english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. நான் கைவிட மாட்டேன்
అనుదిన మన్నా

நான் கைவிட மாட்டேன்

Tuesday, 30th of May 2023
0 0 174
Categories : விடுதலை (Deliverance)
தீர்க்கதரிசிகளுடைய புத்திரரில் ஒருவனுக்கு மனைவியாயிருந்த ஒரு ஸ்திரீ எலிசாவைப் பார்த்து: உமது அடியானாகிய என் புருஷன் இறந்து போனான்; உமது அடியான் கர்த்தருக்குப் பயந்து நடந்தான் என்பதை அறிவீர்; கடன்கொடுத்தவன் இப்போது என் இரண்டு குமாரரையும் தனக்கு அடிமைகளாக்கிக்கொள்ள வந்தான் என்றாள். II இராஜாக்கள் 4:1

எலிசா தீர்க்கதரிசியினிடத்தில் பணியாற்றிய ஒருவரின் விதவை எலிசாவிடம் வேண்டுகோள் வைக்கிறாள். இந்த பகுதியிலிருந்து நாம் பெறக்கூடிய சில மதிப்புமிக்க பாடங்கள் உள்ளன.

அவளுடைய குடும்பத்தில் விரக்தி இருந்தது:-
அவள் எலிசாவிடம் அழுதாள். "அழுகை" என்ற வார்த்தையின் அர்த்தம் " புலம்புவது; அடக்க முடியாமல் அழுவது; துக்கத்தால் கத்துவது." அவளுடைய வேண்டுகோள் சாதாரணமானது அல்ல, ஆனால் உடைந்த இருதயத்திலிருந்து தீவிரமானது. உடைந்த இருதயம் என்பது மனிதன் வெறுக்கும் ஒன்று. ஆனால் தேவனைஅல்ல. உங்கள் உடைந்த இருதயத்தை தேவனிடம் கொண்டுபோய் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் நிச்சயமாக விரைவாக பதிலளிப்பார். சங்கீதம் 51:17 கூறுகிறது, " தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்."

அவளுடைய குடும்பத்தில் மரணம் இருந்தது:-
அவள் "தீர்க்கதரிசிகளின் புத்திரரில் " ஒருவரை மணந்தாள். இஸ்ரவேலில் தீர்க்கதரிசிகளாகவும் பிரசங்கிகளாகவும் இருக்க எலிசா தீர்க்கதரிசியின் கீழ் பயிற்சி பெற்றவர்கள் இவர்கள். அவளது கணவன், அவளது காதலன், அவளுடைய நண்பன், அவளுக்கு வழங்குபவன், அவளுடைய பாதுகாவலர், மரணத்தில் அவளிடமிருந்து பறிக்கப்பட்டனர். அவள் முற்றிலும் உடைந்த ஒரு பெண். துக்கப்படுகிறவர்களுக்கு ஆறுதல் அளிப்பார், உங்கள் சாம்பலுக்கு அழகையும், உங்கள் துக்கத்திற்கு ஈடாக மகிழ்ச்சியின் எண்ணெயையும் தருவார் என்று ஆவியானவர் சொல்லக் கேட்டேன். பாரமான ஆவிக்கு துதி என்ற ஆடையையும் தருவார். (ஏசாயா 61:3) அதை இயேசுவின் நாமத்தில்  பெறுங்கள்.

அவளுடைய குடும்பத்தில் கடன் இருந்தது:-
கணவர் இறந்துவிட்டதால், அவரால் கடனை செலுத்த முடியவில்லை. இதன் விளைவாக, அவளுடைய கடனாளிகள் அவளுடைய மகன்களை அடிமைகளாக அழைத்துச் செல்ல வருகிறார்கள், அதனால் அவர்கள் கடனை அடைக்க முடியும். இது யூத சட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்டது (லேவியராகமம் 25:39). கணவனை இழந்தவள், இப்போது தன் மகன்களையும் இழக்கப் போகிறாள். அவள் தலைக்கு மேல் கடனில் இருக்கிறாள், அதை எப்படி சரி செய்வது என்று அவள் பார்க்கவில்லை. இதைப் படிக்கும் சிலர் பெரும் கடனில் உள்ளனர். உங்கள் நிலைமை மாறப்போகிறது.

அவள் குடும்பத்தில் ஆராதனை இருந்தது:-
அவளுடைய எல்லாப் பிரச்சனைகளும் இருந்தபோதிலும் (விரக்தி, மரணம் மற்றும் கடன்)

ஆண்டவர் மீதுள்ள நம்பிக்கையில் உறுதியாக இருந்தாள். அவள் தேவனை சபிக்கவில்லை அல்லது தான் இருக்கும் குழப்பம் பற்றி குற்றம் சாட்டவில்லை. மாறாக, அவள் தேவனை தன் மீட்பராக பார்த்தாள். பிரியமானவர்களே, நீங்கள் தேவனை சபித்திருந்தால் அல்லது நீங்கள் இருக்கும் குழப்பத்திற்காக அவரை குற்றம் சாட்டியிருந்தால், உங்களை மன்னிக்கும்படி அவரிடம் கேளுங்கள். மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபித்து, அவருடைய வல்லமையான கரத்தின் கீழ் உங்களைத் தாழ்த்திக் கொள்ளுங்கள். கர்த்தருடன் ஒருபோதும் சகஜமாக இருக்காதீர்கள்.

சில சமயங்களில், சிலர் விரக்தியின் நிலையை அடையும் போது, உலகம், மாம்சம், பிசாசு இவை அனைத்தும் தேவன் உங்களை பார்ப்பதில்லை என்றும் அவர் கவலைப்படுவதில்லை என்றும் சொல்கிறதாயிருக்கும். உண்மை என்னவென்றால், அவர் கரிசனையுள்ளவர். உங்கள் தினசரி தியானம், மற்றும் உங்கள் குடும்ப ஆராதனையை வளர்த்துக் கொள்ளுங்கள். கருணா சதனில் நடக்கும் ஆராதனைகளில் கலந்து கொள்ள தவறாதீர்கள். அந்தரங்கத்தில் காணும் உங்கள் தேவன், வெளிப்படையாக வெகுமதி அளிப்பார்.

இந்த தினசரி மன்னாவை உங்களால் முடிந்தவரை பகிருங்கள். நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன். உங்கள் சார்பாக தேவனின் கரம் நகர்வதை நீங்கள் காண்பீர்கள்.

Bible Reading: 2 Chronicles 23-25
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, எனக்கு ஆதாயத்தை கற்றுக்கொடுங்கள். நான் செல்ல வேண்டிய வழியில் என்னை வழிநடத்தும். (ஏசாயா 48:17)


Join our WhatsApp Channel


Most Read
● இறுதி சுற்றில் வெற்றி பெறுவது
● ஆண்டவராகிய இயேசுவின் மூலம் கிருபை
● தேவன் மீது தாகம்
● உங்கள் வாழ்க்கையை மாற்ற பலிபீடத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்
● பொறாமையின் ஆவியை மேற்கொள்வது
● ஏழு மடங்கு ஆசீர்வாதம்
● தீர்க்கதரிசன வார்த்தையைப் பெற்ற பிறகு என்ன செய்வது?
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్