english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. ஆராதனையின் நறுமணம்
అనుదిన మన్నా

ஆராதனையின் நறுமணம்

Sunday, 9th of February 2025
0 0 429
Categories : ஆராதனை (Worship) எஸ்தரின் ரகசியங்கள்: தொடர் (Secrets Of Esther: Series)
கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். சங்கீதம் 34:1

ஆராதனை என்பது ராஜாவின் நறுமணத்தால் நம்மை மூடுகிறது! உண்மையில், அபிஷேக எண்ணெயில் தோய்ந்திருப்பதை உண்மையான நோக்கம் மாம்சத்தின் எந்த வாசனையையும் மறைப்பதற்க்காம். அதுதான் ராஜாவை நம்முடன் ஒரே அறையில் நிற்க அனுமதிக்கிறது! நான் ஏன் இதைச் சொல்கிறேன்? மாம்சமான எவனும் தேவனுக்கு முன்பாகப் பெருமைபாராட்டாதபடிக்கு அப்படிச் செய்தார். I கொரிந்தியர் 1:29

வழிபாடு என்பது அரசன் முன்னிலையில் வருவதற்கான அணுகல் குறியீடாகும். வேதம் சங்கீதம் 100:1-4ல் கூறுகிறது, “பூமியின் குடிகளே, எல்லாரும் கர்த்தரைக் கெம்பீரமாய்ப் பாடுங்கள். மகிழ்ச்சியோடே கர்த்தருக்கு ஆராதனைசெய்து, ஆனந்தசத்தத்தோடே அவர் சந்நிதிமுன் வாருங்கள். கர்த்தரே தேவனென்று அறியுங்கள்; நாம் அல்ல, அவரே நம்மை உண்டாக்கினார்; நாம் அவர் ஜனங்களும், அவர் மேய்ச்சலின் ஆடுகளுமாயிருக்கிறோம். அவர் வாசல்களில் துதியோடும், அவர் பிராகாரங்களில் புகழ்ச்சியோடும் பிரவேசித்து, அவரைத் துதித்து, அவருடைய நாமத்தை ஸ்தோத்திரியுங்கள்.”

இந்த உண்மையைப் பார்த்தீர்களா? நீங்கள் ராஜா முன்னிலையில் முகம் சுளிக்கவோ அல்லது சோகமாகவோ வர கூடாது. நீங்களும் குறை கூறி வரக்கூடாது; அவர் யார், அவர் என்ன செய்திருக்கிறார், அவர் என்ன செய்வார் என்பதை நினைத்து மகிழ்ச்சியோடே நீங்கள் வர வேண்டும்.

எஸ்தர் 4:1-2ல் வேதம் சொல்கிறது, “நடந்த யாவற்றையும் மொர்தெகாய் அறிந்தபோது, மொர்தெகாய் தன் வஸ்திரங்களைக் கிழித்து, இரட்டுடுத்தி, சாம்பல் போட்டுக்கொண்டு, நகரத்தின் நடுவே புறப்பட்டுப்போய், துயரமுள்ள மகா சத்தத்துடனே அலறிக்கொண்டு, ராஜாவின் அரமனை வாசல் முகப்புமட்டும் வந்தான்; இரட்டுடுத்தினவனாய் ராஜாவின் அரமனை வாசலுக்குள் பிரவேசிக்க ஒருவனுக்கும் உத்தரவில்லை.” ராஜா முன் சோகமாகவும் கவலையாகவும் தோன்றுவது குற்றம் என்பதை இந்த வசனம் காட்டுகிறது. எனவே, மொர்தெகாய் துர்செய்தியைக் கேள்விப்பட்டாலும், அவர் ராஜாவின் முன்னிலையில் இருந்து விலகி இருந்தார்.

மேலும், நெகேமியா 2:1-2 வேதம் கூறுகிறது, அர்தசஷ்டா ராஜாவின் இருபதாம் வருஷம் நிசான் மாதத்திலே, திராட்சரசம் ராஜாவுக்கு முன்பாக வைத்திருக்கையில், நான் அதை எடுத்து அவருக்குக் கொடுத்தேன்; நான் முன் ஒருபோதும் அவர் சமுகத்தில் துக்கமாயிருந்ததில்லை. அப்பொழுது ராஜா என்னைப் பார்த்து: நீ துக்கமுகமாயிருக்கிறது என்ன? உனக்கு வியாதியில்லையே, இது மனதின் துக்கமே ஒழிய வேறொன்றும் அல்ல என்றார்; அப்பொழுது நான் மிகவும் பயந்து,

நெகேமியா ராஜாவுடன் நெருக்கமாக இருந்தார், ஏனென்றால் ராஜாவின் பானத்தை அவரிடம் பாரிமாறுமுன் முன் அதை சுவைத்து பார்ப்பது அவரது வேலை. ஆனால் andru, அவர் சோகமாக இருந்தார், அவரது முன்னிலையில் அது வழக்கமாக இல்லாததால், அந்த நீண்ட முகத்தை ராஜா கவனிக்கப் போவதில்லை. ராஜா மோசமான மனநிலையில் இருந்தால், அவரை தூக்கிலிட உத்தரவிடுவார் என்று நெகேமியா பயந்ததாக வேதம் கூறுகிறது.

எனவே, எஸ்தர் ஆராதனையின் நறுமணத்தை அணிந்திருந்தது போல, நாமும் இருக்க வேண்டும். நம் வாழ்வில் தேவனுடன் உண்மையான ஐக்கியம் இருக்க வேண்டும். உண்மை என்னவென்றால், வழிபாடு சோதனைகளின்யூடே அக்கினியின்யூடே கடந்து செல்லும் போது தேவனுடைய இனிமையான நறுமணத்தை வெளியிடுகிறது. இக்கட்டான சமயங்களில் துதித்து பலிகளை ஏறெடுக்கும் போது ராஜாதி ராஜாவுக்கு மிகவும் இனிமையானதாக இருக்கிறது. இது அவ்விசுவாசத்திற்கும் சந்தேகத்திற்கும் பதிலாக நம்பிக்கையையும் விசுவாசத்தையும் வெளிப்படுத்துவதாகும். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நம் ஆராதனையை நல்ல நேரங்களுக்கு மட்டுமென்று மட்டுப்படுத்தாமல், விஷயங்கள் நமக்கு சாதகமாக இல்லாதபோதும் ஆராதிக்க வேண்டும்.

டி.ஏ. கார்சன் ஒருமுறை கூறினார், "அனைத்து தார்மீக, உணர்வுள்ள உயிரினங்கள் கடவுளுக்கு சரியான பதிலளிப்பாகும், எல்லா மரியாதையையும் மதிப்பையும் தங்கள் படைப்பாளர்-கடவுளுக்குத் துல்லியமாகக் கூறுகிறது, ஏனென்றால் அவர் தகுதியானவர், மகிழ்ச்சிகரமானவர்." தாவீது ராஜா ஏற்கனவே ராஜாவாக அபிஷேகம் செய்யப்பட் இருந்தார். ஆனாலும் காரியங்கள் சரியாக செல்லாதபோதிலும், வாழ்க்கை அவருக்கு பின்னோக்கி சென்றுகொண்டிருந்த போதிலும் அவர் கூறினார், கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள். என்னோடேகூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக. சங்கீதம் 34:2,3

எனவே, அவமானங்களை விலக்கி, உங்கள் இருதயத்தை ஆராதனையில் நிரப்புங்கள். அந்த சவால்களிலிருந்து உங்களை தப்புவிக்க தேவன்மேல் நம்பிக்கை வையுங்கள். நீங்கள் அழுதது போதும்; ஆராதிக்கவேண்டிய நேரம் இது. 

Bible Reading: Leviticus 18-20
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், என் வாழ்க்கையில் நீர் செய்த நன்மைகளுக்கு நன்றி. எப்பொழுதும் நீர் எனக்கு நல்லவரை இருப்பதற்க்காக உமது திருநாமத்தைப் போற்றுகிறேன்உம்மை ஆராதிப்பதில் நிலையாக இருக்க நீர் எனக்கு உதவ வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். என் வாழ்வில் எப்போதும் ஆராதனையின் நறுமணம் வீச வேண்டும் என்று ஜெபிக்கிறேன். அதனால் இன்றிலிருந்து துக்கத்தின் ஆடையை எரிந்துவிட்டு துதியின் ஆடையை எடுத்துக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில், ஆமென்.


Join our WhatsApp Channel


Most Read
● சுய ஏமாற்றுதல் என்றால் என்ன? - I
● வேதாகம செழிப்புக்கான இரகசியங்கள்
● மற்றவர்களுடன் சமாதானமாக வாழுங்கள்
● வார்த்தையின் உண்மைதன்மை
● முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே
● வார்த்தையின் தாக்கம்
● தேவனின் மகிழ்ச்சி
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్