english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்- 3
అనుదిన మన్నా

யூதாஸ் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்- 3

Friday, 25th of October 2024
0 0 330
Categories : சரணடைதல் (Surrender)
யூதாஸின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள் என்ற நமது தொடரில் தொடர்கிறோம்:.

“அவர் பெத்தானியாவில் குஷ்டரோகியாயிருந்த சீமோன் வீட்டிலே போஜனபந்தியிருக்கையில், ஒரு ஸ்திரீ விலையேறப்பெற்ற நளதம் என்னும் உத்தம தைலமுள்ள வெள்ளைக்கல் பரணியைக் கொண்டுவந்து, அதை உடைத்து, அந்தத் தைலத்தை அவர் சிரசின்மேல் ஊற்றினாள். 

அப்பொழுது சிலர் தங்களுக்குள்ளே விசனமடைந்து: இந்தத் தைலத்தை இப்படி வீணாய்ச் செலவழிப்பானேன்?”
‭‭மாற்கு‬ ‭14‬:‭3‬-‭4‬ ‭

அந்த ஸ்திரீ ஆண்டவர் இயேசுவின் தலையில் மிகவும் விலையுயர்ந்த தைலத்தை ஊற்றியபோது, ​​யூதாஸ் மிகவும் வருத்தப்பட்டான். அந்தப் ஸ்திரீ இயேசுவுக்கு எதையாவது கொடுப்பதில் அவனுக்கு பிரச்சனை  இல்லை - ஆனால் எல்லாவற்றையும் கொடுப்பதில் பிரச்சனை இருந்தது. நான் இயேசுவுக்கு எதையாகிலும் கொடுப்பேன், ஆனால் எல்லாவற்றையும் கொடுக்கமாட்டேன் என்ற மனப்பான்மை ஒருவருக்கு இருந்தால், அத்தகைய நபர் அனைத்தையும் இழக்க நேரிடும். உண்மை என்னவெனில்; யூதாஸ் ஒருபோதும் இயேசுவிடம் முழுமையாக தன்னை ஒப்பு கொடுக்கவில்லை. அவன் எப்போதும் தனது சொந்த நிகழ்ச்சி நிரலை செயல்படுத்தினான்.

இன்றும் கூட, இயேசுவிடம் தன்னை ஒப்புக்கொடுப்பவர்கள் பலர் இருக்கிறார்கள், அதனால் அவர்கள் பரலோகத்திற்குச் செல்ல முடியும் என்பதற்காக, ஆனால் அது அவர்களின் வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இருக்கக்கூடாது . அத்தகையவர்கள் இயேசுவை நித்தியத்துடன் நம்புகிறார்கள், ஆனால் அன்ட்றாட வாழ்க்கையில் நம்புவதில்லை. இயேசுவை முழுமையாய் அடைய விரும்பினால், உங்கள் அனைத்தையும் ஒப்புகொடுக்க வேண்டும்!

இரண்டாவதாக, அந்த ஸ்திரீ ஆராதனை என்று கருதியது யூதாஸின் பார்வையில் அது வீணாக தெரிந்தது. துரதிர்ஷ்டவசமாக, இன்றைய காலகட்டத்திலும் கூட, கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்புடன் வெளித்தோற்றத்தில் தோன்றும் பலர் ஆராதனையை வீணாகக் கருதுகின்றனர். அவர்களின் தனிப்பட்ட ஜெப நேரங்களின் போது, ​​அவர்கள் தேவனை ஆராதிப்பதில்லை. அவர்கள் ஜெபிக்கலாம் ஆனால் ஆராதிக்க மாட்டார்கள்.

அவர்கள் சபை ஆராதனைகளில் (ஆன்லைனில் அல்லது நேரடியாகவோ) கலந்துகொள்கிறார்கள், ஆனால் ஆராதனைக்கு ஒருபோதும் நேரத்துக்கு வர மாட்டார்கள். ஏன் என்று விசாரித்தால், “தேவனுடைய வார்த்தைக்காகவே வருகிறேன்” என்று ஆவிக்குரிய பதிலைச் சொல்கிறார்கள். சபை ஆராதனைக்கு (ஆன்லைனில் அல்லது நேரடியாகவோ) நீங்கள் எப்போதும் சரியான நேரத்தில் இருப்பீர்கள் என்று இன்று முடிவெடுத்து அவரை ஆராதியுங்கள்.

இந்த ஸ்திரீக்கு தெளிவான புரிதல் இருந்தது. அவள் எவ்வளவு மன்னிக்கப்பட்டாள் என்பதற்கான ஆழ்ந்த உணர்வு இருந்தது. நாம் எவ்வளவு மன்னிக்கப்பட்டிருக்கிறோம் என்பதை உண்மையாகப் புரிந்து கொண்டால், அவர் நம்மை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை அறிந்துகொண்டால் நாமும் தேவனை மேலும் மேலும் ஆராதிப்போம்.
ఒప్పుకోలు
பரலோகத் தகப்பனே, நீர் எங்கு நடத்தினாலும் உமது திட்டங்களுக்கு நான் ஒப்புக்கொடுக்கிறேன், ஆண்டவரே; நீர் என்னை எவ்வளவாய் பயன்படுத்த சித்தம் கொண்டிருக்கிறரோ, அவ்வளவாய் என்னை பயன்ப்படுத்திமாறு பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். நீர் விரும்பும் பாத்திரமாய் மாற எனக்கு உதவும். இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● விசுவாசிகளின் ராஜரீக ஆசாரியத்துவம்
● உடனடியாக கீழ்ப்படிதலின் வல்லமை
● விசுவாசத்தை முடத்தனத்திலிருந்து வேறுபடுத்துதல்
● அவிசுவாசம்
● தேவனுடைய ஏழு ஆவிகள்
● தேவன் எப்படி வழங்குகிறார் #2
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 5
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్