english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. ஜெபத்தின் நறுமணம்
అనుదిన మన్నా

ஜெபத்தின் நறுமணம்

Saturday, 8th of February 2025
0 0 351
Categories : எஸ்தரின் ரகசியங்கள்: தொடர் (Secrets Of Esther: Series) பிரார்த்தனை (Prayer)
சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். லூக்கா 18:1

எஸ்தரின் ஆயத்தத்தின் முதல் ஆறு மாதங்கள், சுத்திகரிப்பு மற்றும் அனைத்து மாசுபடுத்தும் முகவர்களையும் உள்ளேயும் வெளியேயும் நீக்குவதைப் பற்றி பேசுகின்றன. தொடர்ந்து குளிப்பதும், எண்ணெய் பூசுவதும் சருமத்தை சுத்தப்படுத்தி, சுத்திகரித்து, மென்மையாக்குகிறது. இது நறுமணத்தையும் ஆழமாகப் பதித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், எஸ்தர் உண்மையில் நறுமணத்தை "கசிந்தார்". எஸ்தர் ஒரு இடத்திற்குள் நுழைவதற்கு முன்பு, அவள் வடிந்த நறுமணம் அவளது வருகையை அறிவித்தது, அவள் உடல் ரீதியாக ஒரு இடத்தை விட்டு வெளியேறியபோதும், அவளது நறுமணம் அந்த இடத்தில் நிலைத்திருந்தது என்றும் நான் நம்புகிறேன்.

இது பழையமனிதனை களைவதையும், கறைகளை நீக்குவதையும், உள் இடைவெளிகளை சுத்தப்படுத்துவதையும், பழைய நடைமுறைகள், பழக்கவழக்கங்கள், மனநிலைகள் மற்றும் வரம்புகளிலிருந்து விலகிச் செல்வதையும் தெளிவாகச் சித்தரிக்கிறது என்று நான் நம்புகிறேன். இது ராஜாதி ராஜாவுக்கு முன் தோன்றுவதற்கான aayatham, சுத்திகரிப்பு, பரிசுத்தம் பற்றி பேசுகிறது.

நாம் தேவனுடைய பிரசன்னத்தில் நிலைத்திருக்க விரும்பினால், நாம் எப்பொழுதும் ஜெப மனப்பான்மையில் இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். வேதம் 1 தெசலோனிக்கேயர் 5:16-18ல் கூறுகிறது, ”எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள். இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். எல்லாவற்றிலேயும் ஸ்தோத்திரஞ் செய்யுங்கள்; அப்படிச் செய்வதே கிறிஸ்து இயேசுவுக்குள் உங்களைக் குறித்து தேவனுடைய சித்தமாயிருக்கிறது.”

ஜெபம் என்பது நமது மூச்சாய் இருக்க வேண்டும். தேவனுடன் தொடர்பு கொள்ளாமல் மணிநேரங்கள், நாட்கள் அல்லது வாரங்கள் செல்லக்கூடாது. எங்கும், எல்லா நேரங்களிலும் ஜெபிப்பதன் மூலம் நாம் அவருடைய பிரசன்னத்தை நெருங்க வேண்டும்.

எஸ்தரைப் பற்றி நமக்கு அதிகம் தெரியாது, ஆனால் அவள் ஜெபத்திற்கென்று அர்ப்பணிக்கப்பட்ட பெண் என்று சொல்லலாம். எஸ்தர் 3:12-13ல் வேதம் சொல்கிறது, “முதலாம் மாதம் பதின்மூன்றாந் தேதியிலே, ராஜாவின் சம்பிரதிகள் அழைக்கப்பட்டார்கள்; ஆமான் கற்பித்தபடியெல்லாம் ராஜாவின் தேசாதிபதிகளுக்கும், ஒவ்வொரு நாட்டின்மேல் வைக்கப்பட்டிருந்த துரைகளுக்கும், ஒவ்வொரு ஜனத்தின் பிரபுக்களுக்கும், அந்தந்த நாட்டில் வழங்கும் அட்சரத்திலும், அந்தந்த ஜாதியார் பேசும் பாஷையிலும் எழுதப்பட்டது; ராஜாவாகிய அகாஸ்வேருவின்பேரால் அது எழுதப்பட்டு, ராஜாவின் மோதிரத்தினால் முத்திரை போடப்பட்டது. ஆதார் மாதமான பன்னிரண்டாம் மாதம் பதின்மூன்றாந்தேதியாகிய ஒரேநாளிலே சிறியோர் பெரியோர் குழந்தைகள் ஸ்திரீகள் ஆகிய சகல யூதரையும் அழித்துக் கொன்று நிர்மூலமாக்கவும், அவர்களைக் கொள்ளையிடவும், அஞ்சற்காரர் கையிலே ராஜாவின் நாடுகளுக்கெல்லாம் கட்டளைகள் அனுப்பப்பட்டது.”

இந்த வசனங்களில், எஸ்தரின் ஜனங்களுக்கு எதிராக ஒரு ஆணை பிறப்பிக்கப்பட்டதையும், அவர்களுடைய அழிவுக்கு ராஜா ஒப்புதல் அளித்ததையும் நாம் காண்கிறோம். இது முழு தேசத்தின் முடிவாக இருக்க வேண்டும், ஆனால் நிலுவையில் உள்ள இந்த துரதிர்ஷ்டவசமான பேரழிவுக்கு எஸ்தரின் பிரதிபலன் என்ன? எஸ்தர் 4:16-17ல் வேதம் சொல்கிறது, “நீர் போய், சூசானில் இருக்கிற யூதரையெல்லாம் கூடிவரச்செய்து, மூன்றுநாள் அல்லும் பகலும் புசியாமலும் குடியாமலுமிருந்து, எனக்காக உபவாசம்பண்ணுங்கள்; நானும் என் தாதிமாரும் உபவாசம்பண்ணுவோம்; இவ்விதமாக சட்டத்தை மீறி, ராஜாவினிடத்தில் பிரவேசிப்பேன்; நான் செத்தாலும் சாகிறேன் என்று சொல்லச்சொன்னாள். அப்பொழுது மொர்தெகாய் புறப்பட்டுப்போய், எஸ்தர் தனக்குக் கற்பித்தபடியெல்லாம் செய்தான்.”

அவள் கலங்கவில்லை; மாறாக, அவள் ஜெபங்களில் தேவனின் பிரசன்னத்திற்கு திரும்பினாள். ராஜாவால் மட்டுமே தீர்ப்பை மாற்ற முடியும் என்பதை அவள் அறிந்திருந்தாள், ஆனால் ராஜாவிடம் மனு கொடுப்பதற்கு முன், அவள் முதலில் ராஜாதி ராஜாவிடம் சென்றாள். உபவாசித்து ஜெபித்த பிறகு, பாரசீக மன்னரால் எதிர்க்க முடியாத ஜெபத்தை நறுமணத்தை அவள் நனைந்திருந்தாள், தீர்ப்பு மாறியது.

ஆரம்பத்தில் ஜெபங்களை பற்றி அவளுக்கும் இந்த மனநிலை இருந்தது என்று நான் நம்புகிறேன். உடல் நறுமணம் அதன் வரம்பைக் கொண்டுள்ளது, ஆனால் ஜெபத்தின் நறுமணம் மாற்றுகிறது என்பதை அவள் அறிந்திருந்ததால். அவள் ஜெபத்தில் அதிகமான நேரத்தை செலவிட்டிருக்க வேண்டும். எனவே, நமது உள்ளான மனிதனில் தாக்கம் ஏற்படுத்தும் வரை நாம் ஜெபத்தை சுவாசிக்க வேண்டும். இந்த செயல்முறையானது கறைகளை அகற்றி, நமது கடினமான அணுகுமுறைகளை இலகுவாக தொடங்குகிறது.

வேறு வார்த்தைகளில் கூறவேண்டுமானால், ஜெபங்கள் காரியங்களை மட்டும் மாற்றுவதில்லை; அவைகள் நம்மை உள்ளிருந்து வெளியே மாற்றி, ராஜாவுக்கு முன்பாக நிற்கத் தகுதியுள்ளவர்களாக மாற்றுகிறது. எனவே, இந்த ஆண்டு, ஒவ்வொரு நாளும், ஒரு குறிப்பிட்ட ஜெப நேரத்தை ஒதுக்கி, ஜெபத்தை ஒரு வாழ்க்கை முறையாக மாற்றிக்கொள்ளுங்கள். தேவனுடன் தொடர்ந்து ஐக்கியம் கொள்ளுங்கள்.

Bible Reading: Leviticus 16-17
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், ஜெப ஆவியினாலும் விண்ணப்பத்தின் ஆவியினாலும் நிரம்பியிருக்கும்படி ஜெபிக்கிறேன். ஒவ்வொரு குறைபாடுகளிலிருந்தும் என்னைக் குணப்படுத்தி, என் ஜெப வாழ்க்கையை மேம்படுத்தும். இனிமேல் என் வாழ்க்கை ஜெபத்தின் நறுமணத்தால் நனைக்கப்பட வேண்டும் என்று நான் கட்டளையிடுகிறேன். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● இரண்டு முறை மரிக்க வேண்டாம்
● உங்கள் ஜெப வாழ்க்கையை பெலப்படுத்த நடைமுறை குறிப்புகள்
● உங்கள் விடுதலையை இனி நிறுத்த முடியாது
● நாள் 29:40 நாட்கள் உபவாச ஜெபம்
● விசுவாசத்தால் பெறுதல்
● நீங்கள் அவர்களை பாதிக்க வேண்டும்
● பிறப்பதற்கான சிறிய விஷயங்கள் பெரிய நோக்கங்கள்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్