english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. உங்கள் விடுதலை மற்றும் சுகத்திற்கான நோக்கம்
అనుదిన మన్నా

உங்கள் விடுதலை மற்றும் சுகத்திற்கான நோக்கம்

Sunday, 3rd of August 2025
0 0 181
Categories : விடுதலை (Deliverance)
“வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வெறொருவர் இல்லை.” ‭‭ஏசாயா‬ ‭45‬:‭18‬ 

தேவன் பூமியை வீணாகப் படைக்கவில்லை. தேவன் எதை செய்தாலும் அதில் ஒரு நோக்கம் உண்டு. தேவன் எதைச் செய்தாலும் அதை ஒரு நோக்கத்திற்காகச் செய்கிறார். நோக்கமில்லாமல் எதையும் செய்வதில்லை.

நீங்கள் இதைப் படிக்கிறதற்கு உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கோ விடுதலையைத் தேடுவதாய்  இருக்கலாம். ஒருவேளை உங்களில் சிலர் குணமடைய நாடுகின்றனர் - சரீரப்பிரகாரமாகவோ அல்லது உணர்ச்சிப்பூர்வமாகவோ. ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், குணப்படுத்துவதற்கும் விடுதலை செய்வதற்கும் கூட ஒரு நோக்கம் இருக்கிறது.

தெய்வீக குணப்படுத்துதல் மற்றும் விடுதலையின் நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். தேவன் ஏன் குணப்படுத்துகிறார் மற்றும் விடுதலையை வழங்குகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, ​​​​அதை நீங்கள் மதிக்க கற்றுக்கொள்வீர்கள், அதை பராமரிக்கவும் கற்றுக்கொள்வீர்கள்.

ஏதோவொன்றில் இருந்து தேவன் நம்மை விடுவித்ததன் நோக்கம் நாம் ஏதோவொன்றில் நுழைய வேண்டும் என்பதாகும். தெய்வீக விடுதலை என்பது நீங்கள் இருக்கும் இடத்தில் இருப்பதற்காக எதையாவது விட்டு வெளியேறுவது அல்ல, ஆனால் ஏதோவொன்றில் நுழைவது. துரதிர்ஷ்டவசமாக, பலர் ஏதோவொன்றிலிருந்து வெளியே வருகிறார்கள், ஆனால் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கிறார்கள்; அவர்கள் ஏதோவொன்றில் இறங்கி தங்கள் விடுதலையை இழக்க மாட்டார்கள்.

இஸ்ரவேல் 430 வருடங்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்தது. (யாத்திராகமம் 12:40, கலாத்தியர் 3:15) தேவன் அவர்களை ஒரே இரவில் வெளியே கொண்டு வந்தார். அவர் அவர்களை மட்டும் வெளியே கொண்டு வரவில்லை. அவர் அவர்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்து வந்தார். உள்ளே பிரவேசிக்லாம் என்று வெளியே வந்தார்கள்.

ஒரு நாள் என்னிடம் ஒரு வாலிபன் நடந்து வந்து, "பாஸ்டர், "நான் மதுவிலிருந்து விடுவிக்கப்பட்டேன்" என்றான். "அது மிகவும் நல்லது", நான் பதிலளித்தேன். அவன் தொடர்ந்தான், "இப்போது நான் இறக்குமதி செய்யப்பட்ட சுவையுள்ள புகையிலையை மட்டுமே மென்று சாப்பிடுகிறேன்" சிலர் ஒரு போதையிலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால் இன்னொரு போதையில் மாட்டிக்கொள்ளுகிறார்கள். அதைப்பற்றி நான் இங்கு பேசவில்லை.

“இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.” ‭‭கொலோசெயர்‬ ‭1‬:‭13‬

தேவன் நம்மை இருளின் இராஜ்ஜியத்திலிருந்து விடுவித்து (வெளியே கொண்டுவந்து) அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்திற்குள் கொண்டுவந்தார் என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது.

உங்கள் விடுதலை மற்றும் சுகத்தின் முதன்மை நோக்கம், நீங்கள் தேவன் கொடுத்த பணியில் நுழைய முடியும் என்பதே.

Bible Reading: Isaiah 38-41
ఒప్పుకోలు
1. நான் கிறிஸ்து இயேசுவில் ஒரு புது சிருஷ்டி. (2 கொரிந்தியர் 5:17)

2. நான் அவருடைய தெய்வீக குணத்தில் பங்கு பெற்றவன். (2 பேதுரு 1:4) இயேசுவின் நாமத்தில் நான் இருளின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்டேன். (கொலோசெயர் 1:13)
(மேற்கண்ட வாக்குத்தத்தங்களை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருங்கள்)

Join our WhatsApp Channel


Most Read
● அடிமைத்தன பழக்கத்தை நிறுத்துதல்
● நீங்கள் எளிதில் காயப்படுகிறீர்களா?
● சாத்தான் உங்களை அதிகம் தடுக்கும் ஒரு பகுதி
● அகாபே அன்பில் வளருதல்
● கிறிஸ்துவில் ராஜாக்களும் ஆசாரியர்களுமாம்
● அற்புதத்தில் இயங்குவது: திறவுகோல் # 1
● உள்ளான அறை
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్