english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. மிகவும் பொதுவான பயங்கள்
అనుదిన మన్నా

மிகவும் பொதுவான பயங்கள்

Tuesday, 19th of November 2024
0 0 571
Categories : பயம் (Fear) விடுதலை (Deliverance)
நீங்கள் எதைப் பற்றி அதிகம் பயப்படுகிறீர்கள்?
பல ஆண்டுகளாக, நான் ‘பயம்’ என்ற தலைப்பில் பிரசங்கிக்கும் போதெல்லாம், ஆராதனைக்கு பிறகு, நான் அடிக்கடி ஜனங்களிடம், “நீங்கள் எதைப் பற்றி அதிகம் பயப்படுகிறீர்கள்?” என்று கேட்பேன்.

நான் பல்வேறு பதில்களைப் பெற்றுள்ளேன் - சில வேடிக்கையானதாகவும் சில மிகவும் சிந்தனைமிக்கவையாக இருக்கும். ஜனங்கள் பயப்படும் பல விஷயங்கள் உள்ளன, ஆனால் இங்கே மூன்று பொதுவான பயங்கள் உள்ளன:

மிகவும் பொதுவான பயங்கள் 
1. பொது மேடையில் பேசுதல்
தொழில் அல்லது புவியியல் இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், பெரும்பான்மையான மக்கள் ஒரு குழுவின் முன் பேச பயப்படுகிறார்கள்.

ஒரு போதகராக, நான் தலைவர்களை வளர்ப்பதை விரும்புகிறேன். இருப்பினும், நான் ஜனங்களை முன் வந்து ஜெபம் செய்ய அழைத்தபோது, ​​​​தேவ வார்த்தை போன்றவற்றை பகிர்ந்து கொள்ள அழைத்தபோது, சிலர் இந்த பயத்தின் காரணமாக திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இந்த வகையான பயம் அவர்களின் ஆவிக்குரிய வளர்ச்சியை முடக்குகிறது.

2. நிராகரிப்பின் பயம்
நிராகரிக்கப்படும் என்ற பயம் அடிப்படையில் 'இல்லை' என்ற வார்த்தையைக் கேட்பது அல்லது யோசனைகளை நிராகரிப்பது.

வாழ்க்கைத் துணையைத் தேடும் மக்களிடையே இந்தப் பதில் அதிகம் இருக்கும். 11 முறை திருமண முயற்சி நிராகரிக்கப்பட்டதால் தற்கொலை செய்து கொள்ள விரும்புவதாக ஒரு இளம்பெண் எனக்கு எழுதிய கடிதம் எனக்கு நினைவிருக்கிறது.

அவளுக்காக ஜெபம் செய்த பிறகு, அவளுடைய பயத்தை எதிர்கொள்ள நான் அவளுக்கு அறிவுரை கூறினேன். நற்ச்செய்தி என்னவென்றால், இன்று அவர் மகிழ்ச்சியாக திருமணம் செய்து கொண்டார்.

நிராகரிப்பின் பயம் விற்பனையாளர்களிடையே மிகவும் பொதுவானது, குறிப்பாக அழைப்புகள் செய்பவர்கள் இடையே அதிகம் உள்ளது.

3. தோல்வியின் பயம்
இயேசு கற்பித்த தாளந்துகளின் உவமை எனக்கு நினைவுக்கு வருகிறது. எஜமானன் தனது ஒவ்வொரு ஊழியர்களுக்கும் "தனது திறமைக்கு ஏற்ப" முதலீடு செய்ய தாளந்துகளைக் கொடுத்தார். இரண்டு பேர் புத்திசாலித்தனமாக முதலீடு செய்தனர். இருப்பினும், மூன்றாவது நபர் தனது தாளந்தை புதைத்துவிட்டான். எஜமானன் திரும்பி வந்ததும், அந்த மனிதன் சொன்னான்:

“ஒரு தாலந்தை வாங்கினவன் வந்து: ஆண்டவனே, நீர் விதைக்காத இடத்தில் அறுக்கிறவரும், தெளிக்காத இடத்தில் சேர்க்கிறவருமான கடினமுள்ள மனுஷன் என்று அறிவேன். ஆகையால், நான் பயந்து போய், உமது தாலந்தை நிலத்தில் புதைத்து வைத்தேன்; இதோ, உம்முடையதை வாங்கிக்கொள்ளும் என்றான்.”

‭‭(மத்தேயு 25:24-25 ESV). அந்த மனிதன் ஏன் தன் தாளந்தை பயன்படுத்தவில்லை என்பதை கவனமாக கவனிக்கவும் - அவன் தோல்விக்கு பயந்தான்.

தேவனின் வல்லமையை நாம் அதிகம் அனுபவிக்காமல் இருப்பதற்கும், அவருடைய அற்புதங்களை அதிகமாகப் பார்க்காததற்கும் முதன்மையான காரணங்களில் ஒன்று, தோல்வியைக் கண்டு பயப்படுவதே என்று நான் நம்புகிறேன். பொல்லாத வேலைக்காரனைப் போல, வாய்ப்புகளை மண்ணில் புதைத்துவிட்டு, எதுவும் நடக்காததால் முணுமுணுக்கிறோம்.

தோல்வி பயம் பல மாணவர்களை பீடித்துள்ளது மற்றும் அவர்களின் வாழ்க்கையில் உயர்வதை நிறுத்தியுள்ளது.

“என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள். நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல், பூரணராயும் நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி, பொறுமையானது பூரணகிரியை செய்யக்கடவது.”யாக்கோபு‬ ‭1‬:‭2‬-‭4‬ ‭

தோல்வியைக் கண்டு மனம் தளராதீர்கள். நீங்கள் வெளியேறும்போது மட்டுமே வெற்றி சாத்தியமற்றது - எனவே விட்டுவிடாதீர்கள். தேவன் நம் பக்கம் இருக்கிறார்.
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே, உணர்ச்சிகளை நம்பாமல் விசுவாசத்தின்படி நடக்க கிருபையை தாரும்.

Join our WhatsApp Channel


Most Read
● அந்நிய பாஷை - மகிமை மற்றும் வல்லமையின் மொழி
● நீங்கள் ஏன் இன்னும் காத்திருக்கிறீர்கள்?
● நல்லது சிறந்ததிற்கு எதிரி
● பழி மாறுதல்
● நீதியான கோபத்தைத் தழுவுதல்
● தேவனைச் சேவிப்பது என்றால் என்ன - II
● பொறுமையை தழுவுதல்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్