“பின்பு அவர் எருசலேமுக்குப் பிரயாணம்பண்ணுகையில், அவர் சமாரியா கலிலேயா என்னும் நாடுகளின் வழியாக நடந்துபோனார். 12. அவர் ஒரு கிராமத்தில் பிரவேசித்தபோது, குஷ்டரோகமுள்ள மனுஷர் பத்துப்பேர் அவருக்கு எதிராக வந்து, தூரத்திலே நின்று:” லூக்கா 17:11,12
அந்த பத்து குஷ்டரோகிகளின் ஒருவராக கற்பனை செய்து பாருங்கள். குஷ்டரோகத்தால் வரும் வலி, தனிமைப்படுத்தல், நிராகரிப்பு மற்றும் பயம் ஆகியவற்றை கற்பனை செய்து பாருங்கள். மோசே நியாயப்பிரமாணத்தின் படி, அவர்கள் மற்றவர்களிடமிருந்து விலகி, தங்கள் ஆடைகளைக் கிழித்து, " தித்து, தித்து" என்று கூக்குரல் இடுவதாய் கற்பனை செய்து பாருங்கள். அவர்களின் இருதயங்களில் நம்பிக்கையின்மை மற்றும் விரக்தி நிரப்பியிருப்பதை கற்பனை செய்து பாருங்கள்.
இன்னும், இந்த குஷ்டரோகிகள் நம்மில் பலர் மறந்துவிட்ட ஒன்றை அறிந்திருக்கிறார்கள்: இரக்கத்திற்காக எப்படி முறையிடுவது என்பது அவர்களுக்குத் தெரியும். இயேசு ஐயரே, எங்களுக்கு இரங்கும் என்று சத்தமிட்டார்கள். லூக்கா 17:13
உங்கள் குரலை உயர்த்துவது ஜெபத்தின் அடையாளமாகும். உங்கள் சூழ்நிலையில் தேவன் தலையிட வேண்டுமென நீங்கள் விரும்பினால், நீங்கள் ஜெபத்தில் உங்கள் குரலை உயர்த்துவது கட்டாயமாகும்.
அவர்கள் இயேசுவை தங்கள் ஒரே நம்பிக்கையாக உணர்ந்து, இரக்கத்திற்காக அவரிடம் மன்றாடினார்கள். “அவர்களை அவர் பார்த்து: நீங்கள் போய், ஆசாரியர்களுக்கு உங்களைக் காண்பியுங்கள் என்றார். அந்தப்படி அவர்கள் போகையில் சுத்தமானார்கள்.” . லூக்கா 17:14 -15. அவர்களில் ஒருவன் தான் ஆரோக்கியமானதைக் கண்டு, திரும்பிவந்து, உரத்த சத்தத்தோடே தேவனை மகிமைப்படுத்தி, 16. அவருடைய பாதத்தருகே முகங்குப்புற விழுந்து, அவருக்கு ஸ்தோத்திரஞ்செலுத்தினான்; அவன் சமாரியனாயிருந்தான். லூக்கா 17:16
அநேகர் சுகத்யைiயும் விடுதலையையும் பெறுகிறார்கள், ஆனால் மிகச் சிலரே வந்து சாட்சிகொடுத்து கர்த்தருக்கு மகிமை செலுத்துகிறார்கள்.
நன்றி உணர்வை பற்றிய பல பாடங்களை இந்த அற்புதம் நமக்குக் கற்றுத் தருகிறது. முதலில், நன்றியுணர்வு என்பது ஒரு தேர்வு. நம்மிடம் இல்லாதவற்றிலேயே கவனம் செலுத்துவதை நாம் தேர்வு செய்யலாம் அல்லது நம்மிடம் உள்ளதற்கு நன்றி செலுத்துவதைத் தேர்ந்தெடுக்கலாம். இயேசுவிடம் திரும்பிய குஷ்டரோகி தனது நன்றியைத் தெரிவிக்க மனப்பூர்வமாகத் தேர்ந்தெடுத்தார், அதன் காரணமாக அவர் ஆசீர்வதிக்கப்பட்டார்.
இரண்டாவதாக, நன்றியுணர்வு என்பது ஒரு ஆராதனையின் முறை. அவருடைய ஆசீர்வாதங்களுக்காக நாம் தேவனுக்கு நன்றி செலுத்தும்போது, அவருடைய நன்மையையும், அன்பையும், இரக்கத்தையும் ஒப்புக்கொள்கிறோம். நாம் அவரை மகிமைப்படுத்துகிறோம், அவருக்குத் தகுதியான கனத்தை செலுத்துகிறோம் .
இறுதியாக, நன்றியுணர்வு என்பது பரவக்கூடியதாக இருக்கிறது. நாம் நன்றியைத் தெரிவிக்கும்போது, மற்றவர்களையும் அவ்வாறே செய்யத் தூண்டுகிறோம். நாம் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் பரப்புகிறோம், நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஆசீர்வாதமாக மாறுகிறோம்.
நாம் அன்றாட வாழ்க்கையைச் செல்லும்போது, குஷ்டரோகிகளையும் அவர்கள் இரக்கத்திற்காக மன்றாடுவதை நினைவு கூர்வோம். இயேசுவுக்கு நன்றி சொல்லத் திரும்பியவரை நினைவுகூர்ந்து, அவருடைய முன்மாதிரியைப் பின்பற்றுவோம். நன்றியுள்ளவர்களாகவும், தேவனாய் ஆராதிக்கவும், நாம் எங்கு சென்றாலும் தேவனின் மகிழ்ச்சியையும் அவருடைய நம்பிக்கையையும் பரப்புவதைத் தேர்ந்தெடுப்போம்.

ஜெபம்
பிதாவே, நன்றி நிறைந்த இருதயத்துடன் இன்று உம் முன் வருகிறேன். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் நீர் காண்பிக்கும் இரக்கத்திற்கு நன்றி; அவை காலை தூறும் புதியவைகளாய் இருக்கிறது. நான் எங்கு சென்றாலும் உம் ஆசீர்வாதத்தின் கருவியாக என்னை உருவாக்கும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● எஸ்தரின் ரகசியம் என்ன?● நாள் 19:21 நாட்கள் உபவாசம் மற்றும் பிரார்த்தனை
● தயவு முக்கியம்
● நாள் 14: 40 நாட்கள் உபவாச ஜெபம்
● நாள் 13: 40 நாட்கள் உபவாசம் & ஜெபம்
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 4
● தேவன் பலன் அளிப்பவர்
கருத்துகள்