english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 2
అనుదిన మన్నా

உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 2

Monday, 24th of March 2025
0 0 247
Categories : Atmosphere Deliverance Home
“ஜெபவேளையாகிய ஒன்பதாம்மணி நேரத்திலே பேதுருவும் யோவானும் தேவாலயத்துக்குப் போனார்கள்.” அப்போஸ்தலர் 3:1
 
உங்கள் வீட்டின் சூழ்நிலையை மாற்ற விரும்பினால் நீங்கள் ஈடுபட வேண்டிய மற்றொரு திறவுகோல் ஜெபம். எந்தவொரு வீட்டிற்கும் ஜெபம் முக்கியமானது. ஜெபம் இல்லாத கிறிஸ்தவர் பலமற்ற கிறிஸ்தவர் என்று அடிக்கடி கூறப்படுகிறது. தேவனுக்கும் மனிதனுக்கும் இடையே தொடர்பு கொள்ளும் ஊடகமாக ஜெபத்தை தேவன் நியமித்துள்ளார். தேவனுடைய குமாரனாகிய இயேசு, ஜெபிக்க மட்டும் நமக்குக் கற்பிக்கவில்லை, ஆனால் அவரே நமக்கொரு உதாரணமாக இருக்கிறார். மத்தேயு 6:6ல் வேதம் சொல்கிறது. நீயோ ஜெபம்பண்ணும்போது, உன் அறைவீட்டுக்குள் பிரவேசித்து, உன் கதவைப் பூட்டி, அந்தரங்கத்திலிருக்கிற உன் பிதாவை நோக்கி ஜெபம்பண்ணு; அப்பொழுது, அந்தரங்கத்தில் பார்க்கிற உன் பிதா வெளியரங்கமாய் உனக்குப் பலனளிப்பார்.

மாற்கு 1:35ல் இயேசுவைப் பற்றி வேதம் கூறுகிறது, அவர் அதிகாலையில், இருட்டோடே எழுந்து புறப்பட்டு, வனாந்தரமான ஓரிடத்திற்குப்போய், அங்கே ஜெபம்பண்ணினார். மேலும், லூக்கா 5:16ல், அவரோ வனாந்தரத்தில் தனித்துப் போய், ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தார். அவருடைய ஊழியம் ஜெபங்களால் நிரம்பியிருந்தது; அதின் விளைவுகளை கண்டு ஜனங்கள் ஆச்சரியப்பட்டதில் ஆச்சரியம் இல்லை. 
 
நம் வீட்டிலுள்ள சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்றால், இயேசுவைப் போலவே, நாமும் உற்சாகமான ஜெப பலிபீடத்தைக் கொண்டிருக்க வேண்டும். லூக்கா 18:1ல் இயேசு சொன்னார், சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும் என்பதைக்குறித்து அவர்களுக்கு அவர் ஒரு உவமையைச் சொன்னார். 

எனவே, நாம் ஜெபத்திற்கு ஒரு இடத்தையும் நேரத்தையும் வைத்திருக்க வேண்டும். ஜெபத்தை வெறும் வாய்ப்பாக விட்டுவிடாதீர்கள். நாம் ஒரு குடும்பமாக ஜெபிக்கும் நேரம் இருக்க வேண்டும். ஜெப நேரங்களில் சீஷர்கள் ஜெப ஆலயங்களுக்கு சென்றனர். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நீங்கள் தூண்டுதலின் பேரில் ஜெபிக்காதீர்கள், ஆனால் ஜெபங்களில் நாம் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்பதை அவர்கள் இயேசுவிடமிருந்து கற்றுக்கொண்டார்கள், மேலும் நாம் ஜெபிக்க ஒரு நேரத்தை அமைக்கும்போது அது சாத்தியமாகும்.
 
உங்கள் வீட்டில் உங்கள் தேவனிடம் பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு நீங்கள் உதவியாளர் அல்ல, ஆனால் தேவன் மட்டும் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தேவனிடமிருந்து விலக்கி வைக்கின்றனர். அவர்கள் தங்கள் இருதயத்தை தேவனிடம் திருப்பவில்லை, ஆனால் தங்களைத் தாங்களே பார்க்கிறார்கள். எனவே அவர்களுக்கு ஒரு தேவை இருக்கும்போது, ஆம், அவர்கள் உங்களிடம் வருகிறார்கள், ஆனால் தேவன் தான் நம் தேவைகளை சந்திப்பவர் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நீங்கள் ஒரு கருவி மட்டுமே என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். உங்களால் அவர்களுக்கு உதவ முடியாத சூழ்நிலையில் அவர்கள் தங்களைக் கண்டால், தேவனிடம் எப்படி திரும்புவது என்று அவர்களுக்குத் தெரியும்.

ஊக்கமான ஜெபத்தில் அசுத்த ஆவிகள் மற்றும் சத்துருவின் கிரியைகளிலிருந்து நம் இல்லங்களை விலக்கி வைக்க உதவுகிறது. நம் பிள்ளைகள் தங்கள் மீது குறிவைக்கப்படும் எதிரிகளின் எந்தவொரு தாக்குதலையும் வெல்ல ஜெப பீடத்தில் அதிகாரம் பெறுகின்றனர். வீட்டில் ஜெபிப்பதின் மூலம், உங்கள் வீட்டை அந்தகார சக்திகள் ஆளுகை செய்யமுடியாத பகுதியாக மாற்றுகிறீர்கள். நீங்கள் பிசாசுக்கும் அவனுடைய ஆட்களுக்கும் எதிராக நிரந்தரமாக கதவை மூடிவிட்டீர்கள்.
 
உங்கள் வீட்டில் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் அனுபவிக்க விரும்பினால் இது மிகவும் முக்கியமானது. எபிரேயர் 9:14ல் வேதம் சொல்கிறது, நித்திய ஆவியினாலே தம்மைத்தாமே பழுதற்ற பலியாக தேவனுக்கு ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவினுடைய இரத்தம் ஜீவனுள்ள தேவனுக்கு ஊழியஞ்செய்வதற்கு உங்கள் மனச்சாட்சியைச் செத்த கிரியைகளறச் சுத்திகரிப்பது எவ்வளவு நிச்சயம்! ஜெபத்தின் மற்றொரு முக்கியத்துவம் என்னவென்றால், ஒவ்வொரு கொடிய பழக்கத்தையும் ஜெபத்தின் மூலம் சிலுவையில் அறைகிறோம்.
 
நம் பிள்ளைகளின் ஒவ்வொரு அடிமைத்தனத்தையும் அழிக்க இயேசுவின் இரத்தத்தை ஜெபத்தில் செயல்படுத்துகிறோம். சில பெற்றோர்கள் மறுவாழ்வுக்காகவோ அல்லது ஆலோசகருக்காகவோ காத்திருக்கிறார்கள். இந்த கடைசி நாட்களில் நீங்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டுமானால், எப்போதும் ஜெபியுங்கள், குடும்பமாக இடைவிடாமல் ஜெபியுங்கள்.

Bible Reading: Judges 6-7 

ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், ஜெபிப்பதற்கான அழைப்புக்கு என் கண்களைத் திறந்ததற்கு நன்றி. என் இருதயத்தை சத்தியத்தால் நிரப்பும்படி ஜெபிக்கிறேன். ஜெபத்தில் பலவீனமாக இருக்காமல், ஆவியில் உக்கமாக இருக்க கிருபை தரும்படி ஜெபிக்கிறேன். இனி, நான் சோம்பேறியாக இருக்க மாட்டேன், எங்கள் பலிபீடத்தின் மீது அக்கினி எரிந்துகொண்டே இருக்கும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.

Join our WhatsApp Channel


Most Read
● விதையின் வல்லமை - 2
● ஞானமடையுங்கள்
● அவதூறான பாவத்திற்கு அற்புதமான கிருபை தேவை
● நிலைத்தன்மையின் வல்லமை
● ஒவ்வொரு நாளும் புத்திமானாய் வளர்வது எப்படி
● வித்தியாசம் தெளிவாக உள்ளது
● யுத்தத்திற்கான பயிற்சி
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్