நான் மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவன் என்பது உங்களில் பலருக்குத் தெரியும். காரியங்கள் எதுவும் எளிதில் வரவில்லை, ஆனால் என் அப்பாவும் அம்மாவும் எங்களை நிர்வகிப்பதில் ஒரு பெரிய வேலை செய்தார்கள், மூன்று குழந்தைகள். எனக்கு ஒரு பிறந்தநாள் நினைவிருக்கிறது, எனக்கு ஒரு பூதக்கண்ணாடி வாங்கித் தருமாறு என் அம்மாவிடம் கேட்டேன். இன்றைய பிள்ளைகளுக்கு இது பெரும் மதிப்பைக் கொண்டிருக்கவில்லை, ஆனால் அந்த நாட்களில், இது தனித்துவமான ஒன்று.
நான் என் பூதக்கண்ணாடியை எடுத்து எறும்புகளின் துளைகளிலிருந்து வெளியே வருவதைப் பார்ப்பேன். அவை மிகவும் பெரிதாகத் தெரிந்தன; அவைகள் மிகவும் வித்தியாசமாகவும் இருந்தன. எல்லா விவரங்களையும் என்னால் பார்க்க முடிந்தது. என்னைப் போன்ற ஒரு குழந்தைக்கு, இது ஒரு புதியதொரு உலகத்தைத் திறந்தது.
“என்னோடே கூடக் கர்த்தரை மகிமைப்படுத்துங்கள்; நாம் ஒருமித்து அவர் நாமத்தை உயர்த்துவோமாக.”(சங்கீதம் 34:3)
கர்த்தரை மகிமைப்படுத்துவதன் மூலம், நீங்கள் அவரைப் பெரிதாக்குவதில்லை. ஆனாலும், அவர் உங்கள் மனதின் பார்வையை நிரப்புகிறார், மேலும் அவர் உங்கள் வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாக மாறுகிறார்.
அப்படியென்றால் ஒருவர் எப்படி கர்த்தரை மகிமைப்படுத்துவது?
நீங்கள் எதற்கு கவனம் செலுத்துகிறீர்களோ, அது உங்கள் மனதில் வளரும்.
“கர்த்தரை நான் எக்காலத்திலும் ஸ்தோத்திரிப்பேன்; அவர் துதி எப்போதும் என் வாயிலிருக்கும். கர்த்தருக்குள் என் ஆத்துமா மேன்மைபாராட்டும்; சிறுமைப்பட்டவர்கள் அதைக்கேட்டு மகிழுவார்கள்.” (சங்கீதம் 34:1-2 )
இவை ஆபத்தான நேரங்கள், உங்கள் வெற்றி நிலையைத் தக்கவைக்க, நீங்கள் சரியான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும்; இல்லையெனில், அவை உங்கள் பார்வையை மறைத்துவிடும்.
நீங்கள் வேலை செய்யும் போது கூட, வீட்டில் சில மென்மையான ஆராதனைப் பாடல்களை கேளுங்கள். அவரை துதித்துக்கொண்டே இருங்கள், நாள் முழுவதும் ஆராதனைப் பாடல்களைப் பாடிக்கொண்டே இருங்கள். இது உங்கள் இருதயத்தையும் மனதையும் தேவன் மீது வைக்கும். நீங்கள் இதைச் செய்யும்போது, நீங்கள் அவரைப் பெரிதாக்குவீர்கள். தேவன் உங்கள் வாழ்க்கையின் ஒரு பெரிய பகுதியாக மாறுவார், மேலும் உங்கள் வழியில் நிற்கும் ஒவ்வொரு தடையையும் கடக்க உங்களுக்கு அதிகாரம் கிடைக்கும்.
ஜெபம்
ஒவ்வொரு ஜெபக் குறிப்பையும் குறைந்தது 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல் ஜெபம் செய்யப்பட வேண்டும்
ஆவிக்குரிய வளர்ச்சி
தேவனே, நீர் இந்த அண்டசராசரத்தையும் உருவாக்கியதற்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். நீர் நித்திய தேவன். நித்திய பிதா. ஒரே உண்மையான தேவன். நாங்கள் எங்கள் இருதயங்களையும், மனதையும், எங்கள் கண்களையும் உங்கள் மீது செலுத்தும்போது, நீர் யார் என்பதை நாங்கள் காண்போம் என்று நாங்கள் ஜெபிக்கிறோம். இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் உம்மை மகிமைப்படுத்தி மகிமையையும் கனத்தையும் புகழையும் கொண்டு வருகிறோம், ஆமென்!
குடும்ப இரட்சிப்பு
நான் முழு மனதுடன் நம்புகிறேன், நானும் எனது வீட்டாரும் உம்மையே சேவிப்போம் என்று அறிக்கை செய்கிறேன். வரும் என் தலைமுறையும் கர்த்தருக்கு சேவை செய்யும். இயேசுவின் நாமத்தில் .
பொருளாதார திருப்புமுனை
பிதாவே, எனக்கு வரும் ஒவ்வொரு வாய்ப்பையும் அதிகபட்சமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தேவையான தொழில் மற்றும் மனத் திறன்களைக் தாரும். இயேசுவின் நாமத்தில். என்னை ஆசீர்வாதமாக மாற்றும்.
சபை வளர்ச்சி
பிதாவே நேரலை ஆராதனைகளை, பார்க்கும் ஒவ்வொரு நபரும் குறிப்பிடத்தக்க அற்புதங்களைப் பெறட்டும், அதைப் பற்றி கேட்கும் அனைவரையும் திகைக்க வைக்கும். இந்த அற்புதங்களைப் பற்றிக் கேள்விப்படுபவர்களும் உங்களை நோக்கித் திரும்பும் நம்பிக்கையைப் பெற்று, அற்புதங்களைப் பெறட்டும்.
தேசம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இருளின் பொல்லாத வல்லமையின் அமைக்கப்பட்ட அழிவின் ஒவ்வொரு பொறியிலிருந்தும் எங்கள் தேசத்தை (இந்தியா) விடுவித்தருளும்.
Join our WhatsApp Channel
Most Read
● உங்கள் தரத்தை உயர்த்துங்கள்● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் -2
● உங்கள் அனுபவங்களை வீணாக்காதீர்கள்
● நித்தியத்தில் முதலீடு
● ஜெபத்தில் கவனச்சிதறல்களை எவ்வாறு சமாளிப்பது
● நாள் 40:40 நாட்கள் உபவாச ஜெபம்
● கிருபையின்மேல் கிருபை
கருத்துகள்