நீங்கள் ஆதியாகமம் 1- ம்அதிகாரத்தில் படித்தால் தேவன்பூமியையும் அதில் உள்ள சகலவற்றையும் படைத்ததைக் காண்பீர்கள். சிருஷ்டிப்பின் ஒவ்வொரு கட்டத்திலும், தேவன்தனது வேலையை இடைநிறுத்தி மதிப்பீடு செய்தார். "அது நல்லது என்று தேவன் கண்டார்" (ஆதியாகமம் 1:4, 10, 12, 18, 21, 25)
இறுதியாக, தேவன் தனது சொந்த சாயலில் மனிதனைப் படைக்க முடிவு செய்தார். பின்னர் அவர் ஆதாமை தனது சொந்த ரூபத்திலும் சாயலிலும் படைத்தார். முதல் மனிதனான ஆதாம், ஏதேன் தோட்டத்தில் வேறு எந்த உயிரினத்தையும் போல் இல்லை. ஆனால் ஆதாமை தோட்டத்தில் வைத்த பிறகு, இன்னும் ஏதோ ஒன்று குறைவுள்ளதாய் தேவன் கவனித்தார்.
ஆதாம் பல அற்புதமான விலங்குகள் மற்றும் பறவைகளால் சூழப்பட்டிருந்தாலும், அவர் மிகவும் நல்ல சூழலில் இருந்தாலும் - அவர் தனிமையில் இருப்பதை தேவன்கண்டார். உண்மை என்னவென்றால், நீங்கள் ஒரு கூட்டத்தில் இருந்தாலும்கூட, இன்னும் தனிமையாக உணரமுடியும். ஆதாமின் தனிமைதான் தேவனின் கவனத்தை ஈர்த்தது, தேவன் நல்லதல்ல என்று அழைத்த முதல் காரியம்– தனிமை. மேலும் கர்த்தராகிய ஆண்டவர் சொன்னார், "மனிதன் தனியாக இருப்பது நல்லதல்ல (ஆதியாகமம் 2:18)
கர்த்தராகிய இயேசு சிலுவையில் தொங்கியபோது, அவர் தம்முடைய தாயையும் அவர் நேசித்த சீஷரையும் நிற்பதைக் கண்டார். பின்னர் அவர் தனது தாயிடம், ஸ்திரீயே, இதோ உன் மகன்!" பின்னர் அவர் சீஷனிடம், "இதோ உன் தாய்!" அந்த மணி நேரத்திலிருந்து அந்தச் சீஷன் அவளைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றான். (யோவான் 19:26-27)
இயேசு ஏன் இப்படி கூறினார்? நம் ஆண்டவர் சிலுவையில் தொங்கிய நேரத்தில், வலியும் வேதனையில் இருந்த போதிலும் கூட அவர் தனது தாயை தனித்தும்தனிமையாகவும் இருக்கிறதை கண்டார் என்று நான் நம்புகிறேன். வயதான காலத்தில் தன்னைக் கவனித்துக் கொள்ள எப்படி அவர்களை விட்டுவிட முடியும்? உன் ஆத்துமாவையும் ஒரு பட்டயம் உருவிப்போகும் என்ற சிமியோனின் தீர்க்கதரிசனத்தை கண்டிருக்கலாம். (லூக்கா 2:35) சிலுவையில் இருந்தபோதும், இயேசு தம் தாயின் தேவையைப் பூர்த்தி செய்தார். அவரின் தனிமையை அவர் போக்கினார்.
சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த போதிலும் மீட்பர் ஒருவரின் தேவைகளை பூர்த்தி செய்ய முடியும் என்றால், இன்று அவர் பரலோகத்தில் மாட்சிமையின் சிம்மாசனத்தின் வலது பக்கத்தில் அமர்ந்திருக்கும் போது எவ்வளவு அதிகமாக இருக்கும். (எபிரெயர் 8:1)
நீங்கள் தனிமையுடன் போராடுகிறீர்களா? நீங்கள் தனியாகவும் நிராகரிக்கப்பட்டதாகவும் உணர்கிறீர்களா? அப்படியானால் இயேசுவை நோக்கிப் பார்க்க வேண்டிய நேரம் இது - அனைத்தையும் அனுபவித்தவர், உங்கள் தனிமையிலிருந்து உங்களை விடுவிக்கும் வல்லமை கொண்டவர்.
Bible Reading: Proverbs 29-31, Ecclesiastes 1
ஜெபம்
பிதாவே, இந்த நேரத்தில் நான் எப்படி உணர்ந்தாலும் பொருட்டியில்லை. "நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை" என்று வாக்களித்திருக்கீறீர். நான் இந்த வார்த்தையைக் பற்றிக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● பரலோகம் என்று அழைக்கப்படும் இடம்● தயவு முக்கியம்
● வதந்திகள் உறவுகளை அழிக்கின்றன
● ராஜ்யத்திற்கான பாதையைத் தழுவுதல்
● நீங்கள் யாருடன் நடக்கிறீர்கள்?
● ஞானமடையுங்கள்
● ஆராதனையின் நறுமணம்
கருத்துகள்
