english हिंदी मराठी తెలుగు മലയാളം ಕನ್ನಡ Contact us எங்களை தொடர்பு கொள்ள Spotify இல் கேளுங்கள் Spotify இல் கேளுங்கள் Download on the App StoreiOS பயன்பாட்டைப் பதிவிறக்கவும் Get it on Google Play Android பயன்பாட்டைப் பதிவிறக்கவும்
 
உள்நுழைய
ஆன்லைனில் வழங்குதல்
உள்நுழைய
  • வீடு
  • நிகழ்வுகள்
  • வாழ்க
  • டி.வி
  • நோஹ்டியூப்
  • பாராட்டுக்கள்
  • செய்தி
  • மன்னா
  • பிரார்த்தனைகள்
  • வாக்குமூலங்கள்
  • கனவுகள்
  • மின் புத்தகங்கள்
  • வர்ணனை
  • இரங்கல் குறிப்புகள்
  • சோலை
  1. வீடு
  2. தினசரி மன்னா
  3. நேரத்தியான குடும்ப நேரம்
தினசரி மன்னா

நேரத்தியான குடும்ப நேரம்

Sunday, 8th of November 2026
0 0 37
Categories : விசுவாசம்(Relationship)
“பஸ்கா பண்டிகைக்கு முன்னே, இயேசு இவ்வுலகத்தைவிட்டுப் பிதாவினிடத்திற்குப் போகும்படியான தம்முடைய வேளை வந்ததென்று அறிந்து, தாம் இவ்வுலகத்திலிருக்கிற தம்முடையவர்களிடத்தில் அன்புவைத்தபடியே, முடிவுபரியந்தமும் அவர்களிடத்தில் அன்புவைத்தார்.”யோவான்‬ ‭13‬:‭1‬ ‭

நம் குடும்ப அங்கத்தினர்களிடத்தில் கிடைக்கும் ஒவ்வொரு நொடியையும் அனுபவிப்போம். நாளை, அத்தகைய தருணங்களின் பாக்கியம் நமக்கு கிடைக்கலாம் அல்லது கிடைக்காமல் போகலாம்.

ஒரு நாள், ஒரு பிரபலமான போதகர் தனது ஞாயிற்றுக்கிழமை பிரசங்கத்தைத் ஆயத்தப்படுத்துவதில் மும்முரமாக இருந்தார். அவரது சிறிய மகள் அமைதியாக பின்னால் இருந்து அவரைப் "அப்பா" என்று அணைத்துக் கொண்டாள். போதகர் அவளை மெதுவாகக் கடிந்துகொண்டு நான் கொஞ்சம் அளுவலாய் இருக்கிறேன் என்று சொன்னார்.

இந்த நிலையில், போதாகரின் மனைவி, சிறுவயதில் அவர் மீது பொழிந்த அன்பும் பாசமும் சில ஆண்டுகளுக்குப் பிறகு இருக்காது என்பதை மெதுவாக நினைவுபடுத்தினார். அந்த தருணத்தை அனுபவிக்கும்படி அவள் அவருக்கு அறிவுரை கூறினார்கள். அந்தக் கூற்றின் உண்மையையும், தீவிரத்தையும் உணர்ந்த போதாகர், உடனே தன் வேலையை ஒதுக்கிவிட்டு, தன் சிறிய மகளுடன் நேரத்தைக் கழித்தார்.

பல நேரங்களில் "பிஸி" என்பது "நன்மை" என்பதற்கு சமமானதல்ல என்பதை நான் எப்போதும் எனக்கு நினைவூட்டுவேன். வெறும் செயல்பாடு சாதனைக்கு சமமாகாது. வெறும் செயல்பாடு பலனைத் தராது.

உங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் நீங்கள் செலவிடும் தருணங்கள் விலைமதிப்பற்ற தருணங்கள். அவை வீணாகக் கூடாது. யாருக்குத் தெரியும், நாளை நாம் அவற்றைப் பெறாமல் போகலாம். நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் (உங்கள் மனைவி, குழந்தைகள், உங்கள் பெற்றோர்) இருக்கும்போது, ​​சமூக ஊடகங்களில் அறிவிப்புகளைச் சரிபார்ப்பதில் மும்முரமாக இருக்க வேண்டாம். அவை வேறு சில நேரத்திற்கு விட்டு விடுங்கள். வலுவான குடும்பங்களின் சிறப்பியல்பு அவர்கள் ஒன்றாக செலவிடும் தரமான நேரம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன.

கர்த்தராகிய இயேசு சிலுவைக்குச் செல்வதற்கு முன்பு அவருடைய அப்போஸ்தலர்களுடன் நேரத்தை செலவிடுவது எவ்வளவு முக்கியம் என்பதை அறிந்திருந்தார். நம் குடும்ப உறுப்பினர்களுக்கு தரமான நேரத்தை ஒதுக்கி, அத்தகைய தருணங்களை ஒன்றாக அனுபவிப்போம்.

Bible Reading: John 2-4
ஜெபம்
பரலோகத் தந்தையே, என் குடும்ப உறுப்பினர்களுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். அவர்களை உமது கண்மணியாக வைத்துக் கொள்ளும். எனது குடும்ப உறுப்பினர்களுடன் தரமான நேரத்தை செலவிட எனக்கு கிருபை தாரும். இயேசுவின் நாமத்தில் ஆமென்!


Join our WhatsApp Channel


Most Read
● தேவனின் குணாதிசயம்
● மற்றவர்களுடன் சமாதானமாக வாழுங்கள்
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 5
● உங்களுக்கு அது முக்கியம் என்றால், அது கடவுளுக்கும் முக்கியம்.
● காரணம் இல்லாமல் ஓடாதே
● பாலியல் சோதனைகளை எவ்வாறு மேற்கொள்வது
● உங்கள் இல்லத்தின் சூழலை மாற்றுதல் - 4
கருத்துகள்
எங்களை தொடர்பு கொள்ள
தொலைபேசி: +91 8356956746
+91 9137395828
பகிரி: +91 8356956746
மின்னஞ்சல்: [email protected]
முகவரி :
10/15, First Floor, Behind St. Roque Grotto, Kolivery Village, Kalina, Santacruz East, Mumbai, Maharashtra, 400098
பயன்பாட்டைப் பெறவும்
Download on the App Store
Get it on Google Play
அஞ்சல் பட்டியலில் சேரவும்
ஆராயுங்கள்
நிகழ்வுகள்
வாழ்க
நோஹ்டியூப்
டி.வி
தானம்
மன்னா
பாராட்டுக்கள்
வாக்குமூலங்கள்
கனவுகள்
தொடர்பு கொள்ளவும்
© 2026 Karuna Sadan, India.
➤
உள்நுழைய
இந்த தளத்தில் உள்ள உள்ளடக்கத்தை கருத்து தெரிவிக்கவும் விரும்பவும் உங்கள் NOAH கணக்கில் உள்நுழையவும்.
உள்நுழைய