தினசரி மன்னா
சாபத்தீடானதை விட்டு விலகுங்கள்
Thursday, 9th of February 2023
2
0
617
Categories :
Deliverance
“சாபத்தீடானதில் ஏதாகிலும் எடுத்துக்கொள்ளுகிறதினாலே, நீங்கள் சாபத்தீடாகாதபடிக்கும், இஸ்ரவேல் பாளயத்தைச் சாபத்தீடாக்கி அதைக் கலங்கப்பண்ணாதபடிக்கும், நீங்கள் சாபத்தீடானதற்கு மாத்திரம் எச்சரிக்கையாயிருங்கள்.” யோசுவா 6:18
ஒருமுறை ஒருவர் என்னை அணுகி ஒரு வினோதமான சம்பவத்தைப் பகிர்ந்து கொண்டார். அவர் ஒரு புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்தார், ஆனால் விசித்திரமான இயற்கைக்கு அப்பாற்பட்ட வெளிப்பாடுகள் அந்த வீட்டில் நிகழ்ந்தன. சில சமயங்களில் அவரும் அவரது மனைவியும் ஒரு குறிப்பிட்ட அறையில் இருந்து ஒரு விசித்திரமான, சற்றே தீயக் காரியம் இருப்பதை உணர்ந்தனர். பல சந்தர்ப்பங்களில், இருவரும் ஒரே அறையில் ஒரு நீராவி போன்ற நிழல் உருவம் தரையில் வேகமாக நகர்வதைக் கண்டனர். அவர்களின் மகளும் மகனும் கூட இதே கவலையை வெளிப்படுத்தினர், மேலும் அவர்கள் என்னிடம் ஜெபத்திற்காக விஷயத்தைக் கொண்டு வந்தார்கள்.
அவர்கள் வெளிநாட்டுப் பயணம் சென்றிருந்தபோது வாங்கிய பல நூறு ஆண்டுகள் பழமையான மரப் பழங்காலப் பொருளைப் பற்றி உடனே என்னிடம் கூறினார். அதன் அழகு மற்றும் பழமையானது என்பதற்காக அவர் அதை வாங்கினார். ஆப்பிரிக்காவில் சில பழங்குடியினர் அசுத்தமானவைகளின் சடங்குகளில் இந்த பொருளை எவ்வாறு பயன்படுத்தினர், இது எப்படி அசுத்த ஆவிகளை ஈர்க்கிறது என்பதை நான் அவருக்கு விளக்கினேன்.
பிசாசு எப்போதும் வீடுகளில் ஒரு துளை கண்டுபிடிக்க முயற்சிக்கிறான், அதனால் அவன் அந்த வீட்டிற்குள் பிரவேசித்து செயல்படுகிறான். ஒரு கலைப்படைப்பை அப்பாவித்தனமாக வாங்குவதை நீங்கள் கற்பனை செய்யலாம்; அது பின்னர் கழுத்தில் ஒரு கொக்கியாக மாறுகிறது. ஒரு குடியிருப்பை வாடகைக்கு எடுப்பதை கற்பனை செய்து பாருங்கள், அது உங்கள் வீட்டில் சமாதானத்தை திருடத் தொடங்குகிறது. இவை அனைத்தும் பிசாசின் சூழ்ச்சிகள். உங்கள் வீடு சில பேய் தாக்குதலுக்கு உள்ளான அதேபோன்ற சூழ்நிலையில் நீங்கள் இருக்கிறீர்களா? அல்லது நீங்கள் உங்கள் வீட்டில் அமைதியை இழந்து, உங்கள் மனைவியின் மீது தவறுகளை எடுத்துக் காண்பிக்கிறீர்களா?
மத்தேயு 13:24-30ல் இயேசு இதே போன்ற உவமையைக் கூறினார். வேதம் சொல்கிறது, “வேறொரு உவமையை அவர்களுக்குச் சொன்னார்: பரலோகராஜ்யம் தன் நிலத்தில் நல்ல விதையை விதைத்த மனுஷனுக்கு ஒப்பாயிருக்கிறது. மனுஷர் நித்திரைபண்ணுகையில் அவனுடைய சத்துரு வந்து, கோதுமைக்குள் களைகளை விதைத்துவிட்டுப்போனான். பயிரானது வளர்ந்து கதிர்விட்டபோது, களைகளும் காணப்பட்டது. வீட்டெஜமானுடைய வேலைக்காரர் அவனிடத்தில் வந்து: ஆண்டவனே, நீர் உமது நிலத்தில் நல்ல விதையை விதைத்தீர் அல்லவா? பின்னை அதில் களைகள் எப்படி உண்டானது என்றார்கள். அதற்கு அவன்: சத்துரு அதைச் செய்தான் என்றான். அப்பொழுது வேலைக்காரர்: நாங்கள் போய் அவைகளைப் பிடுங்கிப்போட உமக்குச் சித்தமா? என்று கேட்டார்கள். அதற்கு அவன்: வேண்டாம், களைகளைப் பிடுங்கும்போது நீங்கள் கோதுமையையுங்கூட வேரோடே பிடுங்காதபடிக்கு, இரண்டையும் அறுப்புமட்டும் வளரவிடுங்கள். அறுப்புக்காலத்தில் நான் அறுக்கிறவர்களை நோக்கி: முதலாவது, களைகளைப் பிடுங்கி, அவைகளைச் சுட்டெரிக்கிறதற்குக் கட்டுகளாகக் கட்டுங்கள்; கோதுமையையோ என் களஞ்சியத்தில் சேர்த்துவையுங்கள் என்பேன் என்று சொன்னான் என்றார்.”
வேலைக்காரர்கள் உண்மையில் நல்ல விதைகளை விதைத்தனர், ஆனால் ஏதோ தவறு ஏற்பட்டது. விதையை கெடுக்க சத்துரு வந்தான். "சத்துரு அதைச் செய்தான்" என்று இயேசு உறுதியாகக் கூறினார். ஒரு சத்துரு உங்கள் வீட்டில் சபிக்கப்பட்ட பொருளை விதைத்துள்ளான். தேவனின் ஆவியிலிருந்து வேறுபட்ட விசித்திரமான ஆவிகளுடன் ஒரு சத்துரு உங்கள் வீட்டிற்குள் ஊடுருவிவிட்டான். ஆம், நீங்கள் அப்பாவித்தனமாக வீட்டை வாங்கியிருக்கலாம், சந்தேகத்திற்கு இடமின்றி நீங்கள் வேலைக்கு விண்ணப்பித்திருக்கலாம். ஆனால் அந்த போராட்டங்களுக்குப் பின்னால் ஒரு சத்துரு இருக்கிறான்.
இதோ இயேசு தரும் தீர்வு, நாம் சத்துருவின் கிரியைளை அகற்றி அதை எரிக்க வேண்டும். உங்கள் திருமணத்தில் தேவன் உங்களுக்கு என்ன சாபத்தீடானதை விஷயமாக காண்பிக்கிறார்? உங்கள் குடும்பத்தில் சாபத்தீடானதை விஷயமாக தேவன் எதைச் சுட்டிக்காட்டினார்? அதை எடுத்து, கட்டி, எரிக்க வேண்டிய நேரம் இது. உங்கள் சமாதானத்தையும் மகிழ்ச்சியையும் பிசாசு திருடுவதை நீங்கள் பார்க்க முடியாது. ஆவியில் யுத்தம் செய்வதற்கான நேரம் இது, அதனால் சாபத்தீடான காரியங்கள் உங்கள் வீட்டை விட்டு வெளியேறும். உங்களுக்கு எது விருப்பம் இல்லையோ அதை பார்க்க மாட்டீர்கள்.
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், நீர் என் வீட்டிற்கு கொண்டு வரும் சுதந்திரத்துக்கு நன்றி. என் குடும்பத்தில் உம் கிருபைக்கும் இரக்கத்திற்கும் நன்றி. எங்கள் மகிழ்ச்சியைத் திருடுவதற்கும், எங்களை வேதனைப்படுத்துவதற்கும் பிசாசு பயன்படுத்தும் சாபத்தீடான பொருளைப் பார்க்க எங்கள் கண்களைத் திறக்கும்படி நான் ஜெபிக்கிறேன். எனது குடும்பம் உண்மையில் கிறிஸ்து இயேசுவுக்குள் சுதந்திரமானது என்று நான் கட்டளையிடுகிறேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● ஆண்டவரே, கவனச்சிதறல்களிலிருந்து என்னை விடுவியும்● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் -3
● தேடி கண்டுபிடித்து ஒரு கதை
● தேவன் எப்படி வழங்குகிறார் #4
● நடவடிக்கை எடு
● மாற்றுவதற்கு தாமதமாக வேண்டாம்
● அர்ப்பணிப்பின் இடம்
கருத்துகள்