english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் -2
అనుదిన మన్నా

யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் -2

Thursday, 24th of October 2024
0 0 602
Categories : பாவம்(Sin)
நமது தொடரில் தொடர்கிறோம்: யூதாஸின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்.

வேதம் எதையும் மறைக்கவில்லை. “முன்பு எழுதியிருக்கிறவைகளெல்லாம் நமக்குப் போதனையாக எழுதியிருக்கிறது.”(ரோமர் 15:4) 

என்று வேதம் தெளிவுபடுத்துகிறது.
கடைசியில் அவரைக் காட்டிக் கொடுத்த ஆண்டவர் இயேசுவின் நெருங்கிய அப்போஸ்தலர்களில் ஒருவரான யூதாஸின் வாழ்க்கையிலிருந்து கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது.

யூதாஸ் வீழ்ந்ததற்கு மற்றொரு காரணம்:
2. அறிக்கைச் செய்யப்படாத பாவம்
ஒப்புக்கொள்ளப்படாத பாவம் எப்போதும் நம் ஆன்மாவின் எதிரியான சாத்தானுக்கு கதவைத் திறக்கிறது

விலையேறப்பெற்ற பரிமளதைலமுள்ள வெள்ளைக்கல்பரணியைக் கொண்டுவந்து ஸ்திரீ, இயேசுவின் தலையில் எண்ணெயை ஊற்றியபோது, ​​யூதாஸ் கோபமடைந்து, இதுபோன்ற வீண்விரயங்களைத் தவிர்த்து, ஏழைகளுக்கு பணத்தை கொடுத்திருக்கலாமே என்றான்.

“அவன் தரித்திரரைக்குறித்துக் கவலைப்பட்டு இப்படிச் சொல்லாமல், அவன் திருடனானபடியினாலும், பணப்பையை வைத்துக்கொண்டு அதிலே போடப்பட்டதைச் சுமக்கிறவனானபடியினாலும் இப்படிச் சொன்னான்.” யோவான்‬ ‭12‬:‭6‬ ‭

நான் முன்பே குறிப்பிட்டது போல், வேதம் மனிதனின் பலவீனங்களை ஒருபோதும் மறைப்பதில்லை, மாறாக மனிதன் மனந்திரும்பி அவனது வழிகளில் திரும்புவதற்கு அவற்றை வெளிப்படுத்துகிறது. தெளிவாக, யூதாஸுக்கு ‘பணத்தின் மீதான ஆசை’ பிரச்சினையாக இருந்தது. (1 தீமோத்தேயு 6:10), அதிலிருந்து, பிசாசு அவனுடைய வாழ்க்கையில் ஒரு கோட்டையைக் கட்டினான்.

விபச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமாரியப் பெண்ணிடம் இயேசு பேசுவதை யூதாஸ் பார்த்து, அவளுடைய வாழ்க்கை மறுரூபமடைவதைக் கண்டான். மிகக் கொடிய பாவிகளிடம் இயேசு எப்பொழுதும் எவ்வளவு இரக்கத்துடன் நடந்துகொண்டார் என்பதையும் அவன் பார்த்திருந்தான். அவன் தனது பலவீனத்தைப் பற்றி இயேசுவிடம் எளிதாகப் பேசியிருக்கலாம், நிச்சயமாக கர்த்தர் அதைக் கடக்க அவனுக்கு உதவியிருப்பார். ஆனால் யூதாஸ் எப்பொழுதும் காரியத்தை மறைத்து, எப்போதும் அப்படி ஒரு பிரச்னை இல்லாத ஒருவரைப் போல் பாசாங்கு செய்தான்.

வேதம் மிக தெளிவாக குறிப்பிடுகிறது, “தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.” நீதிமொழிகள்‬ ‭28‬:‭13‬ ‭

யூதாஸின் அறிக்கைச் செய்யப்படாத பாவம் சாத்தானுக்கு கதவைத் திறந்தது.

“அப்பொழுது பன்னிருவரில் ஒருவனாகிய ஸ்காரியோத்தென்னும் மறுபேர்கொண்ட யூதாசுக்குள் சாத்தான் புகுந்தான்.”லூக்கா‬ ‭22‬:‭3‬ ‭

“சீமோனின் குமாரனாகிய யூதாஸ்காரியோத்து அவரைக் காட்டிக்கொடுக்கும்படி பிசாசானவன் அவன் இருதயத்தைத் தூண்டினபின்பு, அவர்கள் போஜனம்பண்ணிக்கொண்டிருக்கையில்;”(யோவான்‬ ‭13‬:‭2‬)
யூதாஸ் தான் சாத்தானுக்கு கதவைத் திறந்து தேவனை காட்டிக் கொடுத்தான்.

‭‭1 யோவான்‬ ‭1‬:‭9 சொல்கிறது, “நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.”
ప్రార్థన
1. பிதாவே, என் பலவீனத்தை உன்னிடம் அறிக்கைச் செய்கிறேன். (இதைச் செய்ய சிறிது நேரம் செலவிடுங்கள்)

2. பிதாவே, நாளை வரவிருப்பதற்கு இன்றே ஆயத்தம் செய்ய உமது ஞானத்தையும் கிருபையையும் எனக்கு தாரும். ஏராளமாக இருந்த காலத்தில் பஞ்சம் வருவதற்காக யோசேப்புக்கு நீ உதவி செய்தது போல எனக்கு உதவும்; எறும்பு குளிர்காலத்திற்கு ஆயத்தம் செய்து சேமித்து வைப்பது போல, எனக்கு அந்த தொலைநோக்கு பார்வையை தாரும். எதிர்காலத்தின் இழப்பில் இன்றைய சிலிர்ப்பிற்காக வாழ மறுக்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● கிறிஸ்தவர்கள் தேவதூதர்களுக்கு கட்டளையிடலாமா?
● சொப்பன கொலையாளிகள்
● நாள் 10: 40 நாட்கள் உபவாச ஜெபம்
● ஒரு நேர்முகசந்திப்பின் சாத்தியம்
● தேவனுடைய வார்த்தை உங்களை புண்படுத்த முடியுமா?
● கவலையை மேற்கொள்ள, இந்த காரியங்களை பற்றி சிந்தியுங்கள்
● பரலோகம் என்று அழைக்கப்படும் இடம்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్