english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. ஒரு தேசத்தைக் காப்பாற்றிய காத்திருப்பு
అనుదిన మన్నా

ஒரு தேசத்தைக் காப்பாற்றிய காத்திருப்பு

Sunday, 16th of February 2025
0 0 303
Categories : எஸ்தரின் ரகசியங்கள்: தொடர் (Secrets Of Esther: Series)
“அதற்கு எஸ்தர் பிரதியுத்தரமாக: ராஜாவின் கண்களில் எனக்குக் கிருபை கிடைத்து, என்வேண்டுதலைக் கட்டளையிடவும், என் விண்ணப்பத்தின்படி செய்யவும், ராஜாவுக்குச்சித்தமாயிருந்தால், ராஜாவும் ஆமானும் நான் இன்னும் தங்களுக்குச் செய்யப்போகிற விருந்துக்குவரவேண்டும் என்பதே என் வேண்டுதலும் என் விண்ணப்பமுமாயிருக்கிறது; நாளைக்கு ராஜாவின்சொற்படி செய்வேன் என்றாள்.” எஸ்தர்‬ ‭5‬:‭7‬-‭8‬ ‭

ஏற்கனவே மூன்று நாட்கள் உபவாசித்து ஜெபித்திருந்ததால், ஆமானின் ஆணையிலிருந்துயூதர்களைக் காப்பாற்றுவதற்கான தனது மனுவைப் பற்றி ராஜாவிடம் பேச எஸ்தருக்கு வாய்ப்புவழங்கப்பட்டது. தன் மனுவை உடனடியாக வழங்குவதற்குப் பதிலாக, ராஜாவையும் ஆமானையும்விருந்துக்கு அழைத்தாள். இந்த வாய்ப்பை அவள் பயன்படுத்திக் கொள்வாள் என்று நான் நினைக்கலாம், ஆனால் எஸ்தர் இன்னும் ஒரு இரவு காத்திருக்க முடிவு செய்தார். மறுநாள் இரவு, இரவு உணவின் போது தன் மனுவை அளிக்க முடிவு செய்தாள். இந்த கூடுதல் நாள் காத்திருந்ததன்மூலம், எஸ்தர் தன் சார்பாக தேவன் கிரியை seiya அனுமதித்தாள்.

எஸ்தர் 6:1-ஐ நீங்கள் வாசிப்பீர்களேயானால், தேவன் குறித்த நேரத்தில், இந்த குறிப்பிட்ட இரவில், ராஜாவால் தூங்க முடியவில்லை என்பதை நீங்கள் காணமுடியும். நாளாகம புத்தகங்களை கொண்டு வந்து விசித்தாலிவது ராஜா தூங்குவார் என்பதற்காக நாளாகம புத்தகங்கள் கொண்டுவரப்பட்டன. எஸ்தர் முந்தைய நாள் தனது மனுவை முன்வைத்திருந்தால், மொர்தெகாயைகொலை செய்வதற்கான சதித்திட்டத்தைபற்றியும் மொர்தெகாயின் பங்கைப் பற்றியும் ராஜாபடிக்கும் வாய்ப்பை அவள் இழந்திருப்பாள்.

நாம் ஒரு ஜெட் யுகத்தில் இருக்கிறோம், இங்கு வேகம் மிகவும் முக்கியமானது. யாருக்கும் காத்திருக்க விரும்பவில்லை. காத்திருப்பது நேரத்தை வீணடிப்பது போன்றது. நாம் உடனடிமனநிறைவு அடையவேண்டும் என்று கலாச்சாரத்தில் வாழ்கிறோம். நமக்கு வேண்டியது இப்போதே வந்துவிட வேண்டும், கிடைக்காவிட்டால் விரக்தி அடைகிறோம். சிலர் தாங்கள்விரும்பியதைப் பெற கொலையும் செய்கிறார்கள். மற்றவர்கள் காத்திருக்கக்கூடிய பொருள்களைப்பெறுவதற்காக தங்கள் ஆத்துமாவை விற்கிறார்கள். வளர்ச்சி என்ற கருத்து குப்பையில்போடப்பட்டுள்ளது. இப்போது நாம் செய்கிறதெல்லாம் நமது இலக்கை அடைய செயல்முறையைத்தாண்டுவதுதான்.

உண்மையில், தேவனுடனான நெருக்கத்திற்கு இதைவிடப் பெரிய எதிரி இல்லை. ஒரு நபராக இருக்கட்டும் அல்லது ஏதாவது ஒரு பொருளாக இருக்கட்டும், உண்மையிலேயே முக்கியமானதாக இருந்தால், அதற்கு காத்திருப்பது நல்லது. நாம் எதை மதிக்கிறோமோ அதற்காக மட்டுமே காத்திருக்கிறோம். காத்திருப்பதென்பதோடு ஆராதனை. ஒரு பழங்கால மன்னரின் (அல்லது ஒருநவீன தலைவரின் நெறிமுறையை நீங்கள் புறக்கணிக்க விரும்பினால்), எல்லாம் உங்களுக்கு நிராகரிக்கப்படும், மேலும் தீவிர நிகழ்வுகளில், நீங்கள் அரியணையை "விரைந்து" நெருங்க முயற்சித்தால் தூக்கிலிடவும் படலாம்.

“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச்செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.” ஏசாயா‬ ‭40‬:‭31‬ ‭

ஒரு ஞானி ஒருமுறை எப்படி சொன்னார், நீங்கள் மேலே குதித்தால், நீங்கள் கீழே வந்து விடுவீர்கள், ஆனால் நீங்கள் மேலே வளருவீர்களே ஆனால், நீங்கள் அங்கேயே தரித்திருப்பீர்கள். எனவே நாம் கலாச்சாரத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும், காத்திருப்பின்நற்பண்புகளை உள்வாங்க வேண்டும். வாழ்க்கையில் கழுகைப் போல உயர உயர எழும்புவதற்கு காத்திருக்குதலே திறவுகோல்.

அந்த வசனம் கழுகின் வாழ்க்கை முறையை விளக்குகிறது. மற்ற பறவைகளைப் போல் கழுகுபறப்பதில்லை; அது உயர பறக்கிறது. அது சாத்தியமற்ற உயரத்தில் அதன் இறக்கைகளைவிரிக்கிறது. புயல் வீசும் போது அது மிகச்சிறப்பாக உயர்ந்து, அதன் பிறகு முழு நீள இறக்கைகளைவிரித்து, புயலின் அலைகளில் சவாரி செய்வதை ரசிக்கும். ஆனால், இந்த அற்புதமான சாதனையைஅடைய, அது காத்திருக்க வேண்டும். கழுகு புயலை உருவாக்க முடியாது; அது புயலுக்கு எவ்வளவுநேரம் எடுக்கும் என்று மலைகளில் காத்திருக்க வேண்டும்.

இதுவே நமது வாழ்க்கை முறையாகவும் இருக்க வேண்டும். நாம் எதிர்பார்க்கின்ற சிறந்தது நிச்சயம் நடக்கும். நாம் எங்கே இருக்கிறோம் என்பது நமது முடிவு அல்ல, அது ஒரு வளைவுமட்டுமே. தேவன் எரேமியா 29:11 இல் சொல்லுகிறார், “நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவைஉங்களுக்குக் கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன்என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.” நீங்கள் காத்திருக்கும் போதுதான் உங்களுக்காna அவருடைய திட்டங்கள்நிறைவேறும். திருப்தியை செய்வதேi சரியான நேரம் வரை ஒத்திவைக்க கற்றுக்கொள்ளுங்கள்.

சிலர் சீக்கிரம் அடைந்து மகிமையை இழந்துவிட்டார்கள். மற்றவர்கள் வாழ்ந்து மறக்கப்படுகிறார்கள். ஆனால் சரியான தருணத்திற்காக நீங்கள் காத்திருக்கும்போது, ​​​​மகிமைநீடிக்கும். நாங்கள் நேர்தியான தேவனை ஆராதிக்கிறோம். வேதம் லூக்கா 2:51ல் இயேசுவைப்பற்றி சொல்லுகிறது, “பின்பு அவர் அவர்களுடனே கூடப்போய், நாசரேத்தூரில் சேர்ந்து, அவர்களுக்குக்கீழ்ப்படிந்திருந்தார். அவருடைய தாயார் இந்தச் சங்கதிகளையெல்லாம் தன் இருதயத்திலேவைத்துக்கொண்டாள்.” அவர் தேவாலயத்தில்  ஆசாரியர்களுடனும்  அப்போஸ்தலருடனும் ஒரு உரையாடலை முடித்திருந்தார், மேலும் அவர் மீட்பர் என்று அறிவிக்க இது ஒரு சரியான வாய்ப்பாக அது இருந்தது. ஆனால், இல்லை, நேரம்கனியவில்லை. அவர் பன்னிரண்டு வயதாக இருந்தார், மேலும் அவர் தனது பெற்றோரைப் பின்பற்றவேண்டியிருந்தது, அவர்களுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்.

எனவே, காத்திருங்கள்! எதையும் பெற நீங்கள் திருட வேண்டியதில்லை. தேவனால் நீங்கள் எதிர்ப்பார்கின்ற காரியத்தை கொடுக்க முடியும். ஆனால் அவருடைய நேரத்திற்காக காத்திருக்கும் அளவுக்கு நீங்கள் அவரை நம்புங்கள் என்று கேட்கிறார்.

Bible Reading: Numbers 7
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் நாமத்தில், பொறுமையின் நற்பண்பினால் என் இதயத்தை நிரப்பும்படி நான்ஜெபிக்கிறேன். வாழ்க்கையில் எனக்கு ஒதுக்கப்பட்டநேரத்திற்காக காத்திருக்க எனக்கு உதவி செய்யும். என் இருதயம் பொறுமையின் ஆவியால்நிரப்பப்பட்டிருக்கும் என்று நான் கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● காலேபின் ஆவி
● நீங்கள் யாருடன் நடக்கிறீர்கள்?
● விலைக்கிரயம் செலுத்துதல்
● கர்த்தர் இருதயத்தை ஆராய்கிறார்
● தேவனுக்காக மற்றும் தேவனுக்கும்
● அசுத்த ஆவிகளின் நுழைவிடத்தை மூடுதல் - II
● பாலியல் சோதனைகளை எவ்வாறு மேற்கொள்வது
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్