தினசரி மன்னா
0
0
77
தேவனுடைய வார்த்தை உங்களை புண்படுத்த முடியுமா?
Saturday, 27th of September 2025
Categories :
Offence (இடறல்)
“சீஷர்கள் அதைக்குறித்து முறுமுறுக்கிறார்களென்று இயேசு தமக்குள்ளே அறிந்து, அவர்களை நோக்கி: இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?”
(யோவான் 6:61)
யோவான் 6-ல், இயேசு தம்மை பரலோகத்திலிருந்து வரும் அப்பம் என்று கூறினார். அவருடைய மாம்சமும் இரத்தமும் ஒரு நபருக்கு நித்திய ஜீவனுக்கு உணவளிக்கும் என்றும் அவர் கூறினார். பரிசேயர்களும் சதுசேயர்களும் இதைக் கேட்டபோது, அவர்களால் ஜீரணிக்க முடியாமல் மிகவும் கோபமடைந்தனர். தவறாகப் போதித்த இயேசுவை மதவெறியன் என்று முத்திரை குத்தினார்கள்.
இந்த கட்டத்தில், அவருடைய சீஷர்களில் பலர் கூட, இதைக் கேட்டபோது, “இது கடினமான சொல்; அதை யார் புரிந்து கொள்ள முடியும்?" அவருடைய சீஷர்களில் பலர் அவருடன் இனி பயனிக்கவில்லை என்றும் வேதம் பதிவு செய்கிறது. (யோவான் 6:60,66)
அவரது மிக நெருங்கிய சீஷர்கல் கூட இடறலாடையும் கட்டத்தில் இருந்தனர். அப்போதுதான் இயேசு அவர்களிடம், “இது உங்களுக்கு இடறலாயிருக்கிறதோ?” என்று கேட்டார்.
உண்மை என்னவென்றால், வார்த்தையில் எப்போதும் உங்களை இடறலாக்கும் ஒன்று இருக்கும். மன்னிப்பு பற்றிய செய்தியைப் பிரசங்கித்தது எனக்கு நினைவிருக்கிறது, சபையில் என்னைக் கேலி செய்த ஒரு மனிதர் இருந்தார். இருப்பினும், அன்று நான் பிரசங்கித்த வார்த்தை அவரைக் இடறலாக்கியது, அவர் தனது வாழ்க்கையை தேவனிடம் ஒப்படைத்தார். இன்று, அந்த மனிதர் எங்கள் சபையில் உறுப்பினராக உள்ளார்.
நமது பாரம்பரியம் அல்லது உணர்ச்சிகளுடன் பொருந்தாத சத்தியத்தை யாராவது பகிர்ந்து கொள்ளும்போது, அது நம்மை காயப்படுத்துகிறது மற்றும் புண்படுத்துகிறது. அந்த வார்த்தையைக் குறித்து யோசியப்பதற்குப் பதிலாக, பரிசுத்த ஆவியானவரிடம் அந்த புரிதலைக் கேட்பதற்குப் பதிலாக, நாம் இடறலடைகிறோம்.
இயேசு மாம்சமான வார்த்தையாக இருந்தார், இங்கே அவர் சொன்னார், "என்னிடத்தில் இடறலடையாதவர்கள் பாக்கியவான்கள்" (மத்தேயு 11:6) வார்த்தை உங்களை இடறலடைய அனுமதிக்காமல், அந்த வார்த்தை உங்களை வடிவமைக்க அனுமதிக்கும் போது, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Bible Reading: Hosea 11-14; Joel 1
வாக்குமூலம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், நான் என் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியத்துடனும் பலத்துடனும் நடப்பேன் என்று அறிக்கையிடுகிறேன்.
தேவன் எனக்கு நியமித்துள்ள அனைத்தையும் கனத்துடனும் சிறப்புடனும் நான் மகிழ்ச்சியுடன் நிறைவேற்றுவேன். ஜீவனுள்ளோர் தேசத்தில் கர்த்தருடைய ஆசீர்வாதங்களையும் நன்மையையும் அனுபவிப்பேன். என் வாழ்நாளெல்லாம் குற்றமில்லாமல் கர்த்தரைச் சேவிப்பேன். ஆமென்! (சங்கீதம் 118:17 மற்றும் சங்கீதம் 91:16).
Join our WhatsApp Channel

Most Read
● அவரை நாடி உங்கள் யுத்தத்தை எதிர்கொள்ளுங்கள்.● அப்பாவின் செல்ல மகள் - அக்சாள்
● தேவதூதர்களிடம் நாம் ஜெபிக்கலாமா
● சரியான உறவுகளை எவ்வாறு உருவாக்குவது உறவுகள்
● ஆயத்தமில்லாத உலகில் ஆயத்தநிலை
● உங்கள் மனநிலையை மேம்படுத்துதல்
● தேவன் எப்படி வழங்குகிறார் #1
கருத்துகள்