தினசரி மன்னா
நாள் 19:21 நாட்கள் உபவாசம் மற்றும் பிரார்த்தனை
Friday, 30th of December 2022
1
0
981
Categories :
Fasting and Prayer
தீமையான பழக்கங்களை மேற்கொள்ளுவது
“தாங்களே கேட்டுக்கு அடிமைகளாயிருந்தும், அவர்களுக்குச் சுயாதீனத்தை வாக்குத்தத்தம் பண்ணுகிறார்கள்; எதினால் ஒருவன் ஜெயிக்கப்பட்டிருக்கிறானோ அதற்கு அவன் அடிமைப்பட்டிருக்கிறானே.” (2 பேதுரு 2:19)
பழக்கவழக்கங்கள் நடுநிலையானவை; அவைகள் நல்லவைகளாகவோ அல்லது தீமைகளாகவோ இருக்கலாம். நல்ல பழக்கவழக்கங்கள் யூகிக்கக்கூடிய நிலையான முடிவுகளை அடைய உதவும். அதே நேரத்தில் தீய பழக்கங்கள், நமது மகத்துவத்தை மட்டுப்படுத்தி அழிவுக்கு வழிவகுக்கும்.
"நான் எப்படி தீய பழக்கங்களை உடைத்தெறிய முடியும்?"
"எனக்கு நிறுத்துவது கடினம்." "நான் அதை மீண்டும் செய்ய விரும்பவில்லை, ஆனால் நான் சிக்கியிருக்கிறேன், அதனால் நான் அதை தொடர்ந்து செய்கிறேன்." அழிவுப் பழக்கம் உள்ளவர்கள் எதிர்கொள்ளும் சில சிரமங்கள் இவை. இன்று, இயேசுவின் நாமத்தில் அந்த அழிவுகரமான பழக்கங்களின் மீது தேவன் உங்களுக்கு வெற்றியைத் தருவாராக.
அழிவின் பழக்கங்களால் ஏற்படுபவை
- சிதைந்த குடும்பங்களும் திருமணங்களும்
- அகால மரணம்
- மது மற்றும் போதைப்பொருள்
- கொள்ளை
- தோல்வி
- சமுகத்தில் சவால்கள்
- சிறை
- துக்கமும் வேதனையும்
- பாலியல் வக்கிரம்
ஜனங்கள் தங்கள் இலக்குகளை நிறைவேற்றாமல் இருக்கிறதை உறுதிசெய்ய பிசாசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறான். அதற்கு அவன் பயன்படுத்தும் ஆயுதங்களில் ஒன்று தீமையான பழக்கங்கள்.
நீங்கள் தீமையான பழக்கங்களை தகர்த்தெறிய முடியும், ஆனால் உங்களுக்கு பரிசுத்த ஆவியின் உதவி தேவை. அந்த தீமையான பழக்கங்கள் ஒரு காலத்தில் மாம்சத்தின் செயல்களாக இருந்தன, ஆனால் நீங்கள் நீண்ட காலமாக மாம்சத்தில் தொடரும்போது, பிசாசானவனுக்கு கதவுகளை திறந்து கொடுக்கிறீர்கள். மாம்சத்தின் செயல்களை பிசாசானவன் எளிதில் கைப்பற்றலாம், ஆகவேதான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
தீமையான பழக்கங்களின் சில உதாரணங்கள்…
1. அதீத கோபம்
சிலர் கோபமாக இருக்கும்போது பொருட்களை உடைத்து விடுவார்கள். அவர்கள் கோபம் தனிந்த பிறகு, அவர்கள் புதிய ஒன்றை வாங்குவார்கள் அல்லது உடைந்த சாதனத்தை சரிசெய்வார்கள். சில சமயங்களில், அவர்கள் தொலைக்காட்சி மற்றும் அவர்கள் கைகளில் வைக்கக்கூடிய வேறு எதையும் உடைப்பார்கள். இது பிசாசுக்குரியதும் அழிவுகரமுமானது, தேவனின் உதவி இல்லாமல், அவர்களால் நிறுத்த முடியாது.
2. அதிகப்படியான பாலியல் எண்ணங்கள்
நாள் முழுவதும் பாலியல், ஒழுக்கக்கேடான எண்ணங்களால் பாதிக்கப்பட்ட சிலர் உள்ளனர். இரவில் கூட ஒழுக்கக்கேடான கனவுகளால் தாக்கப்படுகிறார்கள். இப்படியானால் அந்த நபர் பிசாசினால் தாக்கப்பட்ட இருக்கிறார் என்பது உறுதி. அத்தகைய பிசாசுகள் ஒரு நபரின் உணர்ச்சிகளையும் மாம்சிகங்களையும் எடுத்துக்கொள்கின்றன, இதனால் அந்த நபர் சிறையில் அல்லது சவக்கிடங்கில் முடியும் வரை அவரைத் தொடரச் செய்கின்றன.
இந்த ஜனங்களில் சிலர் இதை மேற்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள், ஆனால் அவர்கள் தங்கள் உணர்ச்சிகளுக்கு அடிமைகளாகிவிட்டனர். அவர்களின் மனதிலும் உணர்ச்சிகளிலும் உள்ள பிசாசுகளின் சங்கிலிகளை உடைக்க அவர்களுக்கு தேவன் வல்லமை தேவை.
3. புகைபிடித்தல்
தொலைக்காட்சியில் வரும் விளம்பரங்களைப் பார்த்தால், புகைப்பிடிப்பவர்கள் இளமையிலேயே இறக்க நேரிடும் என்றும், புகை பிடிப்பது உடல் நலத்துக்கு ஆபத்தானது என்றும் எச்சரித்தாலும், அதை ஜனங்கள் வாங்கிச் செல்கின்றனர். அதை நிறுத்த முடியாத அளவுக்கு அடிமையாகி விடுகிறார்கள். நாம் தேவனுக்கு அடிமையாக இருக்க வேண்டுமே தவிர, இப்படிப்பட்ட காரியங்களுக்கு அல்ல. இப்படிப்பட்ட காரியங்களுக்கு அடிமையாகிவிடுவது நமது பகுத்தறிவை முடக்கிவிடும். குடிபோதை மற்றும் கடுமையான போதைப்பொருட்கள் பகுத்தறிவு மனதை விரைவாக மூடிவிட்டு, ஒரு நபரை சிந்திக்காமல் செயல்பட வைக்கும். மனம் செயலிழக்கும் தருணத்தில், பிசாசுகள் விரைவாகக் கைப்பற்றி மனித உடலையும் மனதையும் அட்டூழியங்களைச் செய்ய பயன்படுத்துகின்றன. அந்த நபர் இனி குடிபோதை பழக்கத்திலும் அதின் தாக்கத்தில் இல்லை மற்றும் தண்டனை பெற்றவுடன், அவர் கருணைக்காக கெஞ்சுகிறார், "என்னைத் தள்ளியது பிசாசு" என்று கூறுகிறார்.
உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து, இப்போது அல்லது அதற்குப் பிறகு, உங்கள் இலக்கை பாதிக்கக்கூடிய எந்தவொரு போதைப் பழக்கத்திலிருந்தும் விடுபடுங்கள். பழக்கவழக்கங்கள் ஒரு காரியத்தை மீண்டும் மீண்டும் செய்வதன் மூலம் உருவாகின்றன, மேலும் நீங்கள் தினசரி செய்யும் செயல்களில் கவனம் செலுத்தாமல், நீங்கள் அறியாமலேயே எதிர்மறையான பழக்கத்தை உருவாக்கலாம்.
அழிவுகரமான பழக்கங்களை எப்படி தகர்த்தெறிவது.
- உங்களுக்கு பரிசுத்த ஆவியானவரின் உதவி தேவை
“என் நாமத்தினாலே பிதா அனுப்பப்போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்.” யோவான் 14:26
பரிசுத்த ஆவியானவர் நமக்கு உதவி செய்கிறார், மேலும் அந்த அழிவுகரமான பழக்கங்களை முறியடிக்க அவர் உங்களுக்கு உதவுவார். நீங்கள் செய்யக்கூடிய காரியங்களில் ஒன்று ஆவியில் ஜெபிப்பது. அந்நியபாஷைகளில் ஜெபிப்பதின் மூலம் பரிசுத்த ஆவியானவருக்கு சூழ்நிலையின் மீது ஆதிக்கம் கொடுக்கிறீர்கள்.
- ஜெபத்தின் ஸ்தலத்தில் அந்தப் பழக்கங்களை முறியடித்து விடுங்கள்.
கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும், தேடுங்கள், அப்பொழுது கண்டடைவீர்கள், தட்டுங்கள், அப்பொழுது உங்களுக்குத் திறக்கப்படும்,
ஏனென்றால்,கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான், தேடுகிறவன் கண்டடைகிறான், தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். (மத்தேயு 7:7-8)
- பழக்கத்திற்குப் பின்னால் உள்ள ஆவியை அங்கிகரியுங்கள்.
இப்படி அநேகநாள் செய்துகொண்டு வந்தாள். பவுல் சினங்கொண்டு, திரும்பிபார்த்து; நீ இவளை விட்டுப் புறப்படும்படி இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான். அந்நேரமே அது புறப்பட்டுப்போயிற்று.
(அப்போஸ்தலர் 16:18)
அநேக விசுவாசிகள் இந்த அழிவுகரமான பழக்கவழக்கங்களை இரகசியமாக மறைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் பலர் குறைந்தபட்சம் ஒரு அழிவுகரமான பழக்கத்தோடு அவர்கள் போராடுகிறார்கள் என்பதை ஒப்புக்கொள்வார்கள்.
- உங்கள் புதிய ஸ்தானத்தை அறிக்கையிடுங்கள்.
அறிக்கைகள் உடைமையைக் கொண்டுவருகிறது. நீங்கள் உங்கள் அறிக்கையை மாற்றினால், அது உங்கள் வாழ்க்கையில் புதிய முடிவுகளை ஈர்க்கும். உங்கள் நாக்கால், நீங்கள் அழிக்கலாம் அல்லது உயிர்ப்பிக்கலாம்.
நீர் ஒரு காரியத்தை நிருணயம்பண்ணினால், அது உமக்கு நிலைவரப்படும். உம்முடைய பாதைகளில் வெளிச்சம் பிரகாசிக்கும்.
யோபு 22:28
மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்திலிருக்கும்; அதில் பிரியப்படுகிறவர்கள் அதின் கனியைப் புசிப்பார்கள்.
நீதிமொழிகள் 18:21
தவறான ஒப்புதல் வாக்குமூலம் எப்போதும் தவறான பழக்கங்களை மேம்படுத்தும்..
- உங்கள் எண்ணங்களை மாற்றிக் கொள்ளுங்கள்.
நீங்கள் இந்தப் பிரபஞ்சத்திற்கு ஒத்த வேஷந்தரியாமல், தேவனுடைய நன்மையும் பிரியமும் பரிபூரணமுமானசித்தம் இன்னதென்று பகுத்தறியத்தக்கதாக, உங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாகுங்கள்.
(ரோமர் 12:2)
மாற்றத்தைத் தொடங்குவதற்கான முதல் இடம் உங்கள் மனதில் உள்ளது. உங்கள் மனம் சரியான ஞானத்தால் வலுவடையவில்லை என்றால், அது உங்கள் வாக்குமூலத்தையும் அணுகுமுறையையும் பாதிக்கும். தேவனுடைய வார்த்தையால் உங்கள் மனதை புதுப்பித்துக் கொள்ளுங்கள், இதனால் உங்கள் மனம் வெற்றிபெறும்.
- ஒரு புதிய பழக்கத்தைத் தேர்ந்தெடுத்து, அதை வளர்த்துக் கொள்ளுங்கள்.
சில நேரங்களில் மாற்றம் ஒரே இரவில் நிகழலாம், மற்ற நேரங்களில் அது காலப்போக்கில் இருக்கலாம். அழிவுகரமான பழக்கங்களை உடைக்க நான் கோடிட்டுக் காட்டிய பரிந்துரைக்கப்பட்ட படிகளுடன் தொடர்ந்து இருங்கள்; காலப்போக்கில் நீங்கள் மாற்றங்களைக் காண்பீர்கள்.
அப்படியே நல்ல மரமெல்லாம் நல்ல கனிகளைக் கொடுக்கும், கெட்ட மரமோ கெட்ட கனிகளைக் கொடுக்கும்.
நல்ல மரம் கெட்ட கனிகளைக் கொடுக்கமாட்டாது, கெட்ட மரம் நல்ல கனிகளைக் கொடுக்கமாட்டாது.
(மத்தேயு 7:17-18)
ஜெபம்
ஒவ்வொரு ஜெப ஏவுகணையும் உங்கள் இதயத்திலிருந்து வரும் வரை தொடர்ந்து செய்யவும். அதன் பிறகு அடுத்த ஜெப ஏவுகணைக்குச் செல்லுங்கள். (இதை தொடர்ந்து செய்யவும், உங்களுக்கென்று சொந்தமாக்கிக் கொள்ளுங்கள். ஒவ்வொரு ஜெப குறிப்பையும் குறைந்தபட்சம் 1 நிமிடம் செய்யவும்)
1. இயேசுவின் இரத்தத்தால், இயேசுவின் நாமத்தால் என் இலக்கை அழிக்க விரும்பும் ஒவ்வொரு அழிவுகரமான பழக்கத்திலிருந்தும் நான் விலகிச் செல்கிறேன்.
2. என்னை முன்கூட்டியே அழிக்க விரும்பும் எந்த அழிவு பழக்கங்களும் இயேசுவின் நாமத்தில் அழிக்கப்படும்.
3. தேவனின் வல்லமையால், இயேசுவின் நாமத்தினால் அழிவுகரமான பழக்கங்களிலிருந்து விடுதலை பெறுகிறேன்.
4. பரிசுத்த ஆவியானவரின் அக்கினி, என் ஆவி, ஆத்துமா, சரீரம் வழியாக கடந்து, இயேசுவின் நாமத்தினால் என் வாழ்க்கையில் சத்துருவின் கிரியைகள் வெளியேற்றப்படும்.
5. என் மனதில் இருளின் எந்த கோட்டையும், இயேசுவின் நாமத்தில் உடைக்கப்படுவதாக.
6. இயேசுவின் நாமத்தினால் இருள் சூழ்ந்த எந்த எண்ணங்களையும் என் வாழ்க்கையிலிருந்து பிடுங்கியெறிகிறேன்.
7. பிதாவே, இயேசுவின் நாமத்தினாலே என் வாழ்க்கையின் அஸ்திபாரங்களைச் சரிசெய்யும்.
8. என் இரத்தத்தில் உள்ள எந்த மாசுபாடும், இயேசுவின் இரத்தத்தால், இயேசுவின் நாமத்தினாலே சுத்திகரிக்கப்படும்.
9. இயேசுவின் நாமத்தினால் என் வாழ்வில் எதிர்மறையான நடத்தைகள் மற்றும் உணர்ச்சிகளை சரிசெய்ய நான் கிருபை பெறுகிறேன்.
10. இயேசுவின் நாமத்தினால் அழிவுகரமான பழக்கவழக்கங்களால் என்னைக் கட்டிப்போடும் இருளின் சங்கிலியிலிருந்து நான் என்னை விடுவிக்கப்படுகிறேன்.
Join our WhatsApp Channel
Most Read
● நன்றியுணர்வு ஒரு பாடம்● போற்றப்படாத கதாநாயகர்கள்
● விடாய்த்த நிலையை வரையறுத்தல்
● இரைச்சலுக்கு மேல் இரக்கத்திற்கான அழுகை
● பகுத்தறிவு v/s நியாயதீர்ப்பு
● அற்புதத்தில் இயங்குவது: திறவுகோல் # 1
● உங்கள் ஆசீர்வாதத்தைப் பெருக்குவதற்கான வழி
கருத்துகள்