english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. வார்த்தையில் ஞானம்
అనుదిన మన్నా

வார்த்தையில் ஞானம்

Saturday, 4th of January 2025
0 0 334
Categories : தேவனின் வார்த்தை ( Word of God )
“ஆகையால் அவைகளைக் கைக்கொண்டு நடவுங்கள்; ஜனங்களின் கண்களுக்கு முன்பாகவும் இதுவே உங்களுக்கு ஞானமும் விவேகமுமாய் இருக்கும்; அவர்கள் இந்தக் கட்டளைகளையெல்லாம் கேட்டு, இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.” (‭‭உபாகமம்‬ ‭4‬:‭6‬ ‭)

மேலே உள்ள வசனத்திலிருந்து நாம் பார்க்கிறோம்:
• வார்த்தையைப் பயிற்சி செய்வது நம்மை ஞானத்திலும் புரிதலிலும் வளரச் செய்யும்.

• வார்த்தையைப் பயிற்சி செய்வது நம்மைச் சுற்றியுள்ள ஜெனங்களிடமும் செல்வாக்கு செலுத்தும். என்ன நடக்கிறது என்று ஜனங்கள் கேட்கும்போதும் பார்க்கும்போதும், “இந்தப் பெரிய ஜாதியே ஞானமும் விவேகமுமுள்ள ஜனங்கள் என்பார்கள்.” (உபாகமம் 4:6)

சங்கீதக்காரன் சங்கீதம் 119:98 இல் எழுதினார்

“நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது.”

நமது ஆத்துமாவின் மிகப்பெரிய - பிசாசு. தேவனுடைய வார்த்தையிலிருந்து வரும் ஞானம் உங்களை பிசாசை விட பல மைல்களுக்கு முன்னால் வைக்கும். சத்துரு வார்த்தையை அறிந்திருக்கலாம,  வார்த்தையை மேற்கோள் காட்டலாம், ஆனால் அவன் வார்த்தையின் ஞானத்தை அணுக முடியாது; அது அவனுக்கு மறைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக: பிசாசு அறிந்திருந்தால், அவன் இயேசுவை சிலுவையில் அறைந்திருக்க மாட்டான். (1 கொரிந்தியர் 2:8)

“நீர் உம்முடைய கற்பனைகளைக் கொண்டு என்னை என் சத்துருக்களிலும் அதிக ஞானமுள்ளவனாக்குகிறீர்; அவைகள் என்றைக்கும் என்னுடனே இருக்கிறது. உம்முடைய சாட்சிகள் என் தியானமாயிருக்கிறபடியால், எனக்குப் போதித்தவர்களெல்லாரிலும் அறிவுள்ளவனாயிருக்கிறேன்.”
‭சங்கீதம்‬ ‭119‬:‭98‬-‭99‬ ‭

தேவனுடைய வார்த்தையின் ஞானம் இந்த உலகத்தின் ஆசிரியர்களை விட நம்மை ஞானமுள்ளவர்களாக ஆக்குகிறது, அவர்கள் எல்லா கல்வியையும் தங்கள் பின்னால் வைத்திருக்கிறார்கள். வார்த்தையிலிருந்து வரும் ஞானத்துடன் வயது கூட போட்டியிடுவதில்லை.

உண்மையான ஞானம் வெறும் அறிவைக் குவிப்பதைத் தாண்டியது. அறிவுக்கு மதிப்பு உண்டு, ஆனால் வாழ்க்கையை மாற்றும் வகையில் அறிவை நம் வாழ்வில் எவ்வாறு பயன்படுத்துவது - அதுவே உண்மையான ஞானம்.

தயவு செய்து உங்களைச் சுற்றிப் பாருங்கள், புத்திசாலிகள் மற்றும் படித்தவர்கள் ஞானிகளாக இருக்க வேண்டிய அவசியமில்லை, மேலும் ஒருவர் அவர்களின் வாழ்க்கையின் முடிவைப் பார்க்க வேண்டும்.

அப்போஸ்தலனாகிய பவுல் எழுதினார், “அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.”(1 கொரிந்தியர் 1:30)
பவுல் முக்கியமாகச் சொல்லகிறது என்னவென்றால், வார்த்தையே நம்முடைய ஞானம்.

“ஞானமே முக்கியம், ஞானத்தைச் சம்பாதி; என்னத்தைச் சம்பாதித்தாலும் புத்தியைச் சம்பாதித்துக்கொள். நீ அதை மேன்மைப்படுத்து, அது உன்னை மேன்மைப்படுத்தும்; நீ அதைத் தழுவிக்கொண்டால், அது உன்னைக் கனம்பண்ணும். அது உன் தலைக்கு அலங்காரமான முடியைக் கொடுக்கும்; அது மகிமையான கிரீடத்தை உனக்குச் சூட்டும்.”
‭‭நீதிமொழிகள்‬ ‭4‬:‭7‬-‭9‬ ‭

இந்த ஞானம் வேண்டுமானால் அதன் பின்னே செல்ல வேண்டும். தேவன் சில அளவிலான ஞானத்தை பரிசாகத் தருகிறார், ஆனால் உங்களுக்கு அதிக ஞானம் வேண்டுமானால், எதுவாக இருந்தாலும் அதைப் பெறுவதற்கு நீங்கள் உறுதியாக இருக்க வேண்டும். இது ஒருமுறை நடக்கும் செயல் அல்ல; இது கடவுளுடைய வார்த்தையில் ஞானத்தைத் தேடும் ஒரு நாளுக்கு நாள் அன்றாடம் செயல்முறையாகும்.

Bible Reading : Genesis 12 -15 
ప్రార్థన
1. பிதாவே, எனக்கு இரங்கும்; என்னை மன்னித்து, எல்லா அநியாயங்களிலிருந்தும் என்னைச் சுத்தப்படுத்தும், இயேசுவின் நாமத்தில்.

2. நீங்கள் எதையாவது உணரும் வரை "இயேசுவின் இரத்தம் ஜெயம்" என்று சொல்லிக்கொண்டே இருங்கள்.

3. இயேசுவின் இரத்தம் எல்லா மூதாதையரின் அசுத்தத்திளிலிருந்தும், இயேசுவின் நாமத்தில் என்னைச் சுத்தப்படுத்துகிறது.

4. இயேசுவின் இரத்தம் எல்லா சொப்பன அசுத்தத்திளிலிருந்தும், இயேசுவின் நாமத்தில் என்னைச் சுத்தப்படுத்துகிறது.

5. என் ஆவி, ஆத்துமா மற்றும் சரீரத்தை அசுத்தப்படுத்த முயற்சிக்கும் எந்த வல்லமையையும் இயேசுவின் நாமத்தில் துண்டிக்கப்படும்.

6. பிதாவே, நீதியைச் சிநேகிக்கவும், அக்கிரமத்தை முழுமையாய் வெறுக்கவும் எனக்கு கிருபை தந்தருளும்; தயவு செய்து, என்னைச் சுற்றியுள்ளவர்களை விட, இயேசுவின் நாமத்தில், மகிழ்ச்சியின் எண்ணெயால் என்னை அபிஷேகம் செய்யுங்கள்.

7. பிதாவே, தயவு செய்து, உமது வார்த்தையில் என் அடிகளை ஒழுங்குபடுத்தும், மேலும், இயேசுவின் நாமத்தில் எந்த அக்கிரமமும் என்மீது ஆதிக்கம் செலுத்த தடைச்செய்யும்.

8. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, என் இருதயத்திலுள்ள முரடாட்டத்தின் ஒவ்வொரு ஆவியும் உமது அக்கினியால் அழிக்கப்படட்டும்.

9. நீங்கள் விடுதலையை அனுபவிக்கும் வரை, "பரிசுத்த ஆவியின் அக்கினி" என்று சொல்லிக்கொண்டே இருங்கள்.

10. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, உமது வார்த்தைக்கு விரோதமாக என் இருதயத்தை ஒருபோதும் கடினப்படுத்தாதபடிக்கு எனக்கு கிருபை தாரும்.

11. கிறிஸ்து எனக்கு தேவனுடைய ஞானமாக்கப்பட்டிருக்கிறார் (இதை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருங்கள்)

Join our WhatsApp Channel


Most Read
● நாள் 05:40 நாட்கள் உபவாச ஜெபம்
● அற்புதத்தில் இயங்குவது: திறவுகோல் # 2
● தீர்க்கதரிசனமாக கடைசி கலங்களை புரிந்து கொள்ளுதல்
● சபை ஆராதனையை தவிர்த்துவிட்டு, வீட்டில் சபை ஆன்லைனில் பார்ப்பது சரியா?
● தேவதூதர்களின் உதவியை எவ்வாறு செயல்படுத்துவது
● காலேபின் ஆவி
● யூதா எழுந்து புறப்படக்கடவன்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్