தினசரி மன்னா
0
0
1212
வேதத்தை திறம்பட வாசிப்பது எப்படி
Wednesday, 31st of January 2024
Categories :
தேவனின் வார்த்தை ( Word of God )
வேதம் (Bible)
வேதத்தை வாசிப்பதில் கவனம் செலுத்துங்கள் (1 தீமோத்தேயு 4:13)
அப்போஸ்தலனாகிய பவுலின் எளிய பயனுள்ள அறிவுரை தீமோத்தேயுவுக்கு (அவர் பயிற்றுவித்துக்கொண்டிருந்தார்) வேதவசனங்களை தவறாமல் வாசிக்க வேண்டும்.
வெறுமனே வேதத்தைப் பிடித்துக் கொண்டு, எதேர்ச்சையாகத் திறக்கும் பலர் இருக்கிறார்கள். பின்னர் அவர்கள் வேதத்தின் பகுதியைப் படிக்கவோ அல்லது உரிமைகோரவோ தொடங்குகிறார்கள், அது அவர்களுக்கு தேவனிடமிருந்து வந்த செய்தி என்று நம்புகிறார்கள். இதில் எந்தத் தவறும் இல்லை என்றாலும், மேற்கூறிய பயிற்சியைச் செய்வதன் மூலம், தேவனுடைய வார்த்தையைப் பற்றிய உங்கள் அறிவில் நீங்கள் வெகுதூரம் செல்ல மாட்டீர்கள். காலப்போக்கில், நீங்கள் வேதத்தின் அதே அத்தியாயம் அல்லது பகுதியைத் திறக்கலாம்
இந்த முறையில் நீங்கள் வேதத்தை படிப்பதை நிறுத்துவதற்கான மற்றொரு காரணம் என்னவென்றால், "உங்கள் விரல் ஒரு வசனத்தில் விழுந்தால் என்ன செய்வது"
".....யூதாஸ் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்" (மத்தேயு 27:5) "பெத்தேலுக்கு வந்து பாவம் செய்...." (ஆமோஸ் 4:4)
உங்கள் தனிப்பட்ட திருத்தலுக்காகவும் மற்றவர்களுடைய திருத்தத்திற்காகவும் நிச்சயமாக நீங்கள் அத்தகைய வசனங்களை கோர முடியாது. இப்போது நீங்கள் இந்த முறையில் செய்து கொண்டிருந்தால் தயவு செய்து உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள். உண்மை என்னவென்றால், பல தேவ மனிதர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் இதைச் செய்திருக்கிறார்கள், ஆனால் பின்னர் அவர்கள் உயர்ந்து சென்றார்கள் - உங்களால் முடியும்.
அடிக்கடி, ஜனங்கள் வேதத்தை படிக்க ஆரம்பித்துவிட்டு, அதிலிருந்து வெளியேறுகிறார்கள் என்பதையும் நான் கண்டுபிடித்தேன். உங்களிடம் வேத வாசிப்பு திட்டம் இருந்தால் மேலே உள்ள அனைத்தையும் தவிர்க்கலாம்.
வேத வாசிப்பு திட்டம் 365 சீஷத்துவத் திட்டம் (நோவா செயலியில் உள்ளது) போன்ற ஒரு வருடத்தில் வேதத்தை வாசித்து முடிக்க உதவும். இது நீங்கள் கவனத்துடன் இருக்கவும், எளிதாக நிர்வகிக்கக்கூடிய பகுதிகளாக முழு வேதத்தை படிக்கவும் உதவும். தேவனுடைய வார்த்தையில் என்னை வளரச் செய்த ஒரு காரியம் இதுதான், இந்த எளிய ஆனால் பயனுள்ள ரகசியத்தை இன்று உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
”அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலே மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்.“
மத்தேயு 4:4
”சகல துர்க்குணத்தையும், சகலவித கபடத்தையும், வஞ்சகங்களையும், பொறாமைகளையும், சகலவித புறங்கூறுதலையும் ஒழித்துவிட்டு“
1 பேதுரு 2:2
நாம் உணவை உண்ணும் போது, நாம் ஆரோக்கியமாக வாழ தேவையான ஊட்டச்சத்துக்கள் நமக்கு வழங்கப்படுகின்றன. அதுபோலவே, தினமும் வேதத்தை முறையாக வாசிப்பது ஆரோக்கியமான ஆவிக்குரிய வாழ்க்கையை வளர்க்க உதவும். இது உங்களை விரைவாக வளரச் செய்யும்.
மேலும், உங்கள் வேதத்தை படிக்கும்போது, அமைதியாக இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்
நான் நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டளை இங்கே உள்ளதா?
இது எனக்காக, என் குடும்பத்திற்காக நான் உரிமை கோர வேண்டிய வாக்குறுதியா?
இந்த வசனத்தை எனக்கும், குடும்பத்தாருக்கும், மற்றவர்களுக்கும் ஒரு ஜெபக் குறிப்பாக பயன்படுத்தலாமா?
ஒருவர் இப்படியாக சொன்னார், "வேதம் தகவல் தெரிவிப்பதற்கு மட்டுமல்ல, நம்மை மாற்றுவதற்கும் கொடுக்கப்பட்டது".
ஜெபம்
தந்தையே, உமது வார்த்தையிலிருந்து அதிசயமான விஷயங்களைக் காண என் கண்களைத் திறந்தருளும். இயேசுவின் நாமத்தில்.
தகப்பனே, நான் தினமும் உமது வார்த்தையைப் படிக்கும்போதும் உமது சத்தம் என்னுடன் பேசுவதைக் கேட்க என் காதுகளைத் திறந்தருளும். இயேசுவின் நாமத்தில்.
தந்தையே, தினமும் வார்த்தையைப் படித்து ஒரு வருடத்தில் வேதத்தை முடிக்க உமது கிருபையை எனக்குத் தாரும். இயேசுவில் நாமத்தில். ஆமென்!
தகப்பனே, நான் தினமும் உமது வார்த்தையைப் படிக்கும்போதும் உமது சத்தம் என்னுடன் பேசுவதைக் கேட்க என் காதுகளைத் திறந்தருளும். இயேசுவின் நாமத்தில்.
தந்தையே, தினமும் வார்த்தையைப் படித்து ஒரு வருடத்தில் வேதத்தை முடிக்க உமது கிருபையை எனக்குத் தாரும். இயேசுவில் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● தேவன் கொடுத்த சிறந்த வளம்● நீங்கள் எவ்வளவு நம்பகமானவர்?
● கிறிஸ்துவைப் போல மாறுதல்
● தீர்க்கதரிசன மன்றாட்டு என்றால் என்ன?
● நாள் 18: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்
● தெய்வீகப் பழக்கம்
● அவரது தெய்வீக சீர்ப்படுத்தும் இடம்
கருத்துகள்