english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. அசுத்த எண்ணங்களுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி
தினசரி மன்னா

அசுத்த எண்ணங்களுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி

Thursday, 27th of August 2026
0 0 70
Categories : எண்ணங்கள் (Thoughts) மனம் ( Mind) விடுதலை (Deliverance)
அவர்களின் எண்ணங்களின் பலன் (எரேமியா 6:19)
தேவன் நம் எண்ணங்களைப் பற்றி அதிகம் கரிசன்னையுள்ளவறாக இருக்கிறார்.
முக்கிய காரணங்களில் ஒன்று, ஏனென்றால் நாம் செய்யும் எல்லாவற்றுக்கும் பின்னால் ஒரு சிந்தனை இருக்கிறது - நல்லது அல்லது தீமை.

#1: எண்ணங்கள் நம் வாழ்க்கையை கட்டுப்படுத்துகின்றன
“எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவ ஊற்று புறப்படும்.” நீதிமொழிகள்‬ ‭4‬:‭23‬ ‭

நீங்கள் சிறு குழந்தையாகவோ அல்லது இளைஞராகவோ இருந்தபோது, ​​சிலர் உங்களை தோற்றுப்போனவன் , எதற்கும் உதவாதவன் என்று திரும்பத் திரும்ப அழைத்து இருக்கலாம். நீங்கள் அந்த எண்ணத்தை ஏற்றுக்கொண்டால், அது தவறாக இருந்தாலும், அது உங்கள் வாழ்க்கையை வடிவமைக்கும்.

#2:நம் மனம் தான் உண்மையான யுத்தக்களம்
"கிறிஸ்தவ வாழ்க்கை ஒரு விளையாட்டு மைதானம் அல்ல, மாறாக ஒரு யுத்தக்களம்" என்று ஒருவர் சரியாகச் சொன்னார். இந்த யுத்தக்களம் எதோ நாடுகளில் இல்லை, ஆனால் நம் மனதில் உள்ளது. பலர் மனரீதியாக சோர்வு மற்றும் விரக்தியடைந்துள்ளனர், முதன்மையாக அவர்கள் ஒரு தீவிரமான மனப்போரில் செல்வதால், கைவிடும் விளிம்பில் உள்ளனர். உங்கள் மனமே மிகப் பெரிய சொத்து, சாத்தான் உங்கள் மிகப்பெரிய சொத்தை விரும்புகிறான்!

கவனியுங்கள், கர்த்தராகிய இயேசு அசுத்த எண்ணங்கள் மனிதர்களின் இருதயத்திலிருந்து வரும் முதல் விஷயங்கள் என்று பட்டியலிட்டார், இது ஒரு நபரைத் தீட்டுப்படுத்துகிறது.

“எப்படியெனில், மனுஷருடைய இருதயத்திற்குள்ளிருந்து பொல்லாத சிந்தனைகளும், விபசாரங்களும், வேசித்தனங்களும், கொலைபாதகங்களும், களவுகளும், பொருளாசைகளும், துஷ்டத்தனங்களும், கபடும், காமவிகாரமும், வன்கண்ணும், தூஷணமும், பெருமையும், மதிகேடும் புறப்பட்டுவரும். பொல்லாங்கானவைகளாகிய இவைகளெல்லாம் உள்ளத்திலிருந்து புறப்பட்டு மனுஷனைத் தீட்டுப்படுத்தும் என்றார்.”
மாற்கு‬ ‭7‬:‭21‬-‭23‬ ‭

#3:உங்கள் மனமே அமைதிக்கான திறவுகோல்
யாருடைய எண்ணங்கள் உங்கள் மீது நிலைத்திருக்கிறதோ அவர்கள் அனைவரையும் நீங்கள் பூரண அமைதியுடன் வைத்திருப்பீர்கள்! (ஏசாயா 26:3)

நம் எண்ணங்கள் நம் சூழ்நிலைகளுக்குப் பதிலாக அவர் மீது நிலைநிறுத்தப்படும்போது பரிபூரண சமாதனாம் என்பது ஒரு உண்மை என்பதைக் கவனியுங்கள். ஜெபம் மற்றும் ஆராதனை மூலம் உங்கள் மனதை அவர் மீது நிலைநிறுத்துங்கள்.

மேலும், மனப்யுத்தத்தில் வெற்றி பெற, தேவனுக்கு பிரியமான விஷயங்களால் மனதை நிரப்புங்கள். அதனால்தான் வார்த்தையைப் படித்து தியானிப்பது மிகவும் முக்கியமானது. ஒருவர் என்னிடம் தினமும் எத்தனை அத்தியாயங்களைப் படிக்க வேண்டும் என்று கேட்டார். நல்ல உணவு இருக்கும் போது, ​​நம்மில் பெரும்பாலோர் திருப்தி அடையும் வரை சாப்பிட விரும்புகிறோம். அவ்வாறே நீங்களும் தேவனுடைய வார்த்தையைக் கடைப்பிடிக்க வேண்டும். அந்த மனநிறைவு வரும் வரை படியுங்கள்.

உங்கள் முழு வாழ்க்கையையும் - உங்கள் மனம் உட்பட - இயேசு கிறிஸ்துவுக்கு அர்ப்பணிப்பதன் மூலம் இன்றே தொடங்குங்கள். வெற்றி நடை போடுவீர்கள்.

Bible Reading: Jeremiah 46-48
வாக்குமூலம்
நான் என் எண்ணங்களை இயேசுவின் இரத்தத்தால் மறைக்கிறேன். அசுத்த எண்ணங்களை அறிமுகப்படுத்த முயற்சிக்கும் ஒவ்வொரு வல்லமையையும், நான் இயேசுவின் நாமத்தில் பிணைக்கிறேன். எந்த வல்லமையும், என்னைத் தீட்டுப்படுத்த முயற்சிப்பது இயேசுவின் நாமத்தில் அக்கினியால் அழிக்கப்படும். நான் தினமும் தேவனுடைய வார்த்தையை தியானிப்பேன். என் மனதை நிரப்ப நான் வார்த்தையை அனுமதிப்பேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!

Join our WhatsApp Channel


Most Read
● தேவனின் வல்லமைமிக்க கரத்தின் பிடியில்
● மரியாதையும் மதிப்பும்
● அவருடைய சித்தத்தை செய்வதன் முக்கியத்துவம்
● செழிப்புக்கான மறக்கப்பட்ட திறவுகோல்
● எதிராளி இரகசியமானவன்
● விதையின் வல்லமை - 2
● குற்றமில்லா வாழ்க்கை வாழ்வது
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2026 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய