english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. தெய்வீக ஒழுக்கம் - 2
అనుదిన మన్నా

தெய்வீக ஒழுக்கம் - 2

Sunday, 3rd of November 2024
0 0 384
Categories : தெய்வீக ஒழுக்கம் (Divine Order)
“உன் ஆடுகளின் நிலைமையை நன்றாய் அறிந்துகொள்; உன் மந்தைகளின்மேல் கவனமாயிரு.” ‭‭நீதிமொழிகள்‬ ‭27‬:‭23‬ 

மற்றும் நீதிமொழிகள் 29:18 சொல்கிறது, “தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.”
‭‭நீதிமொழிகள்‬ ‭29‬:‭18‬ ‭

தேவன் தனது இயற்கைக்கு அப்பாற்பட்ட பகுதியைச் செய்வதற்கு முன், நாம் செயக்கூடிய நமது பகுதியைச் செய்ய வேண்டும்.

லூக்கா 9:10-17 ஐ நீங்கள் வாசித்தால், கர்த்தராகிய இயேசு ஐயாயிரம் பேருக்கு உணவளிக்கும் அற்புதத்தை நிகழ்த்துவதற்கு முன், வசனங்கள் 14 மற்றும் 15 நமக்குச் சொல்கிறது, “ஏறக்குறைய ஐயாயிரம் புருஷர் இருந்தார்கள். அவர்களைப் பந்திக்கு ஐம்பது ஐம்பதுபேராக உட்காரும்படி சொல்லுங்கள் என்று தம்முடைய சீஷர்களுக்குச் சொன்னார்.”

‭‭ “அவர்கள் அந்தப்படியே எல்லாரையும் உட்காரும்படி செய்தார்கள்.”

‭‭நீங்கள் பாருங்கள், கர்த்தர் சொன்னதை சீஷர்கள் செய்ய வேண்டியிருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து செய்த அனைத்தும் ஒழுங்கான முறையில் இருந்தன. பெறுக்கம் ஏற்பட்டதில் ஆச்சரியமில்லை.

தயவு செய்து இதை நினைவில் வையுங்கள்: காரியங்கள் ஒழுங்காக நடக்கும் இடத்தில் தேவன் எப்போதும் பெருக்கத்தை கொண்டு வருவார். இன்று, உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள், நான் என் காரியங்களைச் செய்யும் விதத்தில் தெய்வீக ஒழுங்கு இருக்கிறதா?

“அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும். அவைகள் பட்டணம் எங்கும் செல்லும்; மதிலின்மேல் ஓடும்; வீடுகளின்மேல் ஏறும்; பலகணி வழியாய்த் திருடனைப்போல உள்ளே நுழையும். அவைகளுக்கு முன்பாகப் பூமி அதிரும்; வானங்கள் அசையும்; சூரியனும் சந்திரனும் இருண்டுபோகும்; நட்சத்திரங்கள் ஒளி மழுங்கும். கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்; அவருடைய பாளயம் மகா பெரிது, அவருடைய வார்த்தையின்படி செய்கிறதற்கு வல்லமையுள்ளது; கர்த்தருடைய நாள் பெரிதும் மகா பயங்கரமுமாயிருக்கும்; அதைச் சகிக்கிறவன் யார்?”
‭‭யோவேல்‬ ‭2‬:‭7‬-‭11‬ ‭

11ஆம் வசனத்தில் உள்ள வார்த்தைகளைக் கவனியுங்கள், “கர்த்தர் தமது சேனைக்குமுன் சத்தமிடுவார்.” இதிலிருந்து, தேவனின் படையைப் பற்றிய விளக்கம் என்பது தெளிவாகிறது.

இப்போது நீங்கள் வசனங்கள் 7 மற்றும் 8 இல் உள்ள சொற்றொடர்களை கவனமாக கவனிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்: "அவைகள் பராக்கிரமசாலிகளைப்போல ஓடும்; யுத்தவீரரைப்போல மதிலேறும்; வரிசைகள் பிசகாமல், ஒவ்வொன்றும் தன் தன் அணியிலே செல்லும். ஒன்றை ஒன்று நெருக்காது; ஒவ்வொன்றும் தன் தன் பாதையிலே செல்லும்; அவைகள் ஆயுதங்களுக்குள் விழுந்தாலும் காயம்படாமற்போகும்." தேவனின் படையில் தெய்வீக ஒழுங்கு இருப்பதை இவ்வசனங்கள் கூறுகின்றன. மேலும் தேவனின் படையில் இத்தகைய தெய்வீக ஒழுங்கு இருப்பதால், அது அவர்களின் செயல்திறனை அதிகரிக்கிறது. இந்த தெய்வீக ஒழுங்கின் கொள்கையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும் மற்றும் அதை நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பயன்படுத்த வேண்டும்.

உதாரணமாக: உங்கள் ஆவணங்கள் ஒழுங்காக உள்ளதா? உங்கள் வருமானம் மற்றும் செலவினங்களின் பதிவை நீங்கள் பராமரிக்கிறீர்களா? உங்கள் வாழ்க்கையில் தினமும் தேவனுக்கு முதலிடம் கொடுக்கிறீர்களா? அதுவே காரியங்களைச் செய்யும் தெய்வீக ஒழுங்கு. முதல் விஷயங்களை முதலில் வைக்கவும்!

#1. தெய்வீக ஒழுங்கு உங்கள் செயல்திறனை அதிகரிக்கும் மற்றும் உங்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியிலும் அதிகரிப்பைக் கொண்டுவரும்

#2. தெய்வீக ஒழுங்கு உங்கள் வாழ்க்கையில் தெய்வீக சமாதானத்தையும் கொண்டு வரும்.

“உம்முடைய வேதத்தை நேசிக்கிறவர்களுக்கு மிகுந்த சமாதானமுண்டு; அவர்களுக்கு இடறலில்லை.”
‭‭சங்கீதம்‬ ‭119‬:‭165‬
ప్రార్థన
பிதாவே, உமது மகிமை மேலும் என் வாழ்விலும் வெளிப்படும்படி என் வாழ்வின் ஒவ்வொரு பகுதியையும் வரிசைப்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தில். ஆமென்


Join our WhatsApp Channel


Most Read
● உங்கள் ஆவியை  புதுப்பித்து கொள்ளுதல்
● ஆவிக்குரிய வளர்ச்சியின் மௌனத் தினறல்
● எதிராளி இரகசியமானவன்
● கிருபையில் வளருத்தல்
● சுத்திகரிப்பின் எண்ணெய்
● தேவன் எப்படி வழங்குகிறார் #2
● உங்களை வழிநடத்துவது யார்?
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్