மோசேயின் கூடாரத்தைப் பற்றிய குறிப்பிடத்தக்க எளிதில் கவனிக்கப்படாத விவரத்தை வேதம் நமக்குச் சொல்கிறது:
“நீ முதலாம் மாதம் முதல் தேதியில் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசஸ்தலத்தை ஸ்தாபனம்பண்ணு.”
யாத்திராகமம் 40:2
“இரண்டாம் வருஷம் முதலாம் மாதம் முதல் தேதியில் வாசஸ்தலம் ஸ்தாபனம்பண்ணப்பட்டது.”
யாத்திராகமம் 40:17
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், தேவன் புத்தாண்டு தினத்தை இஸ்ரவேலர்களிடையே தம் வசிப்பிடத்தை நிறுவிய தருணமாகத் தேர்ந்தெடுத்தார். இது தற்செயலானது அல்ல. ஜனவரி 1, 2026 இல் அடியெடுத்து வைக்கும் நமக்கு, இது தீர்க்கதரிசனமும் தேவனுடைய நோக்கமும், ஆழமான போதனையாகவும் இருக்கிறது.
தேவம் தமது பிரசன்னத்துடன் தொடங்குகிறார்
ஆசரிப்புக் கூடாரம் வெறுமனே ஒரு அமைப்பு அல்ல-தேவன் தமது ஜனங்களுடன் இருக்கிறார் என்பதை காணக்கூடிய பிரசன்னத்தின் அடையாளமாக இருந்தது. இஸ்ரவேளர்கள் வெற்றியை பெரும் முன்னும், குடியேருவதற்க்கு முன்னும் அல்லது பெருக்கத்திற்கு முன்னும, முன்னேறுவதற்கு முன்னும், தேவன் தனது பிரசனத்தை முதலில் நிலைநிறுத்தினார்.
இது மிகவும் வல்லமைவாய்ந்த கோட்பாட்டை வெளிப்படுத்துகிறது: தேவன் தம் செயல்களுடன் ஆண்டுகளைத் தொடங்குவதில்லை; அவர் பிரசனத்தில் தொடங்குகிறார்.
கர்த்தராகிய இயேசு பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு இந்த மாதிரியை நமக்குக் கற்பித்தார்,
“முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.”
மத்தேயு 6:33
ஒரு ஆசீர்வதிக்கப்பட்ட ஆண்டு என்பது திட்டங்களோடு மட்டும் தொடங்குவது அல்ல, மாறாக உங்கள் வாழ்க்கையின் மையத்தில் தேவன் சிங்காசனத்தில் அமர்வதில் இருந்து தொடங்குவது.
ஒரு புனித மீட்டமைப்பு
முதல் மாதம் இஸ்ரேலுக்கு ஒரு புதிய சுழற்சியைக் குறித்தது. அதே நாளில் வாசஸ்தலத்தை எழுப்பும்படி கட்டளையிட்டதன் மூலம், ஒவ்வொரு புதிய தொடக்கமும் பரிசுத்தப்பட வேண்டும் என்று தேவன் அவர்களுக்குக் கற்பித்தார்.
அப்போஸ்தலனாகிய பவுல் இந்த உண்மையைப் புதிய ஏற்பாட்டில் எழுதுகையில்,
“இப்படியிருக்க, ஒருவன் கிறிஸ்துவுக்குள்ளிருந்தால் புதுசிருஷ்டியாயிருக்கிறான்; பழையவைகள் ஒழிந்து போயின, எல்லாம் புதிதாயின.”
2 கொரிந்தியர் 5:17
புத்தாண்டு என்பது வெறும் காலண்டர் மாற்றம் அல்ல - அது தேவனின் நோக்கங்களோடு நம் வாழ்க்கையை அமைத்துக் கொள்வதற்கான அழைப்பாகும். நாம் எதை முதலில் அர்ப்பணிக்கிறோம் என்பது பெரும்பாலும் பின்வருவனவற்றை தீர்மானிக்கிறது.
அமைப்பு மகிமைக்கு முந்தியது
கர்த்தருடைய மகிமை வாசஸ்தலத்தை நிரப்புவதற்கு முன் (யாத்திராகமம் 40:34), மோசே தேவனின் அறிவுரைகளை கவனமாகப் பின்பற்றினார். ஒவ்வொரு திரைச்சீலையும், பலிபீடமும், அலங்காரமும் தெய்வீக முறைப்படி வைக்கப்பட்டன.
தேவனின் மகிமை, அவருடைய கட்டளை கணப்படுத்தப்படும் இடத்தில் தங்கியிருக்கிறது என்பதை இது நமக்குக் கற்பிக்கிறது.
அப்போஸ்தலன் பவுல் கிறிஸ்தவர்களாகிய நமக்கு நினைவூட்டுகிறார்.
“சகலமும் நல்லொழுக்கமாயும் கிரமமாயும் செய்யப்படக்கடவது.”
1 கொரிந்தியர் 14:40
நீங்கள் 2026 இல் பிரவேசிக்கும்போது, தேவன் உங்கள் ஜெபங்களில் மட்டுமல்ல, நீங்கள் எடுக்கும் தீர்மானங்களில், ஒழுங்குமுறைகளில் ஒவ்வொரு நாளும் கீழ்ப்படியும் விதங்களில் அக்கறை காட்டுகிறார். எப்பொழுதும் நினைவில் கொள்ளுங்கள், அமைப்பு மகிமைக்கான இடத்தை உருவாக்குகிறது.
கூடாரத்திலிருந்து ஆலயம், ஆலயத்திலிருந்து உங்கள் வரை
கூடாரம் தற்காலிகமானது, ஆலயம் நிரந்தரமானது-ஆனால் இன்று, அதைவிட பெரியது ஒன்று உண்மை:
“நீங்கள் தேவனுடைய ஆலயமாயிருக்கிறீர்களென்றும், தேவனுடைய ஆவி உங்களில் வாசமாயிருக்கிறாரென்றும் அறியாதிருக்கிறீர்களா?”
1 கொரிந்தியர் 3:16
இந்த ஆண்டின் முதல் நாளில், திரைச்சிளைகளாலும் கம்புகளால் கூடாரத்தை எழுப்பும்படி தேவன் உங்களிடம் கேட்கவில்லை. உங்கள் வாழ்க்கையை அவருடைய பிரசனத்தின் இருப்பிடமாக முன்வைக்க அவர் உங்களை அழைக்கிறார்.“நீங்கள் உங்கள் சரீரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக
ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங்களை வேண்டிக்கொள்ளுகிறேன்;”
ரோமர் 12:1
2026க்கான தீர்க்கதரிசன அழைப்பு
தேவனுடன் இந்த ஆண்டைத் தொடங்குங்கள் - இந்த ஆண்டில் என்ன உங்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் துரத்த வேண்டியதில்லை.
தேவனின் பிரசன்னம் முதலில் வரும்போது, வழிநடத்துதல், வெற்றி ஆகியவை உங்களை பின்தொடரும்.
இயேசுவின் நாமத்தில், "கர்த்தர் உங்களுக்கு முன்பாகப் கடந்துப்போவார், இஸ்ரவேலின் தேவன் இந்த வருடம் முழுவதும் உங்களைப் பின்தொடர்ந்து பாதுகாப்பார்" என்று நான் தீர்க்கதரிசனம் உறைக்கிறேன்.
உங்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
ஜெபம்
பிதாவே, புத்தாண்டு தினத்தில் தீரிக்கதரிசியாகிய மோசே கூடாரத்தை எழுப்பியது போல், இன்றும் என் இருதயத்திளும், என் வீட்டிளும் ஒரு பலிபீடத்தை கட்டி எழுப்புகிறேன். என் வாழ்வில் உனக்கு முதலிடம் தருகிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!!
Join our WhatsApp Channel
Most Read
● இயேசுவின் கிரியைகளிலும் பெரிய கிரியைகளையும் செய்வது என்றால் என்ன?● கர்த்தராகிய இயேசு: சமாதானத்தின் ஊற்று
● செல்வாக்கின் பெரிய பகுதிகளுக்கான பாதை
● நாம் இரட்சகரின் நிபந்தனையற்ற அன்பு
● தேவனின் ஏழு ஆவிகள்: கர்த்தருக்குப் பயப்படுகிற ஆவி
● நாள் 02 : 40 நாட்கள் உபவாசமும் ஜெபமும்
● தேவன் உங்களைப் பயன்படுத்த விரும்புகிறார்
கருத்துகள்
