சங்கீதம் 23:1-6
1 கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்.நான் ஒரு குறைவும் அடைவதில்லை.
2 அவர் என்னைப் புல்லுள்ள இடங்களில் மேய்த்து, அமைதி நிலவும் தண்ணீர்கள் அருகில் என்னைக் கொண்டுபோய் விடுகிறார்.
3 அவர் என் ஆன்மாவை பலபடுத்தி, தம்முடைய பெயருக்கு ஏற்ப என்னை நீதியின் பாதைகளில் நடத்துகிறார்.
4 நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் தீமைக்குப் பயப்படமாட்டேன், தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர், உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்.
5 என் பகையாளிக்கு முன்பாக நீர் எனக்கு ஒரு விருந்தை தயார் செய்து , என் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணுகிறீர், என் உள்ளம் சந்தோஷத்தில் பொங்குகிறது.
6 என் ஆயுசின் நாளெல்லாம் நன்மையும் கிருபையும் என்னைத் தொடரும், நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் வாழ்வேன்.
Join our WhatsApp Channel