english हिंदी मराठी മലയാളം தமிழ் ಕನ್ನಡ Contact us మమ్మల్ని సంప్రదించండి స్ఫోటిఫై లో వినండి స్ఫోటిఫై లో వినండి Download on the App Storeయాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి Get it on Google Play ఆండ్రాయిడ్ యాప్ ను డౌన్‌లోడ్ చేసుకోండి
 
లాగిన్
ఆన్‌లైన్‌లో ఇవ్వండి
లాగిన్
  • హోమ్
  • ఈవెంట్లు
  • ప్రత్యక్షం
  • టీవీ
  • నోహ్ ట్యూబ్
  • స్తుతులు
  • వార్తలు
  • మన్నా
  • ప్రార్థనలు
  • ఒప్పుకోలు
  • కలలు
  • ఇ-బుక్స్
  • వ్యాఖ్యానం
  • మృత్యు వార్తలు
  • ఒయాసిస్
  1. హోమ్
  2. అనుదిన మన్నా
  3. சுய மகிமை என்னும் கண்ணி வலை
అనుదిన మన్నా

சுய மகிமை என்னும் கண்ணி வலை

Tuesday, 8th of April 2025
0 0 311
இன்றைய சமூகத்தில் வெற்றி, புகழின் சலசலப்புதான் அதிகம். 
நாம் சிறந்தவர்களாகவும், பிரகாசமானவர்களாகவும், வெற்றிகரமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று நமக்குச் சொல்லும் செய்திகளால் நாம் தொடர்ந்து உந்தி தள்ளப்படுகின்றோம். 
சாதிக்க வேண்டிய அழுத்தம் அதிகமாக இருக்கலாம், மேலும் சுயமரியாதையின் வலையில் சிக்குவது எளிது. 
இருப்பினும், கிறிஸ்தவர்களாகிய நாம் கவனம் செலுத்துவது நம்மீது அல்ல, மாறாக தேவன் மீதுதான் இருக்க வேண்டும்.
 
எல்லா மகிமையையும் தேவனுக்குக் கொடுக்க வேண்டும் என்று வேதம் நமக்குக் கற்பிக்கிறது. 
1 கொரிந்தியர் 10:31ல், "ஆகையால், நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், அனைத்தையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்" என்று கூறுகிறது. 
நாம் நம்மை மகிமைப்படுத்த முற்படும்போது, ​​​​நாம் நம்மை தேவனுக்கு மேலாக வைக்கிறோம். 
இது விக்கிரக வழிபாட்டின் ஒரு வடிவம், நாம் எதற்காகப் படைக்கப்பட்டோம் என்பதல்ல.
 
என்னுடன் அப்போஸ்தலர் 12:21-23 க்கு செல்லுங்கள்

21 குறித்தநாளிலே ஏரோது ராஜாவஸ்திரம் தரித்துக்கொண்டு, சிங்காசனத்தின் மேல் உட்கார்ந்து, அவர்களுக்குப் பிரசங்கம்பண்ணினான். 
22 அப்பொழுது ஜனங்கள் இது மனுஷசத்தமல்ல, இது தேவசத்தம் என்று ஆர்ப்பரித்தார்கள்.

 ஏரோது தன்னைச் சுற்றியுள்ள மக்களால் பாராட்டப்படுவதையும் உயர்த்துவதையும் விரும்பிய ஒரு மனிதர். 
சொல்லப்போனால், தீரு மற்றும் சீதோன் மக்கள் அவரைக் கடவுளாகப் போற்றும் அளவிற்குச் சென்றனர். 
அவர் அவர்களைத் தடுத்து, “நான் ஒரு அரசன்,நான் கடவுள் இல்லை. 
தேவன் தன் கிருபையால் எனக்கு ஆற்றலை வழங்குகிறார். 
எனக்கென்று எந்த அதிகாரமும் இல்லை என்று சொல்லாமல். ஏரோது தனது வெற்றிக்கும் செல்வாக்கிற்கும் தேவனுக்கு மகிமையைக் கொடுப்பதற்குப் பதிலாக, மக்களின் புகழ்ச்சியில் மகிழ்ச்சியடைந்தார். 
நான் உங்களை எச்சரிக்க வேண்டிய ஆபத்து உள்ளது - தேவனுக்கு மகிமை கொடுக்காத ஆபத்து.

அவன் தேவனுக்கு மகிமையைச்செலுத்தாதபடியினால் உடனே கர்த்தருடைய தூதன் அவனை அடித்தான். அவன் புழுப்புழுத்து இறந்தான். 
(அப்போஸ்தலர் 12:23)

கர்த்தருடைய தூதன் ஏரோதைத் அடித்தபோது, ​​சரீரபிரகாரமாக அதன் விளைவு அவன் புழுப்புழுத்து இறந்தான் என்று வேதம் சொல்கிறது.
 
பண்டைய யூதேயாவின் மன்னரான மகா ஏரோது, நாள்பட்ட சிறுநீரக நோய் மற்றும் புழுக்களால் அவரது பிறப்புறுப்பில் ஏற்பட்ட குடலிறக்க நோய்களின் கலவையால் தனது 69 வயதில் காலமானார் என்று சமீபத்திய மருத்துவ பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. 
அவரது துன்பத்தின் சரியான காலக்கெடு தெரியவில்லை என்றாலும், இந்த நிலை மாதங்கள் அல்லது இரண்டு வருடங்கள் கூட நீடித்திருக்கலாம் என்று நிபுணர்கள் யூகிக்கின்றனர்.
 
நம் வாழ்வில் தேவனின் பங்கை ஒப்புக்கொள்ள மறுத்து, ஏரோதுவைப் போல நமக்காக மகிமையைத் தேடும்போது, ​​​​நாம் நம்மை ஆபத்தான நிலைக்குத் தள்ளுகிறோம் என்பதை இது ஒரு கடுமையான நினைவூட்டலாகும்.

மேக்ஸ் ஒரு திறமையான நற்செய்தி இசைக்கலைஞர் ஆவார், அவர் எப்போதும் இசையில் ஆர்வமாக இருந்தார் மற்றும் அவரது இசைக்கலையில் தேர்ச்சி பெறுவதற்காக தனது வாழ்க்கையின் பெரும்பகுதியை அர்ப்பணித்தார். 
அவர் ஒரு பிரபலமான நற்செய்தி இசைக்கலைஞராக வேண்டும், டிக்கெட் விற்று தீறும் அளவில் உள்ள கூட்டங்களில் இசைக்க வேண்டும் மற்றும் உலகளவில் ரசிகர்களால் போற்றப்பட வேண்டும் என்று கனவு கண்டார்.
 
மிக விரைவில் அவர் பெரிய,பெரிய, கூட்டங்களில் இசைக்கலானார். மேலும் அவருக்கு ரசிகர் பட்டாளம் பெருகியது 
நாளுக்கு நாள் தன் வளர்ச்சியில். 
மாக்ஸ் மெய்சிலிர்த்துப் போனார்; 
இறுதியாக அவர் நினைத்ததை சாதித்தார்.எவ்வளவுக்கதிகம் அவர் 
புகழ் வளர்ந்ததோ, அவ்வளவுக்கதிகம் அவருடைய ஈகோவும் வளர்ந்தது. 
அவர் தனது சொந்த வெற்றியில் அதிக கவனம் செலுத்தினார், மேலும் தேவனை மகிமைப்படுத்துவதற்காக இசைக்க ஆரம்பித்த அவர் நாள் செல்ல செல்ல மக்களின் ஆரவரதிற்காக இசைக்க தொடங்கினார்.ஒரு நாள்,ஆயிரக்கணக்கானவர்களை தன் இசை வெல்லத்தில் வழிநடத்திச் சென்றபோது, ​​அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது.

அவர் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டபோது தேவன் அவருக்கு தரிசனமாகி அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட காரணத்தைக் கூறினார்.உடனே அவர் மனம் கசந்து அழுது தன்னை தேவனுக்கு ஒப்புக்கொடுத்தார்.இதினால் அவருக்கு அற்புத சுகம் கிடைத்தது.இன்று அவரின் பாடல்கள் ஆயிரக்கணக்கான மக்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளது.
(சில காரணங்களால்  பெயரை மாற்றிவிட்டேன்)

தேவனை மகிமைப்படுத்துவதே நம்முடைய நோக்கம் என்பதை வேதம் நமக்கு நினைவூட்டுகிறது. 
சங்கீதம் 86:9,"ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா ஜாதிகளும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது நாமத்தை மகிமைப்படுத்துவார்".என்று கூறுகிறது.
நமது வார்த்தைகள், செயல்கள் மற்றும் மனப்பான்மைகள் மூலம் தேவனுக்கு மகிமையைக் கொண்டுவருவதே வாழ்க்கையில் நமது இறுதி இலக்காக இருக்க வேண்டும் என்பதே இதன் பொருள்.

Bible Reading: 1 Samuel 20-21
ప్రార్థన
பிதாவே, இயேசுவின் பெயரால், நான் இன்று உங்கள் முன் வந்து, எல்லா மகிமையும் உங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்பதை ஒப்புக்கொள்கிறேன். 
நான் செய்யும் எல்லாவற்றிலும் உமக்கு மகிமை சேர்க்கும் உமது வார்த்தைக்கு நன்றி. 
உமக்கு மகிமை கொடுப்பதை விட எனக்கே மகிமை தேடும் வலையில் நான் விழுந்த காலங்களுக்கு என்னை மன்னியுங்கள்.


Join our WhatsApp Channel


Most Read
● கனத்துக்குரிய வாழ்க்கையை வாழுங்கள்
● கர்த்தரிடம் திரும்புவோம்
● காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்
● தேவன் கொடுத்த சிறந்த வளம்
● உள்ளே உள்ள பொக்கிஷம்
● நாள் 22: 40 நாட்கள் உபவாச
● எப்போது அமைதியாக இருக்க வேண்டும், எப்போது பேச வேண்டும்
కమెంట్లు
మమ్మల్ని సంప్రదించండి
ఫోన్: +91 8356956746
+91 9137395828
వాట్సాప్: +91 8356956746
ఇమెయిల్: [email protected]
చిరునామా :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
యాప్ను పొందండి
Download on the App Store
Get it on Google Play
మెయిలింగ్ లిస్టులో చేరండి
అన్వేషించండి
ఈవెంట్లు
ప్రత్యక్షం
నోహ్ ట్యూబ్
టీవీ
విరాళం
మన్నా
స్తుతులు
ఒప్పుకోలు
కలలు
సంప్రదించండి
© 2025 Karuna Sadan, India.
➤
లాగిన్
దయచేసి ఈ సైట్‌లో కమెంట్ మరియు లైక్ చేయడానికి మీ నోహ్ అకౌంట్కు లాగిన్ అవ్వండి.
లాగిన్