“மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள். பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.” கலாத்தியர் 5:19-21
சந்தேகமே இல்லை, மாம்சத்தின் கிரியைகள் முழு வீச்சில் வெளிப்பட ஆரம்பிக்கும் கடைசி நாட்களில் நாம் இருக்கிறோம். சாத்தான் வெவ்வேறு ஆவிகளை பூமியில் விடுவித்த நேரத்தில் நாம் இருக்கிறோம், எனவே விசுவாசிகள் கூட கவனமாக இருக்க வேண்டும். நாம் நம் இருதயங்களைக் காத்துக்கொள்ள வேண்டிய நேரத்தில் இருக்கிறோம், இல்லையெனில் இந்த அழிவுச் சக்திகளுக்கு நாம் பலியாகலாம். இந்த ஆவிகள் வெவ்வேறு வடிவங்களில் வெளிப்படுவதைப் பற்றி வேதம் பேசுகிறது, மேலும் நாம் அதற்கு பலியாகாமல் இருக்க பார்க்க வேண்டும்.
மேலும், கிறிஸ்து பூமிக்கு திரும்ப வருவதற்குமுன் கடைசி நாட்களில் முக்கியமாக இருக்கும் பாவங்களை வெளிப்படுத்தின விசேஷம் பட்டியலிடுகிறது. உதாரணமாக, வெளிப்படுத்துதல் 9:20-21ல் வேதம் சொல்கிறது, “அப்படியிருந்தும், அந்த வாதைகளால் கொல்லப்படாத மற்ற மனுஷர்கள் பேய்களையும், பொன் வெள்ளி செம்பு கல் மரம் என்பவைகளால் செய்யப்பட்டவைகளாயும் காணவும் கேட்கவும் நடக்கவுமாட்டாதவைகளாயுமிருக்கிற விக்கிரகங்களையும்; வணங்காதபடிக்குத் தங்கள் கைகளின் கிரியைகளைவிட்டு மனந்திரும்பவுமில்லை; தங்கள் கொலைபாதகங்களையும், தங்கள் சூனியங்களையும், தங்கள் வேசித்தனங்களையும், தங்கள் களவுகளையும் விட்டு மனந்திரும்பவுமில்லை.”
இந்த ஆவிகளில் ஒன்று சூனியம். கடைசி காலங்களில் மக்களைக் கட்டுப்படுத்தும் அனைத்து ஆவிகளிலும் இதுவே வலிமையான ஆவியாக இருக்கலாம். சூனியம் என்பது அமானுஷ்யம் அல்லது மாந்திரீகத்துடன் தொடர்புடையது என்று நாங்கள் நினைக்கிறோம். இருப்பினும், இந்த வார்த்தையின் பொருள் மிகவும் ஆழமானது. "சூனியம்" என்பதற்கான கிரேக்க வார்த்தை ஃபார்மேக்கியா.
வெளிப்படுத்துதல் 18:23ல் வேதம் சொல்கிறது, “விளக்கு வெளிச்சம் இனி உன்னிடத்தில் பிரகாசிப்பதுமில்லை; மணவாளனும் மணவாட்டியு மானவர்களுடைய சத்தம் இனி உன்னிடத்தில் கேட்கப்படுவதுமில்லை. உன் வர்த்தகர் பூமியில் பெரியோர்களாயிருந்தார்களே; உன் சூனியத்தால் எல்லா ஜாதிகளும் மோசம்போனார்களே.” இந்த வார்த்தையில் இருந்துதான் பார்மசி என்ற ஆங்கிலச் சொல்லைப் பெற்றோம். இது புதிய ஏற்பாட்டில் ஐந்து முறை பயன்படுத்தப்பட்டுள்ளது (கலாத்தியர் 5:20; வெளிப்படுத்துதல் 9:21; 18:23; 21:8; 22:15). சில நேரங்களில் இது "மாந்திரீகம்" என்றும் மற்ற நேரங்களில் "சூனியம்" என்றும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.
ஒரு நெருங்கிய போதகர் நண்பர் ஒருமுறை மற்ற நபர்களுடன் ஒரு விருந்தில் இருந்தார். (இது அவர் இரட்சிக்கப்படுவதற்கு முன்பு நடந்தது). அவர்கள் அனைவரும் மது அருந்திக் கொண்டிருந்தபோதும், போதைப்பொருளை அதிகமாக உட்கொண்டும் இருந்தபோது, அவர் அறையில் ஒரு விசித்திரமான, பயந்த தோற்றமுள்ள உயிரினம் நடமாடுவதைக் கண்டார். அது பேய் என்பதை அறிந்து அலறி துடித்தார். அவர் இயேசுவே என்று கத்த, அந்த உயிரினம் காற்றில் கரைந்தது. ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால், போதையில் இருந்த அவரது நண்பர்கள் அனைவருக்கும் திடீரென்று நினைவு வந்தது. இந்த உயிரினத்தைப் பற்றி அவர்களிடம் கூறினார். அவர்களும் இந்த உயிரினத்தைப் பார்த்ததை ஒப்புக்கொண்டனர். இது போதையின் அரக்கனாக இருந்தது. அவர்கள் அனைவரும் காப்பாற்றப்பட்டனர்.
இதேபோன்ற அசாதாரண ஆவிகளின் அடிமைத்தனத்தில் எத்தனை பேர் தங்களைக் கண்டறிந்திருக்கிறார்கள்? அப்படிப்பட்ட ஆவிகள் நம்மை கவராமல் இருக்க நாம் கவனமாக இருக்க வேண்டும். மேலும் முக்கியமானது எல்லா நேரங்களிலும் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட வேண்டும். எபேசியர் 5:18-21ல் வேதம் சொல்கிறது, “துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து; சங்கீதங்களினாலும் கீர்த்தனைகளினாலும் ஞானப்பாட்டுகளினாலும் ஒருவருக்கொருவர் புத்திசொல்லிக்கொண்டு, உங்கள் இருதயத்தில் கர்த்தரைப் பாடிக் கீர்த்தனம்பண்ணி, நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே எப்பொழுதும் எல்லாவற்றிற்காகவும் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரித்து, தெய்வபயத்தோடே ஒருவருக்கொருவர் கீழ்ப்படிந்திருங்கள்.”
எல்லா நேரங்களிலும் சரியான நண்பர்களுடன் உங்களைச் இணைத்துக் கொள்ளுங்கள். இந்த அசாதாரண ஆவிகளை மக்களுக்கு உட்படுத்தும் பாடல்கள் எல்லாம் இப்போது ஏராளமாய் உள்ளன. ஆகவே தான், சங்கீதங்களையும் ஆன்மீகப் பாடல்களையும் பாடுங்கள் என்று வேதம் கூறுகிறது, அதினால் உங்கள் உள்ளான மனிதன் எப்போதும் தேவனுக்காக ஜீவனுடன் இருக்க முடியும், இதன் மூலம் இந்த கடைசி நாட்களின் ஆவிக்கு எதிராக கதவை அடைக்க முடியும்.
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இன்று என் இருதயத்தில் உமது வார்த்தையின் வெளிச்சத்திற்கு நான் நன்றி கூறுகிறேன். என் இருதயத்தின் வாசலை உண்மையுடன் காத்துக்கொள்ள நீர் எனக்கு உதவ வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். விசுவாசத்தின் ஸ்திரத்தன்மைக்காக நான் ஜெபிக்கிறேன், அதினால் நான் இந்த கடைசி காலத்தின் காற்ற்றினாலும் அலைகளினாலும் அடித்துச் செல்லப்படமாட்டேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● தேவனுக்கு முதலிடம் கொடுப்பது #1● ஒரு வித்தியாசமான இயேசு, வித்தியாசமான ஆவி மற்றும் மற்றொரு நற்செய்தி - I
● அசுத்த எண்ணங்களுக்கு எதிரான யுத்தத்தில் வெற்றி
● வெற்றிக்கான சோதனை
● இயேசுவின் இரத்தத்தைப் பூசுதல்
● உங்கள் உண்மையான மதிப்பைக் கண்டறியவும்
● ஆண்டவராகிய இயேசுவின் மூலம் கிருபை
கருத்துகள்