english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. சிறிய சமரசங்கள்
అనుదిన మన్నా

சிறிய சமரசங்கள்

Wednesday, 11th of June 2025
0 0 251
Categories : Compromise
கிறிஸ்தவர்களாகிய நாம் தேவனுடைய வார்த்தையைப் பற்றி சமரசம் செய்யக்கூடாது என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது.

“கர்த்தருடைய வேதத்தின்படி நடக்கிற உத்தம மார்க்கத்தார் பாக்கியவான்கள். 2. அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள். 3. அவர்கள் அநியாயம் செய்வதில்லை; அவருடைய வழிகளில் நடக்கிறார்கள். 4. உமது கட்டளைகளை நாங்கள் கருத்தாய்க் கைக்கொள்ளும்படி நீர் கற்பித்தீர். சங்கீதம் 119:1-4

சாலொமோன் பூமியை ஆண்ட மிகப் பெரிய ராஜாக்களில் ஒருவராக இருந்தார், ஆனால் அவரது முக்கியமற்ற சமரசங்கள் பேரழிவில் முடிந்தது.

உபாகமம் 17:16-17-ல் ராஜாக்களுக்கு தேவனின் தெளிவான அறிவுரையைப் பார்க்கிறொம்

16. அவன் அநேக குதிரைகளைச் சம்பாதியாமலும், அநேக குதிரைகளைத் தனக்குச் சம்பாதிக்கும்படிக்கு ஜனங்களைத் திரும்ப எகிப்திற்குப் போகப்பண்ணாமலும் இருக்கக்கடவன்; இனி அந்த வழியாய் நீங்கள் திரும்பிப்போகவேண்டாம் என்று கர்த்தர் உங்களுக்குச் சொல்லியிருக்கிறாரே. 17. அவன் இருதயம் பின்வாங்கிப் போகாதபடி அவன் அநேகம் ஸ்திரீகளைப் படைக்கவேண்டாம்; வெள்ளியும் பொன்னும் தனக்கு மிகுதியாய்ப் பெருகப்பண்ணவும் வேண்டாம்.

இஸ்ரவேலின் ராஜாக்கள் தோற்கடிக்க முடியாத குதிரைகள் மற்றும் இரதங்களில் தங்களுடைய நம்பிக்கையை வைப்பதை தேவன் விரும்பவில்லை. தம்முடைய ஜனங்கள் தம்மை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்று தேவன் விரும்பினார்.

சாலொமோன் நீதிமொழிகள் 21:31 இல் எழுதியதிலிருந்து இதைப் பற்றி முழுமையாக அறிந்திருந்தார்: “குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும்; ஜெயமோ கர்த்தரால் வரும்.” குதிரைகளை இறக்குமதி செய்வது சாலொமோனுக்கு ஒரு சிறிய விஷயமாகத் தோன்றியிருக்கலாம், ஆனால் அது தேவனுக்கு முக்கியமானது. இந்த விஷயத்தில் அவரது சமரசம் தேவனிடமிருந்து மெதுவாகப் பிரிவதில் தொடங்கியது.

சமரசத்தின் அடுத்த பகுதி அவர் அதிகமான பெண்களைப் வைத்திருந்தது.

1. ராஜாவாகிய சாலொமோன், பார்வோனின் குமாரத்தியை நேசித்ததுமல்லாமல், மோவாபியரும், அம்மோனியரும், ஏதோமியரும், சீதோனியரும், ஏத்தியருமாகிய அந்நிய ஜாதியாரான அநேகம் ஸ்திரீகள்மேலும் ஆசைவைத்தான். 2. கர்த்தர் இஸ்ரவேல் புத்திரரை நோக்கி: நீங்கள் அவர்களண்டைக்கும் அவர்கள் உங்களண்டைக்கும் பிரவேசிக்கலாகாது; அவர்கள் நிச்சயமாய்த் தங்கள் தேவர்களைப் பின்பற்றும்படி உங்கள் இருதயத்தைச் சாயப்பண்ணுவார்கள் என்று சொல்லியிருந்தார்; சாலொமோன் அவர்கள்மேல் ஆசைவைத்து, அவர்களோடு ஐக்கியமாயிருந்தான். 3. அவனுக்குப் பிரபுக்கள் குலமான எழுநூறு மனையாட்டிகளும், முந்நூறு மறுமனையாட்டிகளும் இருந்தார்கள்; அவனுடைய ஸ்திரீகள் அவன் இருதயத்தை வழுவிப்போகப்பண்ணினார்கள்.

அந்நிய பெண்களை எப்படி திருமணம் செய்வது அரசியல் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் என்பதற்கு சாலொமோன் தனது சொந்த காரணங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதே பெண்கள்தான் அவரை ஜீவனுள்ள தேவனிடமிருந்து விலக்கி வைத்தனர்.

சிறிய விஷயங்களில் நம்மை ஓய்வெடுக்க வைப்பதன் மூலமும், மிக முக்கியமான விஷயங்களில் அதையே செய்யும்படி படிப்படியாக நம்மை சமாதானப்படுத்துவதன் மூலமும் சாத்தான் அடிக்கடி தனது மிகப்பெரிய ஊடுருவலைச் செய்கிறான்.

அவன் வாசலில் கால் வைக்க முடிந்தால், அவன் ஒரு பெரிய வெற்றியைப் பெற்றதாக உணர்கிறான், மேலும் தேவனிடமிருந்து நம்மை நழுவச் செய்யலாம். இருப்பினும், அப்போஸ்தலனாகிய பவுல், "...  பிசாசுக்கு இடங்கொடாமலும் இருங்கள்." (எபேசியர் 4:27) என்று நமக்கு அறிவுறுத்துகிறார்.

இந்த வசனங்களை தியானியுங்கள்:
புளிப்புள்ள கொஞ்சமாவானது பிசைந்த மாவனைத்தையும் உப்பப்பண்ணும். கலாத்தியர் 5:9

திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே. உன்னதப்பாட்டு 2:15

தேவனுடைய வார்த்தை தொடர்பாக உங்கள் வாழ்க்கையின் எந்தப் பகுதிகளில் நீங்கள் சமரசம் செய்துள்ளீர்கள்? அவற்றை எழுதுங்கள். மனந்திரும்பி, தேவனுடைய கிருபையை கேளுங்கள்.

Bible Reading: Nehemiah 10-11
ప్రార్థన
தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சி
இயேசுவின் நாமத்தில், என் வாழ்க்கை மற்றும் என் சிந்தனையின் மீது சமரச உணர்வை நான்கேட்கிறேன்.
இன்று நான் மாம்சத்தின் இச்சை, கண்களின் இச்சை மற்றும் ஜீவனத்ன் பெருமை ஆகியவற்றின் நுகங்களை உடைக்கிறேன் (1 யோவான் 2:16). இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் நான் நன்றாக முடிப்பேன்.

Join our WhatsApp Channel


Most Read
● தேவனுடைய கண்ணாடி
● சொப்பனம் காண தைரியம்
● உச்சக்கட்ட இரகசியம்
● உங்கள் வாழ்க்கையை மாற்ற பலிபீடத்திற்கு முன்னுரிமை கொடுங்கள்
● அக்கிரமத்திற்கு முழுமையான தீர்வு
● எதற்கும் பணம்
● அன்பின் உண்மையான பண்பு
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్