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் வளர வேண்டுமானால், நீங்கள் புறக்கணிக்க முடியாத ஒரு கொள்கை இது.

வேதத்தில் வழிகாட்டுதலின் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

எடுத்துக்காட்டு #1
யோசுவா எப்போதும் மோசேயோடுக் கூடவே இருந்தார், தேவ மனிதனாகிய மோசேயைச் சுற்றியே இருந்தார்.

“ஒருவன் தன் சிநேகிதனோடே பேசுவதுபோல, கர்த்தர் மோசேயோடே முகமுகமாய்ப் பேசினார்; பின்பு, அவன் பாளையத்துக்குத் திரும்பினான்; நூனின் குமாரனாகிய யோசுவா என்னும் அவனுடைய பணிவிடைக்காரனாகிய வாலிபன் ஆசரிப்புக் கூடாரத்தை விட்டுப் பிரியாதிருந்தான்.” (‭‭யாத்திராகமம்‬ ‭33‬:‭11‬)

கர்த்தர் மோசேயுடன் பேசும் போது யோசுவா உடனிருந்தார் என்ற உண்மையை மிக சுருக்கமானது நுட்பமானது ஆனால் முக்கியமான குறிப்பு இது, ஆனால் அதைவிட முக்கியமாக, மோசே வெளியேறியபோதும் கூட யோசுவா கூடாரத்தை விட்டு வெளியேறவில்லை. மோசேயின் ஜெப வாழ்க்கையிலிருந்து தேவனோடு நெருக்கத்தைக் கற்றுக்கொண்டார். மோசே தேவனை சந்திக்க மலைக்குச் சென்றபோது, ​​யோசுவா அவரைப் பின்தொடர்ந்தார். (யாத்திராகமம் 24:13)

இந்த ஜோசுவா மோசே தீர்க்கதரிசியின் வாழ்க்கையையும், தேவனுடனான உறவையும், அவருடைய வாழ்க்கையையும் மிகவும் கவனமாகப் பின்பற்றினார். பிறகு, ஒரு நாள், இந்த மனிதன் இஸ்ரவேலர்களை வாக்களிக்கப்பட்ட கானானுக்கு அழைத்துச் சென்றார்.

எடுத்துக்காட்டு #2
எலிசா ஒரு விவசாயி. எலியா முதன்முறையாக எலிசாவைச் சந்தித்தபோது, ​​பன்னிரண்டு ஏர்புட்டி உழுத சாப்பாத்தின் குமாரனாகியஎலிசாவை  கண்டார். (1 இராஜாக்கள் 19:19) அவருடைய தகப்பன் ஒரு பணக்காரர். ஒரு நாள் எலியா வந்து எலிசாவின் மேல் தன் மேலங்கியை வீசினார், அன்று முதல் எலிசா உண்மையாக எலியாவைப் பின்தொடர்ந்தான். அந்த நாட்களில் பல தீர்க்கதரிசிகள் இருந்தனர், ஆனால் எலிசா என்ற இந்த மனிதர் தனது வழிகாட்டியைப் பின்தொடர்ந்தார். இன்று வெகு சிலரே இதைச் செய்வதைப் பார்க்கிறேன்.

இன்று, பலர் இன்ஸ்டாகிராமில் ஒரு புகைப்படத்தை இடுகையிடுவதற்காக மட்டுமே தேவமனுஷரிடம் நெருங்கி பழக விரும்புகிறார்கள். தேவ மனிதனிடமிருந்து கற்றுக் கொள்வதில் அவர்களுக்கு முற்றிலும் விருப்பமில்லை. தேவ மனிதன் சுமக்கும் அபிஷேகத்தைப் பற்றி அவர்கள் உண்மையில் கவலைப்படுவதில்லை. அவர்கள் தங்கள் ஜெப விண்ணப்பங்களுக்கு பதிலளிக்க மட்டுமே அபிஷேகத்தை பயன்படுத்த விரும்புகிறார்கள்.

“எலியா எலிசாவை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னைப் பெத்தேல்மட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு எலிசா: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தரின் ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் பெத்தேலுக்குப் போனார்கள்.

அப்பொழுது பெத்தேலிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்றார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான். 

பின்பு எலியா அவனை நோக்கி: எலிசாவே, நீ இங்கே இரு; கர்த்தர் என்னை எரிகோமட்டும் போக அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே அவர்கள் எரிகோவுக்கு வந்தார்கள். 

எரிகோவிலிருந்த தீர்க்கதரிசிகளின் புத்திரர் எலிசாவினிடத்தில் வந்து: இன்றைக்குக் கர்த்தர் உனக்குத் தலைமையாயிருக்கிற உன் எஜமானை உன்னைவிட்டு எடுத்துக்கொள்வார் என்பது உனக்குத் தெரியுமா என்று அவனைக் கேட்டார்கள். அதற்கு அவன்: எனக்குத் தெரியும், சும்மா இருங்கள் என்றான்.

பின்பு எலியா அவனை நோக்கி: நீ இங்கே இரு; கர்த்தர் என்னை யோர்தானுக்கு அனுப்புகிறார் என்றான். அதற்கு அவன்: நான் உம்மை விடுகிறதில்லை என்று கர்த்தருடைய ஜீவனையும் உம்முடைய ஜீவனையும் கொண்டு சொல்லுகிறேன் என்றான்; அப்படியே இருவரும் போனார்கள்.” (2 இராஜாக்கள்‬ ‭2‬:‭2‬-‭6‬) ‭

இங்கே குறிப்பிடப்பட்ட நான்கு இடங்கள் ஒவ்வொன்றும் (கில்கால், பெத்தேல், எரிகோ மற்றும் யோர்தான்) இஸ்ரேலின் வரலாற்றில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை, மேலும் அவை கிறிஸ்தவ வாழ்க்கைப் பயணத்தின் நிலைகளுக்கு மிகவும் அடையாளமாக இருப்பதாக நான் நம்புகிறேன். கில்கால் மாம்சத்துடன் இடைபடும் இடம். (யோசுவா 4:19-24). பெத்தேல் நாம் உலகத்தை வெல்வதைப் பற்றி பேசுகிறது, ஏனென்றால் வேதத்தில் எகிப்து உலகத்தை குறிக்கிறது. எரிகோ ஆவிக்குரிய யுத்தத்தின் இடம். பல கிறிஸ்தவர்கள் ஆவிக்குரிய யுத்தத்தை விரும்புவதில்லை, ஏனெனில் அது கோருகிறது, எனவே அவர்கள் எளிதான வழியை எடுத்துக்கொள்கிறார்கள். தங்களுக்காக ஜெபிக்கும்படி தேவ மனிதரிடம் கேட்கிறார்கள்.

“அப்பொழுது யோசபாத்: நாம் கர்த்தரிடத்தில் விசாரிக்கும்படி கர்த்தருடைய தீர்க்கதரிசி ஒருவரும் இங்கே இல்லையா என்று கேட்டதற்கு, எலியாவின் கைகளுக்குத் தண்ணீர் வார்த்த சாப்பாத்தின் குமாரனாகிய எலிசா இங்கே இருக்கிறான் என்று இஸ்ரவேல் ராஜாவின் ஊழியக்காரரில் ஒருவன் மறுமொழியாகச் சொன்னான்.”
(‭‭2 இராஜாக்கள்‬ ‭3‬:‭11‬)

நீங்கள் உண்மையாக பதிலளிக்க வேண்டிய சில கேள்விகள் உள்ளன:
1. யாரிடம் இருந்து கற்றுக்கொள்கிறீர்கள்?
2. நீங்கள் யாரைப் பின்பற்றுகிறீர்கள்?
3. உங்கள் வழிகாட்டி யார்?

Bible Reading: Exodus 30-32

ప్రార్థన
பிதாவே, என் வாழ்க்கையில் ஒரு வழிகாட்டியின் முக்கியத்துவத்தைப் பார்க்க என் கண்களைத் திறந்தருளும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● நாள் 32 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● உங்கள் வாழ்க்கையில் நீடித்த மாற்றங்களை எவ்வாறு கொண்டு வருவது -1
● கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வீட்டைக் கட்டுதல்
● உங்கள் போராட்டம் உங்கள் அடையாளமாகி விடாதீர்கள் -2
● நீங்கள் ஆவிக்குரிய ரீதியில் தகுதியுள்ளவரா?
● மூடப்படாத சாத்தியம்: பயன்படுத்தப்படாத ஈவுகளின் ஆபத்து
● அன்பைத் தேடி 
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్