தினசரி மன்னா
0
0
88
அந்நிய பாஷை - மகிமை மற்றும் வல்லமையின் மொழி
Saturday, 19th of July 2025
Categories :
நாக்கு (Tongue)
மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு, கர்த்தராகிய இயேசு தம்மை விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களை பின் வருமாறு அறிவித்தார்.
“விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.”
மாற்கு 16:17-18
கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை தங்கள் தேவனாகவும், ஆண்டவராகவும், இரட்சகராகவும் விசுவாசிப்பவர்களுக்கு இந்த அடையாளங்கள் பின்த்தொடரும்.
1. அவர்கள் பிசாசுகளைத் துரத்துவார்கள் - ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட அதிகாரம்
2. அவர்கள் நவமான பாஷைகளைப் பேசுவார்கள் - ஒரு இயற்கைக்கு அப்பாற்பட்ட மொழி
3. அவர்கள் சர்ப்பங்களை எடுப்பார்கள் - இயற்கைக்கு அப்பாற்பட்ட பாதுகாப்பு
4. சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது - இயற்கைக்கு அப்பாற்பட்ட அடைக்கலம்
5. வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் - இயற்கைக்கு அப்பாற்பட்ட வல்லமை.
மேலே உள்ள வசனத்தில், அந்நிய பாஷைகளில் பேசுவதைக் மற்ற இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளங்களின் அதே வல்லமையின் சொல்லப்பட்டிருப்பதை கவனியுங்கள். அந்நிய பாஷைகளில் பேசுவது மனிதனின் இயற்கைக்கு அப்பாற்பட்ட தன்மையைக் குறிக்கிறது என்பதை இது தெளிவுப்படுத்துகிறது.
நான் தற்கொலை செய்து கொள்ளாமல் ஆண்டவரால் வியத்தகு முறையில் காப்பாற்றப்பட்டேன். தெருவில் ஒருவர் என்னுடன் நற்செய்தியைப் பகிர்ந்து கொண்டார். (சுவிசேஷத்தில் நான் மிகவும் ஆர்வமாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம்). இயேசுவின் மீது பேரார்வம் கொண்ட இளைஞர்களின் குழுவில் நான் சேர்ந்தேன்.
ஒரு இரவு, மிகவும் தாமதமாக, நாங்கள் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது (எங்களில் சிலர்), அதிகாலை 2:30 மணியளவில், என் உடல் முழுவதும் நெருப்பைப் போல தேவனின் வல்லமையை நான் அனுபவித்தேன். அக்கினியாக எரிந்து கொண்டிருந்தது. நான் அடக்க முடியாமல் அழ ஆரம்பித்தேன். அதே சமயம் ஏதோ என் சரீரத்தில் மிகுந்த உக்கிரத்துடன் பாய்ச்சப்பட்டது போல உணர்ந்தேன்.
இப்படியெல்லாம் நடக்கும் போது, என் வாய் நடுங்கிக் கொண்டிருந்தது, என் உதடுகள் வழக்கத்திற்கு மாறான உக்கிரத்தில் அதிர்ந்தன. நான் தேவனை துதிக்க முயற்சித்தேன், வேதம் கூறுவது போல், "உன் வாயை விரிவாய்த் திற, நான் அதை நிரப்புவேன்.” சங்கீதம் 81:10 கர்த்தர் என் வாயை ஒரு புதிய பாஷைகளில் நிரப்பினார் - அது மகிமையின் மொழி.
நான் பரிசுத்த ஆவியில் மகிமையுடன் ஞானஸ்நானம் பெற்றேன். தேவன் பட்சபாதமுள்ளவரல்லவே. அவர் எனக்காக செய்ததை உங்களுக்காகவும் செய்ய முடியும். (அப்போஸ்தலர் 10:34)
Bible Reading: Proverbs 25-28
வாக்குமூலம்
“இதோ, நான் உன் வாயிலிட்ட என் வார்த்தைகளை அக்கினியும், இந்த ஜனத்தை விறகும் ஆக்குவேன், அது இவர்களைப் பட்சிக்கும்.” எரேமியா 5:14
Join our WhatsApp Channel

Most Read
● நாள் 16: 40 நாட்கள் உபவாசம் & ஜெபம்● தெய்வீக ஒழுக்கத்தின் தன்மை-2
● உங்கள் நாள் உங்களை வரையறுக்கிறது
● ஆவிக்குரிய பிரமாணம் : ஐக்கியத்தின் பிரமாணம்
● மேற்கொள்ளூம் விசுவாசம்
● துதி பெருக்கத்தை கொண்டுவரும்
● கிறிஸ்துவை மையமாகக் கொண்ட வீட்டைக் கட்டுதல்
கருத்துகள்