தினசரி மன்னா
உங்கள் விடுதலை மற்றும் சுகத்திற்கான நோக்கம்
Wednesday, 12th of July 2023
0
0
659
Categories :
Deliverance
Health and Healing
“வானங்களைச் சிருஷ்டித்து பூமியையும் வெறுமையாயிருக்கச் சிருஷ்டியாமல் அதைக் குடியிருப்புக்காகச் செய்து படைத்து, அதை உருவேற்படுத்தின தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறதாவது: நானே கர்த்தர், வெறொருவர் இல்லை.” ஏசாயா 45:18
தேவன் பூமியை வீணாகப் படைக்கவில்லை. தேவன் எதை செய்தாலும் அதில் ஒரு நோக்கம் உண்டு. தேவன் எதைச் செய்தாலும் அதை ஒரு நோக்கத்திற்காகச் செய்கிறார். நோக்கமில்லாமல் எதையும் செய்வதில்லை.
நீங்கள் இதைப் படிக்கிறதற்கு உங்களுக்கோ அல்லது உங்கள் அன்புக்குரியவருக்கோ விடுதலையைத் தேடுவதாய் இருக்கலாம். ஒருவேளை உங்களில் சிலர் குணமடைய நாடுகின்றனர் - சரீரப்பிரகாரமாகவோ அல்லது உணர்ச்சிப்பூர்வமாகவோ. ஆனால், நான் உங்களுக்குச் சொல்கிறேன், குணப்படுத்துவதற்கும் விடுதலை செய்வதற்கும் கூட ஒரு நோக்கம் இருக்கிறது.
தெய்வீக குணப்படுத்துதல் மற்றும் விடுதலையின் நோக்கத்தை நீங்கள் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். தேவன் ஏன் குணப்படுத்துகிறார் மற்றும் விடுதலையை வழங்குகிறார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளும்போது, அதை நீங்கள் மதிக்க கற்றுக்கொள்வீர்கள், அதை பராமரிக்கவும் கற்றுக்கொள்வீர்கள்.
ஏதோவொன்றில் இருந்து தேவன் நம்மை விடுவித்ததன் நோக்கம் நாம் ஏதோவொன்றில் நுழைய வேண்டும் என்பதாகும். தெய்வீக விடுதலை என்பது நீங்கள் இருக்கும் இடத்தில் இருப்பதற்காக எதையாவது விட்டு வெளியேறுவது அல்ல, ஆனால் ஏதோவொன்றில் நுழைவது. துரதிர்ஷ்டவசமாக, பலர் ஏதோவொன்றிலிருந்து வெளியே வருகிறார்கள், ஆனால் அவர்கள் இருக்கும் இடத்திலேயே இருக்கிறார்கள்; அவர்கள் ஏதோவொன்றில் இறங்கி தங்கள் விடுதலையை இழக்க மாட்டார்கள்.
இஸ்ரவேல் 430 வருடங்கள் எகிப்தின் அடிமைத்தனத்தில் இருந்தது. (யாத்திராகமம் 12:40, கலாத்தியர் 3:15) தேவன் அவர்களை ஒரே இரவில் வெளியே கொண்டு வந்தார். அவர் அவர்களை மட்டும் வெளியே கொண்டு வரவில்லை. அவர் அவர்களை வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்கு அழைத்து வந்தார். உள்ளே பிரவேசிக்லாம் என்று வெளியே வந்தார்கள்.
ஒரு நாள் என்னிடம் ஒரு வாலிபன் நடந்து வந்து, "பாஸ்டர், "நான் மதுவிலிருந்து விடுவிக்கப்பட்டேன்" என்றான். "அது மிகவும் நல்லது", நான் பதிலளித்தேன். அவன் தொடர்ந்தான், "இப்போது நான் இறக்குமதி செய்யப்பட்ட சுவையுள்ள புகையிலையை மட்டுமே மென்று சாப்பிடுகிறேன்" சிலர் ஒரு போதையிலிருந்து விடுபடுகிறார்கள். ஆனால் இன்னொரு போதையில் மாட்டிக்கொள்ளுகிறார்கள். அதைப்பற்றி நான் இங்கு பேசவில்லை.
“இருளின் அதிகாரத்தினின்று நம்மை விடுதலையாக்கி, தமது அன்பின் குமாரனுடைய ராஜ்யத்திற்கு உட்படுத்தினவருமாயிருக்கிற பிதாவை ஸ்தோத்திரிக்கிறோம்.” கொலோசெயர் 1:13
தேவன் நம்மை இருளின் இராஜ்ஜியத்திலிருந்து விடுவித்து (வெளியே கொண்டுவந்து) அவருடைய குமாரனாகிய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் ராஜ்யத்திற்குள் கொண்டுவந்தார் என்று வேதம் தெளிவாகச் சொல்கிறது.
உங்கள் விடுதலை மற்றும் சுகத்தின் முதன்மை நோக்கம், நீங்கள் தேவன் கொடுத்த பணியில் நுழைய முடியும் என்பதே.
ஜெபம்
ஒவ்வொரு ஜெப விண்ணப்பங்களுக்கும் குறைந்தது 2 நிமிடங்கள் மற்றும் அதற்கு மேல் ஜெபிக்க வேண்டும்.
தனிப்பட்ட ஆவிக்குரிய வளர்ச்சி
நான் கிறிஸ்து இயேசுவில் ஒரு புது சிருஷ்டி. (2 கொரிந்தியர் 5:17)
நான் அவருடைய தெய்வீக குணத்தில் பங்கு பெற்றவன். (2 பேதுரு 1:4) இயேசுவின் நாமத்தில் நான் இருளின் வல்லமையிலிருந்து விடுவிக்கப்பட்டேன். (கொலோசெயர் 1:13)
(மேற்கண்ட வாக்குத்தத்தங்களை நாள் முழுவதும் சொல்லிக்கொண்டே இருங்கள்)
குடும்ப இரட்சிப்பு
நான் ஒப்புக்கொள்கிறேன், என்னையும் என் வீட்டாரையும் பொறுத்தவரை, நாங்கள் கர்த்தருக்குச் சேவை செய்வோம். தகப்பனே, உமது இரட்சிப்பு ஒவ்வொரு நபருக்கும் பெந்தெகொஸ்தே ஆராதனையில் கலந்துகொள்பவர்களின் குடும்பங்களுக்கும் வரட்டும்.
பொருளாதார முன்னேற்றம்
கர்த்தருடைய வார்த்தையில் நான் மகிழ்ச்சியடைகிறேன்; ஆகையால், நான் ஆசீர்வதிக்கப்பட்டவன். செல்வமும் வசதியும் என் வீட்டில் இருக்கும், என் பொருளாதாரம் என்றென்றும் நிலைத்திருக்கும். (சங்கீதம் 112:1-3) பிதாவே, பெந்தெகொஸ்தே ஆராதனையில் கலந்துகொள்ளும் மக்களின் நிதி மற்றும் உடைமைகளை வைத்திருக்கும் ஒவ்வொரு இருளின் சங்கிலியும் இயேசுவின் நாமத்தில் உடைக்கப்படுவதாக.
KSM சர்ச்
தகப்பனே, இயேசுவின் நாமத்தினால், KSM தேவாலயத்துடன் இணைக்கப்பட்ட ஒவ்வொரு நபரும் வார்த்தையிலும் ஜெபத்திலும் வளர வேண்டும் என்று நான் ஜெபம் செய்கிறேன். அவர்கள் உமது ஆவியின் புதிய அபிஷேகத்தைப் பெறட்டும்.
தேசம்
தகப்பனே, இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் மாநிலத்திலும் உமது ஆவி மற்றும் ஞானத்தால் நிரப்பப்பட்ட தலைவர்களை எழுப்புங்கள். தந்தையே, உமது ஆவி இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் மாநிலத்திலும் சென்று செயல்படட்டும். இயேசுவின் நாமத்தில்.
Join our WhatsApp Channel
Most Read
● தெய்வீக சமாதானத்தை எவ்வாறு அணுகுவது● உதாரணத்திற்கு வழிநடத்துங்கள்
● உங்கள் விடுதலையை எப்படி வைத்திருப்பது
● சாபத்தீடானதை விட்டு விலகுங்கள்
● ஆவிக்குரிய பெருமையின் கனி
● தலைப்பு: உங்கள் அணுகுமுறை உங்கள் உயரத்தை தீர்மானிக்கிறது
● தேவனின் ஏழு ஆவிகள்: அறிவின் ஆவி
கருத்துகள்