english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. மறுரூபத்திற்கான சாத்தியம்
అనుదిన మన్నా

மறுரூபத்திற்கான சாத்தியம்

Friday, 31st of January 2025
1 0 395
Categories : எஸ்தரின் ரகசியங்கள்: தொடர் (Secrets Of Esther: Series) மாற்றம்(transformation)
“நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியிலே காண்கிறதுபோலக்கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்துமறுரூபப்படுகிறோம்.” (2 கொரிந்தியர்‬ 3‬:18‬)
 
மறுரூபம் என்பது நாம்பண்பு, தோற்றம் அல்லது வடிவத்தில்
ஏற்படும் வெளிப்படையானமாற்றம். உண்மையில், ஒவ்வொரு
வரும் மறுரூபத்தின்கதைகளை விரும்புகிறார்கள். நாம் அனைவரும் தற்போது இருப்பதை விட வசதியான ஒருவராக இருக்க விரும்புகிறோம். நாம் தாழ்மையின் சிந்தையிலே நாம் அடுத்து இப்படியான ஒரு நபரை இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது.

இந்த விசித்திரக் கதை மறுரூபங்களில் மிகவும் சுவாரஸ்யமானது எஸ்தரின் வாழ்க்கையில் காணப்படுகிறது. எஸ்தரின் ஓர் அழகுப் போட்டியில் வென்று,அதற்கு பாரசீக ராஜாவின் அரண்மனைக்குள் நுழையும் இளம் அனாதை யூத விவசாயப் பெண்ணின் உண்மைக் கதை. பின்னர்அவள் எல்லா சவால்களும் எதிராக ராணியாக மாற ராஜாவின் இதயத்தை வென்று இறுதியில் தன் தேசமான இஸ்ரவேலை அழிவிலிருந்து காப்பாற்றுகிறாள்.
 
தேவனுடனான நெருக்கம் மற்றும் சரியான தேர்வுகள் மூலம் நம் வாழ்நாள் முழுவதும் மாற்றத்தின்மீதான ஈர்ப்பு இன்றும் சாத்தியமாகும் என்பதை எஸ்தரின் சரித்திரத்தின் மூலம் அறியலாம். இன்றையஎங்கள் உரை "நாம் அனைவரும்" என்ற
சொற்றொடருடன் தொடங்குகிறது.
 
மறுரூபத்திலிருந்துயாரும் விலக்கப்படவில்லை என்பதை
இது குறிக்கிறது. உண்மையில், நாம் மகிமையிலிருந்துமகிமைஅடைந்துகொண்டே இருக்க வேண்டும் என்றுதேவன் விரும்பகிறார். நாம் பூமியில் அவருடையபண்புகளை பிரதிபலிக்க வேண்டும் என்றும் தேவன் விரும்புகிறார்.
 
நீங்கள் தற்போது எந்த நிலையில் இருக்கிறீர்கள்? உங்கள் குடும்பத்திற்கு என்ன காரியம் உள்ளன? உங்கள் வாழ்க்கையைச் சுற்றி உங்களுக்கு என்ன வரம்புகள் உள்ளன? உங்கள்வாழ்க்கையில் நல்லது எதுவும் தொடர முடியாது என்று யார் சொன்னது? நீங்கள்
எப்போதும் ஆதரவற்றவர்களாகவும் அழகற்றவராகவும் இருப்பீர்கள் என்று யார் கூறுகிறார்கள்? நான் உங்களுக்கு ஒரு நற்செய்தி உள்ளது; நீங்கள் தூசியிலிருந்து உச்சிக்கு மாறுவதைக் காண தேவன் விரும்புகிறார். சங்கீதம் 113:7-8-ல், "அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார் அவனைப் பிரபுக்களோடும், தமது ஜனத்தின் அதிபதிகளோடும் உட்காரப்பண்ணுகிறார்.”
 
இப்போது, ​​எஸ்தர் திடீரென்று பெர்சியாவின் ராணியாக உயர்த்தப்படுவதற்கு நீண்ட காலத்திற்குமுன்பே, வஸ்திஎன்ற மற்றொரு ராணி கிருபையிலிருந்து விழுந்தாள். வேதம் சொல்கிறது, “ஏழாம் நாளிலே ராஜா திராட்சரசத்தினால் களிப்பாயிருக்கும்போது, மகா ரூபவதியாயிருந்த ராஜஸ்திரீயாகிய வஸ்தியின் செளந்தரியத்தை ஜனங்களுக்கும் பிரபுக்களுக்கும் காண்பிக்கும்படி, ராஜகிரீடம் தரிக்கப்பட்டவளாக, அவளை ராஜாவுக்கு முன்பாக அழைத்துவரவேண்டுமென்று, ராஜாவாகிய அகாஸ்வேருவின் சமுகத்தில் சேவிக்கிற மெகுமான், பிஸ்தா, அற்போனா, பிக்தா, அபக்தா, சேதார், கர்காஸ் என்னும் ஏழு பிரதானிகளுக்கும் கட்டளையிட்டான். ஆனாலும் பிரதானிகள் மூலமாய் ராஜா சொல்லியனுப்பின கட்டளைக்கு ராஜஸ்திரீயாகிய வஸ்தி வரமாட்டேன் என்றாள்; அப்பொழுது ராஜா கடுங்கோபமடைந்து, தனக்குள்ளே மூர்க்கவெறிகொண்டான்.”
(எஸ்தர்‬ 1‬:10‬-12‬)
 
அரசி வஸ்தி ஏன் அரசனின் கட்டளைக்கு கீழ்ப்படிய மறுத்தார் என்பது யாருக்கும் தெரியாது. அவளுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பதும் எங்களுக்குத் தெரியாது. சில வேத வல்லுனர்கள், ராணி வஸ்தி பதவி இறக்கம் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார் அல்லதுஅரண்மனையின் பெண்கள் பகுதியில் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க அனுமதிக்கப்பட்டார்என்று கூறுகிறார்கள். ராஜாவின் கட்டளையை அவள் மறுத்ததால் அவள் தூக்கிலிடப்பட்டாள் என்றுசிலர் நம்புகிறார்கள்.
 
நம்மில் அநேகர் சிறந்த வாழ்க்கை பற்றி கனவு காண்கிறோம். தற்போது நாம் செய்வதை விடசிறப்பாக செய்ய விரும்புகிறோம். இருப்பினும், நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நமக்கும் உலகவாழ்க்கை வாழ்பவர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளைப் பார்ப்பதில் அடிக்கடிசிரமப்படுகிறார்கள். உலகத் தரத்தைப் பின்பற்றி நாம் சிறப்பாக இருக்க விரும்புகிறோம். துரதிர்ஷ்டவசமாக, அவைகள் கேலிக்கூத்தாக முடிகிறது.
 
இன்று ஏன் தேவனிடம் அண்டிக் கொள்ள கூடாது? உண்மை என்னவென்றால்,தேவனுடைய வார்த்தையிலிருந்து வரும்ஒரு வெளிப்பாடு மட்டுமே நம் வாழ்க்கையில் ஒரு எழுப்புதலை உருவாக்க முடியும். எஸ்தர் புத்தகத்தில் உள்ள உண்மைகள் உங்களால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத அளவிற்கு உங்கள் வாழ்க்கையை புரட்டிப் போடும். எஸ்தர் தேவனுக்கு முன்பாக தனதுநிலைப்பாட்டை நிலைநிறுத்தினாள், மேலும் அவள் மாற்றத்தின் தருணத்தை தவறவிடவில்லை. இதுஉங்கள் தருணம் தேவனை அண்டி கொள்ளுங்கள்.

Bible Reading: Exodus 36-38
ఒప్పుకోలు
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இன்று எனக்கான இந்த வார்த்தைக்கு நன்றி. என் வாழ்க்கைமகிமையிலிருந்து மகிமைக்கு முன்னேரவேண்டும் என்று நீர் விரும்புவதால் நான் உமக்கு நன்றி கூறுகிறேன். என்னை விடுவிக்கும் உமது வார்த்தையின் சத்தியத்தின் மீது நிலைத்திருக்க எனக்குஉதவுமாறு வேண்டிக்கொள்கிறேன். இந்த ஆண்டு என் வாழ்க்கை ஒரு உண்மையான மாற்றத்தை அனுபவிக்கும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.

Join our WhatsApp Channel


Most Read
● ஜெபம்யின்மையின் பாவம்
● வெற்றிக்கான சோதனை
● ஆவிக்குரிய கதவை முடுதல்
● நமது ஆவிக்குரிய வாளை காத்தல்
● கசப்பின் வாதை
● செல்வாக்கின் பெரிய பகுதிகளுக்கான பாதை
● ஆவியின் கனியை எவ்வாறு வளர்ப்பது -2
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్