english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. மூன்று முக்கியமான சோதனைகள்
అనుదిన మన్నా

மூன்று முக்கியமான சோதனைகள்

Thursday, 10th of October 2024
0 0 548
Categories : சீடத்துவம் (Discipleship)
“பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.”
‭‭1 கொரிந்தியர்‬ ‭9‬:‭24‬-‭27‬ ‭

“கிழக்கிலும், மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம் வராது.” (‭‭சங்கீதம்‬ ‭75‬:‭6‬)‭

ஒரு தொழில் என்பது நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒன்று; அழைப்பு என்பது கடவுளிடமிருந்து நீங்கள் பெறும் ஒன்று.

ஒரு தொழில் என்பது உங்களுக்காக நீங்கள் செய்யும் ஒன்று; அழைப்பு என்பது கடவுளுக்காக நீங்கள் செய்யும் ஒன்று.

தேவன் நம்மை அழைக்கும்போது, நாம் நன்கு ஆயத்தமாக இருக்க வேண்டும். தேவன் தகுதியுள்ளவர்களை அழைக்கவில்லை, ஆனால் 'அழைக்கப்பட்டவர்களை' தகுதிப்படுத்துகிறார். இதன் மூலம் நான் என்ன சொல்கிறேன்?

“அப்பொழுது மோசே கர்த்தரை நோக்கி: ஆண்டவரே, இதற்கு முன்னாவது, தேவரீர் உமது அடியேனோடே பேசினதற்குப் பின்னாவது நான் வாக்குவல்லவன் அல்ல; நான் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்றான். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: மனுஷனுக்கு வாயை உண்டாக்கினவர் யார்? ஊமையனையும் செவிடனையும் பார்வையுள்ளவனையும் குருடனையும் உண்டாக்கினவர் யார்? கர்த்தராகிய நான் அல்லவா? ஆதலால், நீ போ; நான் உன் வாயோடே இருந்து, நீ பேசவேண்டியதை உனக்குப் போதிப்பேன் என்றார். அதற்கு அவன்: ஆண்டவரே. நீர் அனுப்பச் சித்தமாயிருக்கிற யாரையாகிலும் அனுப்பும் என்றான்.”
‭‭யாத்திராகமம்‬ ‭4‬:‭10‬-‭13‬ ‭

எகிப்தின் அடிமைத்தனத்திலிருந்து தம் ஜனங்களை மீட்க தேவன் மோசேயை அழைத்தார். ஆனால் மோசே தாம் திக்குவாயும் மந்த நாவும் உள்ளவன் என்பதால் தேவனின் திட்டத்தைப் நிறைவேற்ற முடியாது என்று தன்னைத் தகுதியற்றதாக உணர்ந்தார். ஆனால் தேவன் அவரைப் பயன்படுத்துவதைத் தடுக்கவில்லை.

தேவன் நம் ஒவ்வொருவரையும் ஒரு நோக்கத்திற்காக அழைத்துள்ளார். இருப்பினும், நம் வழ்க்கையில் இருக்கும் அழைப்பையும், நோக்கத்தையும் நிறைவேற்றுவதற்கு, ‘கொஞ்சத்திலும்’ உண்மையாக இருக்க வேண்டும்.

ஒருவர் உயர்ந்த நிலைக்கு வருவதற்கு முன் முதலில் 'கொஞ்சத்தில்' உண்மையாக இருக்க வேண்டும். தாவீது சீயோனில் ராஜாவாக ஆட்சி செய்வதற்கு தகுதி பெறுவதற்கு முன்பு, அவர் முதலில் மூன்று இடங்களில் உண்மையுள்ளவராக காணப்பட வேண்டியிருந்தது. அவற்றை கவனமாக ஆராயுங்கள், நீங்களும் இந்த மூன்று சோதனைகளில் தேர்ச்சி பெற வேண்டும்:

1. பெத்லகேமில் உள்ள வீட்டில்:

இங்குதான் தாவீது பொறுப்பாளியாக இருக்க கற்றுக்கொண்டார்; வாழ்வாதாரம் சம்பாதித்து தனது குடும்பத்தை ஆதரிப்பதற்காக, தேவனுடன் தனது உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும், மேலும் தனது வாழ்க்கையில் தேவ தயவின் காரணமாக மற்றவர்களின் வெறுப்பைப் மேற்கொள்ள வேண்டியிருந்தது. இப்படி ஒருவர் சொன்னார், "தொண்டு வீட்டிலிருந்து தொடங்குகிறது." கொஞ்சத்தில் உண்மையாக இருப்பதன் மூலம் பெரிய காரியங்களை கையாள இங்கே நீங்கள் தகுதி பெறுகிறீர்கள். இங்கே உங்கள் குணாதிசயம் வளர்ந்தது உங்கள் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படுகின்றது.

தாவீது தன் தகப்பனின் ஆடுகளைக் பாராமரிப்பதில் உண்மையுள்ளவராக இருந்தார். அவைகளுக்காக சிங்கத்துடனும் கரடியுடனும் சண்டையிடத் ஆயத்தமாய் இருந்தார். தேவன் இந்த உண்மைத்தன்மையைக் கண்டு, அவரைத் தம் ஜனங்களின் மேய்ப்பவராக மாற்றினார். தகப்பனின் வேலையை கவனித்துக் கொள்ளும் மகன்களையும் மகள்களையும் தேவன் தேடுகிறார், ஆனால் ஆவிக்குரிய ரீதியில் அலைந்து திரிபவர்களை அல்ல.

2. அதுல்லாம் குகையில்:

சமுதாயத்தினால் ஊதாசினப்படுத்தப்பட்ட, நிராகரிக்கப்பட்டவர்களிடையே வாழ்வதன் மூலம், பதிலுக்கு எதையும் எதிர்பார்க்காமல் மற்றவர்களுக்கு தன்னைக் கொடுக்க தாவீது கற்றுக்கொண்டார். தன் ஜீவனுக்கு ஆபத்து உள்ள போதும் நேசித்து சேவை செய்ய வேண்டும். தாவீதின் 'வல்லமையுள்ள மனிதர்கள்' ஆயத்தமாக்கப்பட்ட இடம் இதுவாகும். 'அதுல்லாம்' என்பது நம் ராஜ்ஜியம் மறித்து, தேவனின் ராஜ்யம் நம் மூலம் வெளிப்படுகிறது. இங்குதான் தேவன் நம் இருதயத்தில் உள்ள ஒவ்வொரு சுய-தேடுதல், சுய சேவை நோக்கத்தையும் கையாளுகிறார். துரதிர்ஷ்டவசமாக, நம்மில் சிலர் இந்த குகைக்கு வருவதில்லை.

3. ஏர்மோன் மலையில்:

ஏர்மோன் என்ற சொல்லுக்கு உடன்படிக்கை என்று பொருள். ஏர்மோன் மலை இஸ்ரவேலின் மிக உயரமான மலையாகும், மேலும் உச்சிக்குச் செல்வது எளிதான பாதை இல்லை; அது எல்லா வழிகளிலும் மேல்நோக்கி இருந்தது. மேலும் அப்படியே தான் அனைத்து உடன்படிக்கை உறவுகளும் உள்ளது. உடன்படிக்கை உறவுகளுக்கு எப்போதும் சூழ்நிலைகளைப் பொருட்படுத்தாமல் விசுவாசமும், செலவைப் பொருட்படுத்தாமல் உண்மையும், வலியைப் பொருட்படுத்தாமல் மன்னிப்பும் தேவைப்படுகிறது.

நாம் இந்த முறையில் வாழத் தொடங்கும் போது, உலகம் மீண்டும் சீயோனை (சபையை) பதில்களுக்காகப் பார்க்கும், ஏனென்றால் தேவன் நம்மில் செயல்படுவதை அவர்கள் காண்பார்கள்.
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், நான் அழைக்கப்பட்ட அழைப்புக்கு தகுதியான முறையில், பொறுமையுடனும், மென்மையுடனும், நீதானதுடனும், அன்பில் ஒருவரையொருவர் தாங்கி, ஒற்றுமையை நிலைநிறுத்த ஆவலுடனும் நடக்க கிருபை வேண்டுகிறேன். பொறுமையின் ஆவியை தாரும்!


Join our WhatsApp Channel


Most Read
● அன்பு - வெற்றியின் உத்தி -2
● போற்றப்படாத கதாநாயகர்கள்
● எண்ணிக்கை ஆரம்பம்
● நாள் 11: 40 நாட்கள் உபவாசம் & பிரார்த்தனை
● கடவுளுக்கு முதலிடம் #3
● கிறிஸ்துவைப் போல மாறுதல்
● நாள் 20: 40 நாட்கள் உபவாச ஜெபம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్