தினசரி மன்னா
0
0
1045
எல்லாவற்றையும் அவரிடம் சொல்லுங்கள்
Friday, 16th of February 2024
Categories :
பிரார்த்தனை (Prayer)
உடனே அவர்கள் ஜெபஆலயத்தை விட்டுப் புறப்பட்டு, யாக்கோபோடும் யோவானோடுங்கூட, சீமோன் அந்திரேயா என்பவர்களுடைய வீட்டில் பிரவேசித்தார்கள்; அங்கே சீமோனுடைய மாமி ஜுரமாய்க் கிடந்தாள்; உடனே அவர்கள் அவளைக்குறித்து அவருக்குச் சொன்னார்கள். (மாற்கு 1:30)
“பேதுருவின் மாமியைப் பற்றி அவர்கள் இயேசுவிடம் உடனே சொன்னார்கள்” என்று வேதம் கூறுகிறது.
பல பாடல்களை எழுதிய தேவ மனிதர் ஒருவர் இருந்தார். அவர் பெற்ற அனுபவங்களால் அவரது பாடல்கள் ஈர்க்கப்பட்டன. ஒரு நாள், மிகவும் வறுமையில் வாடும் மக்களைப் பார்க்கச் சென்றபோது, மனச்சோர்வு குணமாகாத ஒரு பெண்மணியைச் சந்தித்தார். தன் சோகங்களை கொட்டி தீர்த்தாள். அவள் கத்தினாள், “சொல்லு நான் என்ன செய்ய? ஓ, நான் என்ன செய்ய வேண்டும்?"
தேவ மனிதன் அவள் படும் வேதனையிலும் துயரத்திலும் வார்த்தைகளை இழந்துவிட்டார். திடீரென்று பரிசுத்த ஆவியானவர் அவருக்கு ஒரு ஞான வார்த்தையைக் கொடுத்தார். அவர், "எல்லாவற்றையும் இயேசுவிடம் கூறுங்கள்" என்று பதிலளித்தார்.
ஒரு கணம் அந்த பெண் தன் சிந்தனையில் ஆழ்ந்துவிட்டாள். அப்போது திடீரென்று அவள் முகம் மலர்ந்தது. "ஆம்!" அவள் அழுதாள், “அதுதான்! நான் இயேசுவிடம் சொல்ல வேண்டும்." இப்படித்தான் அவருடைய மற்றொரு பெரிய பாடல் பிறந்தது - இயேசுவிடம் சொல்லுங்கள்.
ஜெபம் என்பது எல்லாவற்றையும் இயேசுவிடம் சொல்வதைத் தவிர வேறில்லை. இப்போது நீங்கள் விரும்பும் மற்றும் நம்பகமானவர்களுடன் விஷயங்களைப் பகிர்ந்துகொள்வது தவறல்ல. இருப்பினும், நீங்கள் அவர்களிடம் எல்லாவற்றையும் சொல்ல முடியாது. அதனால்தான் இந்த வார்த்தை உங்களுக்கும் எனக்கும் - இயேசுவிடம் எல்லாவற்றையும் சொல்லுங்கள்.
நீங்கள் இதை நம்ப மாட்டீர்கள், ஆனால் அது உண்மைதான். நான் ஆசிரியராக இருந்த நாட்களில், இரண்டு சிறு குழந்தைகள் சண்டையிடுவதைக் கண்டேன். அவற்றில் ஒன்று மிகவும் சிறியது; மற்றொன்று நன்றாக வளர்ந்து பெரியதாக இருந்தது. வளர்ந்த சிறுவன் இந்தச் சிறுவனைத் தள்ளிக் கொண்டிருந்தான். செய்வதறியாது தவித்த சிறுவன், “என் தம்பி எட்டாம் வகுப்பு படிக்கிறான், நான் சொல்லுறேன்” என்று கத்தினான், அதைக் கேட்ட சிறுவன் ஓடிவிட்டான்.
மாற்கு 3:34-35 இல், 34. "தம்மைச் சூழ உட்கார்ந்திருந்தவர்களைச் சுற்றிப் பார்த்து: இதோ, என் தாயும் என் சகோதரரும் இவர்களே! தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவன் எவனோ அவனே எனக்குச் சகோதரனும், எனக்குச் சகோதரியும், எனக்குத் தாயுமாய் இருக்கிறான் என்றார்.”
"நம்புவது என்பது பிதாவின் சித்தத்தைச் செய்வது" என்ற வெறும் மனப் பயிற்சியல்ல, அவருடைய சகோதர சகோதரிகளாக நம்மைத் தகுதிப்படுத்துகிறது.
எனவே, நீங்கள் எங்கள் மூத்த சகோதரர் - கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவிடம் சொல்லும்போது உங்கள் குணமடைதல், உங்கள் விடுதலை மற்றும் செழிப்பு வரும். எனவே அவரிடம் எல்லாவற்றையும் - தினமும் சொல்ல வேண்டும்.
வாக்குமூலம்
கர்த்தராகிய இயேசு என் வாழ்க்கையில் தோல்வியை அழித்துவிட்டதால், ஒவ்வொரு சூழ்நிலையிலும் நான் முழு வெற்றியுடன் நடக்கிறேன். நான் ஜெயங்கொள்பவன், கிறிஸ்துவின் மூலம் எல்லாவற்றையும் செய்ய முடியும். இயேசுவின் நாமத்தில் எனக்கு வெற்றி உண்டு. ஆமென் (பிலிப்பியர் 4:13; 1 யோவான் 5:4)
Join our WhatsApp Channel

Most Read
● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் -3● விசுவாசித்து நடப்பது
● மாற்றத்திற்கான நேரம்
● தேவனின் சத்தத்தை நம்பும் வல்லமை
● ஆவிக்குரிய நுழைவயிலின் இரகசியங்கள்
● புத்திசாலித்தனமாக வேலை செய்யுங்கள்
● அரண்மனைக்கு பின்னால் இருக்கும் மனிதன்
கருத்துகள்