உங்கள் உயர்வுக்கு ஆயத்தமாகுங்கள்.
நித்திரை தெளிந்தவுடனே சொப்பனம் ஒழிவதுபோல், ஆண்டவரே, நீர்விழிக்கும்போது, அவர்கள் வேஷத்தை இகழுவீர்.” சங்கீதம் 73:20
நம்மைச் சுற்றிலும், தேவனை
அறியாதவர்கள் செழித்து வருவதைக் காண்கிறோம். திடீரென்று நம் மனதில் ஒரு எண்ணம்
ஓடுகிறது: "நான் ஜீவனுள்ள தேவனை ஆராதிக்கிறேன்,
சேவை செய்கிறேன், ஆனால் இன்னும் நான் ஏன் செழிக்கவில்லை
?" அலுவலகங்கள், வணிக நிறுவனங்களில் இந்த நிலை அதிகம் காணப்படுகிறது. தேவன் உறங்குவதில்லை.
ஆனால் சில சமயங்களில், அவர் அவ்வாறு தோன்றுகிறார். ஆனால் தேவன் தனது வெளிப்படையான தூக்கத்திலிருந்து கிளர்ந்தெழுந்தால்
என்ன நடக்கும்? தெய்வ பயமற்ற மனிதன், மிகவும்
புகழ்பெற்றவனாகவும்,செழிப்பானவனாகவும் தோன்றினவன்,
ஒரு கனவாக மறைந்து விடுகிறான். ஆக அது ஒரு மாயையை போல் உள்ளது.
“கிழக்கிலும் மேற்கிலும் வனாந்தரதிசையிலுமிருந்து ஜெயம்
வராது. தேவனே நியாயாதிபதி; ஒருவனைத் தாழ்த்தி, ஒருவனை உயர்த்துகிறார்.” சங்கீதம் 75:6-7
உங்கள் உயர்விற்கான
இரண்டு நடைமுறை திறவுகோலாய் பகிர என்னை அனுமதியுங்கள்:
1. எப்போதும் சரியானதைச் செய்யுங்கள்
எஸ்தர் புத்தகத்தின் கருப்பொருள்களில் ஒன்று பிரசித்தி பெற்றதாக இல்லாவிட்டாலும் சரியானதைச்
செய்வது. எஸ்தரின் தைரியமான துணிச்சலான செயலை நாம் பார்க்கிறோம், அவள் தன் ஜனங்களுக்காக ராஜாவிடம் வேண்டுகோள் விடுக்கிறாள்.
மொர்தெகாய் ராஜாவுக்கு எதிரான தீங்கு விளைவிக்கும் அந்த சதியைக் கண்டுபிடித்தபோது பேசினார். சதித்திட்டத்தின்
பின்னால் சக்திவாய்ந்த சக்திகள் செயல்பட்டன,
ஆனாலும் அப்படி செய்வது சரியானதாக
இருந்தது, காரணம் ராஜாவுக்கு அவர் இவ்வளவு
விசுவாசம் உள்ளவராக இருந்தார்
என்பதை காண்பிக்கிறது. இதன் விளைவாக, வேதபாரர்கள் அவரது செயல்களை அரசின்
நாளாகமங்களில் எழுதினர். சரியான நேரத்தில் அதை ராஜாவின் கவனத்திற்குக் கொண்டுவர தேவன் கிருபை
செய்தார். (எஸ்தர் 3:21-23, 6:1-3). எஸ்தர் மொர்தெகாயை ராஜாவிடம் ஒப்படைத்த நேரத்தில்,
அவர் ஏற்கனவே சிறந்தவராகவும், விசுவாசம் உள்ளவராகவும் தலைமைத்துவத்தின் பண்புகளை பெற்றுள்ளார்.
2. உங்கள் உயரத்திற்கு நம்பிக்கையுடன் அடியெடுத்து வைக்கவும்
பதவி உயர்வு பெற்றவுடன், மொர்தெகாயின் முதல் செயல்,—
தேவனுடைய ஜனங்களை அழித்தொழிக்கும் நோக்கத்தை கொண்ட எதிரியின் ஆணையை தடை விதித்து—ஒரு புதிய ஆணையை எதிர்கொள்வதாகும்.
அந்த புதிய ஆணையை அதை எழுதும் எழுத்தர்களுக்கு உரக்கக் கட்டளையிட்டார்.
அவர் ராஜாவின் முத்திரையைப் பயன்படுத்தி ராஜாவின் பெயரில் சம்பாஷனை
செய்கிறார். அந்த ஆணை வெகுதூரம் அனுப்பப்பட்டது. இந்த தெய்வீக தலையீட்டின் மூலம்,
யூதர்கள் தங்கள் எதிரிகளை வென்றார்கள், அவர்களின்
புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறினது! வேதம் கூறுகிறது,
“என் புலம்பலை ஆனந்தக்களிப்பாக மாறப்பண்ணினீர்; என் மகிமை அமைதியாய் இராமல் உம்மைக்
கீர்த்தனம்பண்ணும்படியாக நீர் என் இரட்டைக் களைந்துபோட்டு, மகிழ்ச்சியினால் என்னை இடைகட்டினீர்.”சங்கீதம் 30:11
அலெக்சாண்டர் தி கிரேட் பற்றி பள்ளியில் உங்கள் வரலாற்று
வகுப்பில் சொன்னது நினைவிருக்கிறதா? அவர் எல்லா காலத்திலும் மிகப் பெரிய தளபதிகளில்
ஒருவராக இருந்தார் மற்றும் அறியப்பட்ட முழு உலகத்தையும் வென்றார். அவர் வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறார் என்பது உங்களுக்குத்
தெரியுமா? வேதாகமத்தில் அவருடைய பெயர் எழுதப்பட்டிருப்பதை நீங்கள் பார்க்க மாட்டீர்கள்,
ஆனால் அவரைப் பற்றிய குறிப்பை டேனியலில் காணலாம். பைபிள் அவரை என்ன அழைக்கிறது என்று
பாருங்கள் - "வெள்ளாட்டுக்கடா". ஒரு
தேவ மனிதன் இவ்வாறு கூறுகிறார்: "உலகிற்கு அலெக்சாண்டர் தி கிரேட் என்று இருந்தாலும் தேவனுக்கு
முன்பாக ஒரு வெள்ளாட்டுக் கடாவே தவிர
வேறில்லை." தேவன் எழுந்தருளும் போது, மாமனிதர்களும்
இல்லாமலே போவார்கள். ஆராதனையிலும்
தேவனுடைய வார்த்தையிலும் நேர்த்தியான
நேரத்தை செலவிடுவதன் மூலம் உங்கள் வாழ்க்கையில்
தேவன் எழுந்தருளுவதற்கு அனுமதியுங்கள்.
கொடுப்பதன் மூலம் அவரை கணப்படுத்துங்கள். இதைச்
செய்வதில் ஒருபோதும் சோர்வடையாதீர்கள்.
மொர்தெகாய்க்கு தூக்கு மேடையை தயார் செய்த ஆமான், அதில்
தானே தூக்கிலிடப்பட்டார். “அப்பொழுது ராஜசமுகத்தில் இருக்கிற பிரதானிகளில் அற்போனா
என்னும் ஒருவன்: இதோ, ராஜாவின் நன்மைக்காகப் பேசின மொர்தெகாய்க்கு ஆமான் செய்வித்த
ஐம்பது முழ உயரமான தூக்குமரம் ஆமானின் வீட்டண்டை நாட்டப்பட்டிருக்கிறது என்றான்; அப்பொழுது
ராஜா: அதிலே அவனைத் தூக்கிப்போடுங்கள் என்றான்.” எஸ்தர் 7:9 உங்கள் உயர்வுக்கு தயாராகுங்கள்!
Most Read
● கர்த்தர் ஒருபோதும் தோல்வியடைய மாட்டார்● கடவுளுக்கு முதலிடம் #3
● ஆவிக்குரிய பெருமையின் கனி
● ஊக்கமின்மையின் அம்புகளை முறியடித்தல் - II
● கோபத்தை கையாள்வது
● தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்
● உங்கள் போராட்டம் உங்கள் அடையாளமாகி விடாதீர்கள் -2