“அந்த இராத்திரியிலே ராஜாவுக்கு நித்திரை வராதபடியினால், காலவர்த்தமானங்கள் எழுதியிருக்கிற நடபடி புஸ்தகத்தைக் கொண்டுவரச்சொன்னான்; அது ராஜசமுகத்தில் வாசிக்கப்பட்டது. அப்பொழுது வாசற் காவலாளரில் ராஜாவின் இரண்டு பிரதானிகளாகிய பிக்தானாவும் தேரேசும், ராஜாவாகிய அகாஸ்வேருவின்மேல் கைபோடப்பார்த்த செய்தியை மொர்தெகாய் அறிவித்தான் என்று எழுதியிருக்கிறது வாசிக்கப்பட்டது. அப்பொழுது ராஜா: இதற்காக மொர்தெகாய்க்கு கனமும் மேன்மையும் செய்யப்பட்டதா என்று கேட்டான். அதற்கு ராஜாவைச் சேவிக்கிற ஊழியக்காரர்: அவனுக்கு ஒன்றும் செய்யப்படவில்லை என்று சொன்னார்கள்.” (எஸ்தர் 6:1-3)
இந்தச் சம்பவம் அரண்மனையின் செயல்பாட்டை மிகச்சரியாக விளக்குகிறது. அகாஸ்வேரு ராஜா தூங்க முடியாமல், நேரத்தை கடக்க பல விருப்பங்கள் இருந்தபோதிலும், ஒரு புத்தகத்தை தன்னிடம் கொண்டு வந்து படிக்கும்படி கட்டளையிட்டார். புத்தகம் ஏந்தியவர் எந்த நாளிதழின் பதிவுகளிலிருந்தும் தேர்வு செய்திருக்கலாம், ஆனால் அவர் குறிப்பிட்ட ஒன்றைக் கொண்டு வந்தார். புத்தகம் எந்தப் பக்கத்திலும் திறக்கப்பட்டிருக்கலாம், ஆனால் ராஜாவை படுகொலையிலிருந்துகாப்பாற்றுவதில் மொர்தெகாயின் வீரச் செயல்களை விவரிக்கும் பக்கத்திற்கு அது திறக்கப்பட்டது. ஒவ்வொரு அடியிலும், தேவன் வழிநடத்துகிறார் என்பது தெளிவாகிறது.
அகாஸ்வேரு ராஜாவிடம் ஒரு ஞாபக புத்தகம், நாளாகமங்களின் பதிவுகள் புத்தகம் இருந்ததுபோல, தேவனிடமும் ஒரு ஞாபக புத்தகம் உள்ளது. இது மல்கியா 3:16-ல் கூறப்பட்டுள்ளது, “அப்பொழுது கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்; கர்த்தர்கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய நாமத்தைத்தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப்புஸ்தகம் ஒன்று அவருக்கு முன்பாக எழுதப்பட்டிருக்கிறது.”
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், ராஜாவின் புத்தகம் அவருடைய குடிமக்களின் செயல்களைப்பதிவுசெய்தது போல, தேவனின் புத்தகம் அவரை ஞாபகப்படுத்தும் பயப்பக்திக்குரியவர்களின்செயல்களைப் பதிவு செய்கிறது. நம் உழைப்பிற்கும் தயவும் மற்றும் அன்பின் செயல்களுக்கும் பலனை தேவன் அளிக்கிறார். அவர் நம் இருதயத்தை ஆராய்ந்து பார்க்கிறார். நமது ஒவ்வொருசெயலும் ஒரு விதையாக இருக்கிறது, அறுவடையை மீண்டும் நம்மிடம் வருகிறது. எனவேவிதைகளை விதைத்துக்கொண்டே இருங்கள்.
எபிரேயர் 6:10ல் வேதம் சொல்கிறது, “ஏனென்றால், உங்கள் கிரியையையும், நீங்கள்பரிசுத்தவான்களுக்கு ஊழியஞ்செய்ததினாலும் செய்து வருகிறதினாலும் தமது நாமத்திற்காகக்காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்கு தேவன் அநீதியுள்ளவரல்லவே.” எபிரெயர் 6:10. ராஜாவைக் காப்பாற்றியபோது மொர்தெகாய் செய்த நற்செயல்களுக்கு வெகுமதிகொடுக்க மறந்துவிட்டதைப் போல ஜனங்கள் மறந்துவிடலாம். அதை யாரும் குறிப்பிடவில்லை. அது மறைக்கப்பட்டது, அல்லது ஒருவேளை பாதுகாப்புத் தலைவன் அதை பெற்றிருக்கலாம். ஆனால் சரியான நேரத்தில் தேவன் வெளப்படுத்தினார். அவர் தனது நேசமுள் குமாரனை வெளிப்படுத்துவதற்கான நேரம் என்பதால் அவர் ராஜாவிடம் இருந்து துக்கத்தை விளக்கினார்.
மறப்பதற்கு தேவன்அநீதியுள்ளவர் அல்ல என்று வேதம் கூறுகிறது. எனவே, நீங்கள் ஜனங்களோடு போராடத் தேவையில்லை. சில சமயங்களில், நமக்கு பலன்கிடைக்காததால், நம்முடையநற்செயல்களை நிறுத்திவிடுகிறோம். நாம் கசப்பாக மாறுகிறோம். வேலைக்கு தாமதமாக வந்துசோம்பேறியாக இருப்பவர் பதவி உயர்வு பெற்றதால் சிலர் வேலையில் உள்ள ஈடுபாட்டைகுறைத்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் யாரும் பார்க்காததால், தங்கள் அன்பான வழிகளைமாற்றிக் கொள்கிறார்கள். நான் உங்களுக்கு ஒரு நற்செய்தி கூறுகிறேன்; உங்கள் பலன் தேவனிடத்தில் இருக்கிறது. உங்களுக்கான சமயம் வரும்போது, உங்களுக்கு ஆதரவாகமனிதர்களை எப்படி ஏற்படுத்துவது என்பது அவருக்குத் தெரியும்.
இந்த விஷயத்தில், தேவன் ராஜாவிலிருந்து தூக்கத்தை எடுத்தார். அவர் அமைதியற்றவராகஇருந்தார், அவருக்கு ஒரே விஷயம் பதிவு புத்தகத்தின் வழியாகப் பார்ப்பது மட்டுமே. தேவன் சர்வ வல்லமையுள்ளவர். அவர் பூமியை ஆட்சி செய்கிறார், இருதயம் அவர் கைகளில் உள்ளது. எனவேநிதானமாக இருங்கள், பொறுமையோடு இருங்கள். உங்கள் நல் வழிகளைத் தொடருங்கள், மனம் மாறாதிருங்கள். மற்றவர்கள் சோம்பேறியாக இருந்தாலும் வேலையில் விடாமுயற்சியுடன்இருங்கள். நீங்கள் அங்கீகரிக்கப்படாதபோதும் நல்லதைச் செய்யுங்கள். மனிதர்களிடமிருந்து ஒருதற்காலிக தயவை பெறுவதை விட தேவனிடம் இருந்து நித்திய ஆர்வாதத்திற்காக காத்திருப்பது சிறந்தது.
உங்கள் பலன் தேவனிடமிருந்து வருகிறது, உங்களுக்கான நேரம் வரும்போது அவர் உங்களைமறுக்க மாட்டார். “நன்மைசெய்கிறதில் சோர்ந்துபோகாமல் இருப்போமாக; நாம்தளர்ந்துபோகாதிருந்தால் ஏற்றகாலத்தில் அறுப்போம்.”கலாத்தியர் 6:9
Most Read
● மறப்பதால் ஏற்படும் ஆபத்துகள்● நாள் 32 : 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● பின்பற்றவும்
● கிறிஸ்துவில் ராஜாக்களும் ஆசாரியர்களுமாம்
● சரியான கவனம்
● தேவனின் ஏழு ஆவிகள்: கர்த்தருக்குப் பயப்படுகிற ஆவி
● மூன்று மண்டலங்கள்