english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. பெந்தெகொஸ்தேயின் நோக்கம்
தினசரி மன்னா

பெந்தெகொஸ்தேயின் நோக்கம்

Saturday, 23rd of May 2026
0 0 60
Categories : பெந்தெகொஸ்தே (Pentecost)
பெந்தெகொஸ்தே என்பது "ஐம்பதாம் நாள்" என்று பொருள்படும், மேலும் இது பஸ்காவிற்கு ஐம்பது நாட்களுக்குப் பிறகு நிகழ்கிறது. வேதாகம நாட்களில், ஒவ்வொரு ஆண்டும் மக்கள் எல்லா இடங்களிலிருந்தும் எருசலேமுக்கு வந்து, அறுவடையின் முதல் பழங்களை தேவாலயத்தில் தேவனுக்கு காணிக்கையாகக் கொண்டு வருவார்.

பெந்தெகொஸ்தே என்பது மோசே சீனாய் மலையில் நியாயப்பிரமாணத்தைப் பெற்று, இஸ்ரவேலர் தேவன் மணந்த காலமாக அடையாளப்படுத்தப்படுகிறது. (யாத்திராகமம் 24:12-18) முதல் பெந்தெகொஸ்தே பரிசுத்த ஆவியானவர் வந்தபோது எதிர்கால பெந்தெகொஸ்தே நாளின் பிரதிபலிப்பாகும், மேலும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் சபை எருசலேமில் பிறந்தது. பெந்தெகொஸ்தே என்பது "சபை பிறந்த நாள்."
தேவனின் பொருளாதாரத்தில், எல்லாவற்றிற்கும் ஒரு நோக்கம் உள்ளது. பெந்தெகொஸ்தே நாளுக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. இயேசு பரமேறுவதற்கு  முன் தம் சீஷர்களைக் கூட்டிச் சென்றபோது, ​​"“பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது நீங்கள் பெலனடைந்து, எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசிபரியந்தமும், எனக்குச் சாட்சிகளாயிருப்பீர்கள் என்றார்.”(அப்போஸ்தலர் 1:8)
சீஷர்கள் அதிகாரத்தை வைத்து என்ன செய்வார்கள் என்பதற்கு தங்கள் சொந்த விளக்கம் இருந்தது. இயேசு அப்போதைய ரோமானிய ஆட்சியைத் தூக்கியெறிந்து தனது பூமிக்குரிய ராஜ்யத்தை நிறுவுவாரா என்பதை அறிய அவர்கள் மிகவும் ஆர்வமாக இருந்தனர். ஆனால், தம்முடைய ராஜ்யம் இவ்வுலகத்திற்குரியது அல்ல என்பதை இயேசு பொந்து பிலாத்துவிடம் தெளிவாக விளக்கியதை நாம் அறிவோம். (யோவான் 18:36)

பெந்தெகொஸ்தே நாளின் நோக்கம் எருசலேமிலும், யூதேயா முழுவதிலும், சமாரியாவிலும், பூமியின் கடைசி வரையிலும் நாம் அவருடைய சாட்சிகளாக இருப்போம் என்று கர்த்தராகிய இயேசு தெளிவாகக் குறிப்பிட்டார். (அப்போஸ்தலர் 1:8)

சாட்சியாக இருப்பதன் அர்த்தம் என்ன?
சாட்சியாக இருப்பது என்பது தான் பார்த்தது, கேட்டது, அனுபவித்தது ஆகியவற்றின் உண்மையைச் சொல்வது. இயேசுவுக்கு சாட்சியாக இருப்பது என்பது அவர் யார், அவர் நம் இரட்சகராக என்ன செய்திருக்கிறார் என்பது பற்றிய நற்செய்தியைப் பகிர்ந்துகொள்வதாகும். பரிசுத்த ஆவியானவர் இந்த தொலைந்துபோய் இருக்கும் உலகிற்கு தேவனின் அன்பின் நற்குணத்தை அறிவிக்க நம்மைப் பயன்படுத்த ஏங்குகிறார்.

என் வாழ்வில் நான் தற்கொலை செய்யும் தருவாயில் இருந்த ஒரு காலம் உண்டு. அப்போதுதான் தெருவில் ஒருவர் கிருபையின் நற்செய்தியை என்னிடம் பகிர்ந்து கொண்டார். நான் ஒரு ஆராதனைக்கு அழைக்கப்பட்டேன், அப்போதுதான் என் வாழ்க்கை முழுவதுமாக மாறியது. அந்த நபர் கர்த்தரைப் பற்றி எனக்கு சாட்சி சொல்லாமல் இருந்திருந்தால் என்ன செய்வது? அதை நினைக்க கூட எனக்கு நடுக்கம். இதுதான் பெந்தெகொஸ்தே நாளின் உண்மையான நோக்கம்.

Bible Reading: 1 Chronicles 29; Chronicles 1-2
ஜெபம்
தந்தையே, இதோ அடியேன் இருக்கிறேன்; உமது ஆவி மற்றும் வல்லமையால் எனக்கு அதிகாரம் தாரும். உங்கள் மகன் இயேசுவைப் பற்றி நான் ஜனங்களிடம் அறிவிப்பேன்.  இயேசுவின் நாமத்தில். ஆமென்.


Join our WhatsApp Channel


Most Read
● நடக்க கற்றுக்கொள்வது
● வெற்றிக்கான சோதனை
● 2026 இன் தொடக்கத்திற்கான ஒரு தெய்வீக வரைப்படம்
● வார்த்தையால் வெளிச்சம் வருகிறது
● என் விளக்கை ஏற்றும் ஆண்டவரே
● வழிபாட்டின் இரண்டு அத்தியாவசியங்கள்
● வல்லமை வாய்ந்த முப்புரிநூல்
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2026 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய