தினசரி மன்னா
0
0
31
உங்கள் வேலையைப் பிசாசு எப்படித் தடுக்கிறான்
Saturday, 2nd of August 2025
Categories :
சலனம் (Temptation)
விசுவாசம்(Relationship)
கவனச்சிதறல் மிகவும் வெற்றிகரமான கருவிகளில் ஒன்றாகும், இது எதிரி (பிசாசு) தேவனின் பிள்ளைகளுக்கு எதிராக அவர்களின் தெய்வீக வேலையை நிறைவேற்றுவதைத் தடுக்கிறது.
“தேவையானது ஒன்றே, மரியாள் தன்னை விட்டெடுபடாத நல்ல பங்கைத் தெரிந்துகொண்டாள் என்றார்.” லூக்கா 10:42
எதிரி செய்ய வேண்டியதெல்லாம், நாம் அழைக்கப்படும் ஒரு முதன்மைப் பணியிலிருந்து நமது பார்வையை மாற்றுவதுதான். எதிரி நம் கவனத்தை பல விஷயங்களில் வெற்றிகரமாக மாற்றினான். பெரும்பாலானவர்கள் எல்லாத் திசைகளிலும் நடக்கத் தொடங்கி, விரக்தியடைந்து, மனச்சோர்வடைந்த நிலையில்ல நடந்துக்கொண்டிருப்பதே இதின் முடிவாகும்.
பல ஆண்டுகளாக, எதிரி தேவனால் கொடுக்கப்பட்ட பணியிலிருந்து ஜனங்களை எவ்வாறு திசை திருப்புகிறான் என்பதை நான் பார்த்திருக்கிறேன். சிலருக்கு, மது வழங்குகிறான்; சிலருக்கு, அவன் போதை பொருட்கள் மற்றும் பிற பொருட்களை வழங்குகிறான். சிலருக்கு, மக்களை ஒரு நாளைக்கு மணிக்கணக்கில் கட்டுக்குள் வைத்திருக்கும் பாதிப்பில்லாத இணைய விளையாட்டுகளை அவன் வழங்குகிறான். பலனற்ற நாட்களும் வாரங்களும் கடந்து செல்கின்றன.
ஒரு சமயம் தங்கள் சபையில்ல நடந்த உண்மைச் சம்பவத்தைப் பற்றி ஒரு போதகர் என்னிடம் பகிர்ந்து கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு இளம் பெண் அவர்களது ஆராதனைகளில் தவறாமல் கலந்து கொண்டாள். அவள் மிகவும் ஜெபித்து, பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டாள். அவள் பாடகர் குழுவை வழிநடத்துவாள், வேதத்தை வாசிப்பாள், ஜனங்களுக்கு ஜெபம் செய்வாள்.
ஒரு குறிப்பிட்ட நாள், ஒரு வாலிபன் அவர்களின் ஆராதனையில் கலந்து கொள்ள ஆரம்பித்தான். அவர் சபையில் கூட சரியாக வரவில்லை விரைவில் இந்த பெண் அவனுடன் பேச ஆரம்பித்தாள், சில காரணங்களைச் சொல்லி ஆராதனைகளை தவிர்த்துவிடுவாள். மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை, அப்பெண்ணுக்கு திருமணமாகிய செய்தி போதகருக்கு கிடைத்தது. சபை ஒருபுறம் இருக்க, அதன் பிறகு நகரமெங்கும் உள்ள கிறிஸ்தவ கூட்டங்களில் கூட அவளைக் காணவில்லை. வருத்தம் ஆனால் உண்மை!
இப்படித்தான் பிசாசு தகாத உறவுகளைப் பயன்படுத்தி மக்களைத் தங்கள் பணிகளில் இருந்து விலக்கிக் கொள்கிறான். எல்லா உறவுகளும் தவறு என்று நான் சொல்லவில்லை. இருப்பினும், தவறான நேரத்தில் சரியான உறவு கூட ஒரு பேரழிவை ஏற்படுத்தும்.
“ஆலோசனையில்லாத இடத்தில் ஜனங்கள் விழுந்துபோவார்கள்; அநேக ஆலோசனைக்காரர் உண்டானால் சுகம் உண்டாகும்.”
நீதிமொழிகள் 11:14
வேதம் நம்மை எச்சரிக்கிறது, “தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான்.” 1 பேதுரு 5:8
Bible Reading: Isaiah 35-37
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், பகுத்தறிவு தாரும் உம்மிடம் ஜெபிக்கிறேன். உமது வழிகளில் நான் வளர உதவும். சரியான நபர்களுடன் என்னைச் சூழ்ந்துகொள்ளும். பிதாவே, இயேசுவின் நாமத்தில், எனது உண்ணதப் பணியிலிருந்து என்னைத் தடுக்கும் ஒவ்வொரு கவனச்சிதறல் ஆவியையும் நான் பிணைக்கிறேன். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● தைரியமாக இருங்கள்● அக்கிரமத்திற்கு முழுமையான தீர்வு
● ஒரு வித்தியாசமான இயேசு, வித்தியாசமான ஆவி மற்றும் மற்றொரு நற்செய்தி - II
● அந்தப் பொய்களை அம்பலப்படுத்துங்கள்
● ஆவிக்குரிய பெருமையின் கனி
● அன்பினால் உந்துதல்
● பயனுள்ள 40 நாட்கள் உபவாச ஜெபத்திற்கான வழிகாட்டுதல்கள்
கருத்துகள்