english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. வாழ்க்கையின் பெரிய பாறைகளை அடையாளம் கண்டு முன்னுரிமை அளித்தல்
అనుదిన మన్నా

வாழ்க்கையின் பெரிய பாறைகளை அடையாளம் கண்டு முன்னுரிமை அளித்தல்

Monday, 7th of April 2025
0 0 311
நேர மேலாண்மை வல்லுநர்கள் தனிநபர்கள் தங்கள் வாழ்க்கைக்கு முன்னுரிமை அளிக்க ' கற்சாடியில் பெரிய கற்கள்' என்ற கருத்தை அடிக்கடி பயன்படுத்துகின்றனர். இந்த யோசனை ஒரு தத்துவ ஆசிரியரால் நிரூபிக்கப்பட்டுள்ளது, அவர் தனது வகுப்பிற்கு கற்பிக்க கண்ணாடி குடுவையைப் பயன்படுத்துகிறார். ஜாடியில் பெரிய பாறைகளை நிரப்ப ஆரம்பித்து, ஜாடி நிரம்பியதா என்று வகுப்பினரிடம் கேட்ப்பார். அவர்கள் ஒப்புக்கொண்டாலும், அது இல்லை என்று ஆசிரியர் விளக்குவார். பின்னர் அவர் ஜாடியில் கூழாங்கற்களைச் சேர்த்து அதை குலுக்கி, பெரிய பாறைகளுக்கு இடையில் உள்ள இடைவெளிகளை நிரப்ப அனுமதித்து, அது நிரம்பியதா என்று மீண்டும் கேட்ப்பார். அது இப்போது நிரம்பிவிட்டது என்று வகுப்பினர் ஒப்புக்கொள்வார்கள், ஆனால் அது இல்லை என்று ஆசிரியர் கூறுவார். அடுத்து, அவர் ஜாடியில் மணலைச் சேர்த்து, விளிம்பு வரை நிரப்பி, அது நிரம்பியதா என்று மீண்டும் கேட்ப்பார். மீண்டும், மாணவர்கள் பதிலளிக்க தயங்குவார். இறுதியாக, ஆசிரியர் ஜாடியில் தண்ணீரை ஊற்றி, அதை முழுவதுமாக நிரப்பி, அது இப்போது நிரம்பிவிட்டதா என்று கேட்ப்பார்.
 
கண்ணாடி குடுவையின் விளக்கப்படம் வாழ்க்கையில் முன்னுரிமை அளிப்பது பற்றிய மதிப்புமிக்க பாடத்தை கற்பிக்கிறது. குடுவையை முதலில் சிறிய பொருட்களைக் கொண்டு நிரப்பினால், பெரிய பாறைகள் பொருத்துவதற்கு போதுமான இடம் இருக்காது. எனவே, வாழ்க்கையில் பெரிய, அத்தியாவசியமான விஷயங்களுக்கு முன்னுரிமை கொடுப்பதன் முக்கியத்துவத்தை கதை எடுத்துக்காட்டுகிறது. சிறிய விஷயங்களுக்கு அவற்றின் இடம் இருந்தாலும், அவற்றால் நம் வாழ்க்கையை அதிகமாக நிரப்புவது, நாம் அடைய வேண்டிய முக்கியமான விஷயங்களுக்கு இடமளிக்காது. எனவே, சிறிய விஷயங்களைச் சமப்படுத்துவதும், வாழ்க்கையில் பெரிய விஷயங்களுக்கு முன்னுரிமை அளிப்பதும் நமது நேரத்தைச் சரியாகப் பயன்படுத்துவதும், நமது இலக்குகளை அடைவதும் முக்கியம்.
வாழ்க்கையில் எது முக்கியமானது என்பதை முன்னுரிமைப்படுத்த தீர்மானிப்பது அவசியம். பெரிய பாறைகள், நாம் செய்ய வேண்டிய அல்லது சொல்ல வேண்டிய விஷயங்கள், ஆரம்பத்தில் இருந்தே முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும். முக்கியமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிப்பது நமது இலக்குகளை அடைய உதவாது. இந்த கோட்பாடு நமது ஆவிக்குரிய வாழ்க்கைக்கும் பொருந்தும். ஜெபம், தேவனுடைய வார்த்தையை வாசிப்பது, ஆலய ஆராதனையில் கலந்துகொள்வது மற்றும் கிறிஸ்துவுக்கு சாட்சியாக இருப்பது போன்ற சில குறிப்பிடத்தக்க முன்னுரிமைகளை நிறைவேற்ற வேண்டும்.
 
இருப்பினும், அற்ப விஷயங்களால் நம் வாழ்க்கையை நிரப்புவது அத்தியாவசிய ஆவிக்குரிய நடவடிக்கைகளுக்கு இடமளிக்காது. எனவே, சமநிலையை நிலைநிறுத்துவது முக்கியம், மேலும் நல்ல விஷயங்கள் வாழ்க்கையின் சிறந்த விஷயங்களிலிருந்து நம்மைத் திசைதிருப்ப விடாது. வாழ்க்கையின் முக்கிய அம்சங்களுக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், நம் நேரத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, நம் நோக்கத்தை நிறைவேற்ற முடியும்.
 
2 தீமோத்தேயு 4:13 ல், தீமோத்தேயுவை  தாம் சிறையில் இருக்கும் போது தன்னை சந்திக்கும்படி பவுல் கேட்டுக்கொள்கிறார். அவரது வரம்புகளைக் கருத்தில் கொண்டு, பவுல் தனது விண்ணப்பத்தை மூன்று அத்தியாவசிய பொருட்களாகக் குறைக்க வேண்டியிருந்தது. துரோவா பட்டணத்திலிருக்கிற கார்ப்பு என்பவன் வசத்தில் தான் வைத்துவந்த மேலங்கியையும், புஸ்தகங்களையும், விசேஷமாய்த் தோற்சுருள்களையும், நீ வருகிறபோது எடுத்துக்கொண்டுவா என்று கேட்கிறார். அந்த புத்தகங்கள் மற்றும் தோற்சுருள் குறிப்பிட்ட உள்ளடக்கம் நமக்கு தெரியாது என்றாலும், பவுலின் வாழ்க்கையில் அந்த நேரத்தில் அவை முக்கியமானவை என்பதை நாம் அறிவோம். இந்த மூன்று பொருட்களும் அவர் சிறையில் இருந்தபோது அவரது ஜாடியில் இருந்த பெரிய பாறைகள்.
 
பவுலின் முன்னுரிமைகளைப் பற்றி நாம் சிந்திக்கும்போது, ​​நமது பெரிய பாறைகளை நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நம் வாழ்வில் நாம் முதன்மைப்படுத்த வேண்டிய முக்கியமான விஷயங்கள் எவை? அது நமது குடும்பம், உடல்நலம், தொழில், கல்வி, ஆவிக்குரிய வாழ்க்கை அல்லது வேறு எந்தப் பகுதியும் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் வாய்ந்த வாழ்க்கை யாக இருக்கலாம். நமது பெரிய பாறைகளை அடையாளம் கண்டு அவற்றை முதலில் நம் ஜாடியில் வைப்பதன் மூலம், நமது நேரத்தை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி நமது இலக்குகளை அடையலாம். நமது முன்னுரிமைகளைத் தீர்மானிப்பதும், நிறைவான வாழ்க்கையை வாழ்வதற்கு அத்தியாவசியமானவற்றில் கவனம் செலுத்துவதும் இன்றியமையாதது.

Bible Reading: 1 Samuel 17-19
ప్రార్థన
அன்புள்ள பிதாவே, என் வாழ்வில் பெரிய பாறைகளுக்கு முன்னுரிமை கொடுக்க முற்படும் போது, ​​ஞானத்தையும் வழிகாட்டுதலையும் நாடி இன்று உம் முன் வருகிறேன். உண்மையிலேயே முக்கியமானது எது என்பதைக் கண்டறியவும், அந்த முன்னுரிமைகளை நிறைவேற்றுவதில் எனது நேரத்தையும் பெலத்தையும் செலுத்துவதற்கு எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 4
● மேற்கொள்ளூம் விசுவாசம்
● யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் - 1
● என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே
● நல்ல வெற்றி என்றால் என்ன?
● சமாதானமே நமது சுதந்திரம்
● நீங்கள் எவ்வளவு சத்தமாக பேச முடியும்?
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్