தினசரி மன்னா
1
0
61
தேவனோடு செயல்பட கற்றுக்கொள்வது, அவருக்கு முன்னால் அல்ல
Friday, 2nd of January 2026
வருடத்தின் முதல் நாளில், கூடாரம் எழுப்பப்பட்டது. தேவனின் பிரசன்னம் நிறுவப்பட்டது. ஆனால் வேதம் தெளிவுபடுத்துகிறது - தேவன் தம்முடைய ஜனங்களின் மத்தியில் வசிக்கவில்லை, அதனால் அவர்கள் நிலையாக இருக்க முடியும். அவரது பிரசன்னம் நோக்கதுடனும், வழிநடத்துதலுடனும், இயக்கத்துடன் வந்தது.
ஆசரிப்புக் கூடாரம் அமைக்கப்பட்ட பிறகு, இஸ்ரவேலின் பயணத்திற்கான இன்றியமையாத மாதிரியை வேதம் பதிவு செய்கிறது:
“வாசஸ்தலத்திலிருந்து மேகம் மேலே எழும்பும்போது, இஸ்ரவேல் புத்திரர் பிரயாணம்பண்ணப் புறப்படுவார்கள். மேகம் எழும்பாதிருந்தால், அது எழும்பும் நாள்வரைக்கும் பிரயாணம்பண்ணாதிருப்பார்கள்.”
யாத்திராகமம் 40:36-37
இது ஒரு முக்கியமான உண்மையை நமக்குக் கற்பிக்கிறது: தேவனின் பிரசனம் தேவனின் வேகத்தைத் தீர்மானிக்கிறது.
மேகம் இல்லாமல் பயணிக்கும் ஆபத்து
இஸ்ரவேலின் மிகப் பெரிய தோல்விகள் அற்புதங்கள் நடக்காததால் வந்தவை அல்ல, மாறாக தேவனுடைய நேரத்திற்கு வெளியே செயல்பட்டதால் வந்தவை. அவருடைய அறிவுறுத்தலின்றி அவர்கள் நகர்ந்தபோது, பின்விளைவுகள் தொடர்ந்தன
(எண்ணாகமம் 14:40-45).
அநேக கிறிஸ்தவர்கள் ஜெபத்துடனும் அர்ப்பணிப்புடனும் புதிய ஆண்டைத் தொடங்குகிறார்கள், ஆனால் விரைவில் ஒரு பழக்கமான பொறியில் விழுகிறார்கள் - தேவனுக்கு முன்னால் ஓடுகிறார்கள். மேகம் நகர்ந்ததா என்பதைச் சரிபார்க்காமல் திட்டங்கள் செய்யப்படுகின்றன, முடிவுகள் எடுக்கப்படுகின்றன, உறுதிமொழிகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
சாலமோன் நம்மை எச்சரிக்கிறார்,
“மனுஷனுக்குச் செம்மையாய்த் தோன்றுகிற வழி உண்டு; அதின் முடிவோ மரணவழிகள்.”
நீதிமொழிகள் 14:12
நல்ல கருத்துக்கள் எப்போதும் தேவனின்-நேரம் சார்ந்த கருத்துக்கள் அல்ல.
காத்திருப்பும் கீழ்ப்படிதல் தான்
சில சமயங்களில் மேகம் வாசஸ்தலத்தின் மேல் நாட்கள், மாதங்கள் அல்லது ஒரு வருடம் கூட தங்கி இருந்ததாக வேதம் சொல்கிறது (எண்ணாகமம் 9:22). இஸ்ரவேல் பொறுமையைக் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது - செயலற்ற தன்மையை அல்ல, ஆனால் கவனமுள்ள ஆயத்தநிலையை.
ஏசாயா தீர்க்கதரிசி சொல்கிறார்,
“கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்;”
ஏசாயா 40:31
காத்திருப்பது பலவீனம் அல்ல. இது கட்டுப்பாட்டில் உள்ள வலிமை. விளைவுகளை கட்டாயப்படுத்தாத அளவுக்கு தேவனை நம்புவது.
அர்ப்பணிப்புக்குப் பிறகு பகுத்தறிவு வர வேண்டும் என்பதை ஜனவரி 2 நமக்கு நினைவூட்டுகிறது.
கர்த்தராகிய இயேசு கூட பிதாவைச் சார்ராமல் எதையும் செய்யவில்லை.
“பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார்;”
யோவான் 5:19
வல்லமையினால் நிரம்பியிருந்தாலும், கர்த்தராகிய இயேசு தெய்வீக வழிநடந்துதலுக்காகக் காத்திருந்தார்—சீஷர்களைத் தேர்ந்தெடுத்தாலும், அற்புதங்களைச் செய்தாலும், அல்லது சிலுவைக்குச் சென்றாலும் சரி. செயலுக்கு முந்தைய பிரசன்னம்; கீழ்ப்படிதல் செயலை நிர்வகிக்கிறது.
உங்களுக்காக ஒரு தீர்க்கதரிசன வார்த்தை
2026 பிரவேசித்திருக்கின்ற நீங்கள், தேவன் உங்களை வேகமாக ஓடச் சொல்லவில்லை—அவருடன் நெருங்கி நடக்கச் சொல்கிறார். சில கதவுகள் விரைவில் திறக்கப்படும். மற்றவைக்கு நிதானம் தேவைப்படும். மேகம் நகரும் - ஆனால் அது எப்போதும் உங்கள் கால அட்டவணையில் இருக்காது.
தாவிது இந்த தோரணையை கச்சிதமாக கைப்பற்றினார்:
“கர்த்தாவே, உம்முடைய வழிகளை எனக்குத் தெரிவியும்; உம்முடைய பாதைகளை எனக்குப் போதித்தருளும்.”
சங்கீதம் 25:4
நீங்கள் மேகத்துடன் நகக் கற்றுக்கொள்ளும் போது, நீங்கள் ஒருபோதும் வழி தவறவிடுவதில்லை.
ஜெபம்
பிதாவே, நீர் என்னுடன் இருக்க வேண்டும் என்று மாத்திரம் நான் விரும்பவில்லை - நீர் நகரும்போது நானும் நகர விரும்புகிறேன், நீர் நிறுத்தும்போது நிற்க விரும்புகிறேன், நீர் தங்கியிருக்கும் இடத்தில் தங்கி இருக்க விரும்புகிறேன்.
Join our WhatsApp Channel
Most Read
● பரிசுத்த ஆவியானவருக்கு உணர்திறனை வளர்ப்பது - 2● உங்கள் சவுகரிய மண்டலத்திலிருந்து வெளியேறவும்
● ஆராதனையை ஒரு வாழ்க்கைமுறையாக மாற்றுதல்
● ஆசீர்வதிக்கப்பட்ட நபர்
● ஜெபத்தில் கவனச்சிதறல்களை எவ்வாறு சமாளிப்பது
● நீங்கள் தேவனை எதிர்க்கிறீர்களா?
● இரகசிய வருகையும் ரோஷ் ஹஷானாவும்
கருத்துகள்
