தினசரி மன்னா
வார்த்தையைப் பெற்றுக்கொள்ளுங்கள்
Tuesday, 12th of March 2024
0
0
819
Categories :
தேவனின் வார்த்தை ( Word of God )
ஒருமுறை நான் தொலைப்பேசியில் ஜெபக் குறிப்பை பெற்றேன். ஒரு பெண் என்னை அழைத்து, இரவில் பிசாசு தன்னை எப்படி துன்புறுத்துகிறது என்று கூறினாள். தூங்கப் போகும் முன் வேதத்தை படிக்குமாறு பணிவுடன் அறிவுறுத்தினேன்.
உடனே அவள் தினமும் இரவு தவறாமல் வேதத்தை தன் தலையணைக்கு அடியில் வைத்திருப்பதாகப் பதிலளித்தாள். இது சிலருக்கு வேடிக்கையாகத் தோன்றினாலும், வேதத்தைப் படிப்பதை புறக்கணிக்கும் பலர் உள்ளனர்.
பலர் தங்கள் வீடுகளிலோ அல்லது தொலைபேசியிலோ வேதத்தின் வெவ்வேறு பதிப்புகளை வைத்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் அதைப் படிக்க நேரம் எடுப்பதில்லை. உங்களிடம் வேதம் இருப்பதை அதைப் பற்றி பிசாசு பயப்படுவதில்லை; நீங்கள் வேதத்தைப் படிக்கத் தொடங்கும்போதும் அது சொல்வதை விசுவாசிக்கும்போதும்தான் பிசாசு பீதி நிலைக்குச் செல்கிறது.
”தங்கள் ஆபத்திலே கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகிறார்கள்; அவர்கள் இக்கட்டுகளுக்கு அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார்.“
சங்கீதம் 107:19
தேவனுடைய ஜனங்கள், துன்பத்தில் இருந்தபோது, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர்களை நீங்கலாக்கி இரட்சிக்கிறார் என்று மேலே உள்ள வேதம் கூறுகிறது. கர்த்தர் தம் ஜனங்களை எப்படிக் இரட்சிக்கிறார்? பின்வரும் வசனங்களைப் பாருங்கள்.
”அவர் தமது வசனத்தை அனுப்பி அவர்களைக் குணமாக்கி, அவர்களை அழிவுக்குத் தப்புவிக்கிறார்.“
சங்கீதம் 107:20
“அவர் தம்முடைய வார்த்தையை அனுப்பி, அவர்களைக் குணமாக்கி, அவர்களுடைய அழிவிலிருந்து அவர்களை தப்புவிக்கிறார்” என்று வேதம் சொல்கிறது. இப்போது, வேதம் உங்களைக் குணப்படுத்த விரும்பும்போது, அவர் என்ன செய்கிறார்? அவர் தனது வார்த்தையை அனுப்புகிறார். உங்கள் அழிவிலிருந்து உங்களை விடுவிக்கும் முன், அவர் தம்முடைய வார்த்தையை அனுப்புகிறார்.
இதனால்தான் நீங்கள் தினமும் வேதத்தை (தேவனின் வார்த்தையால்) படிப்பதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். இதனாலேயே அனுதின மன்னாவைப் படிப்பதை நீங்கள் புறக்கணிக்கக் கூடாது. (வார்த்தையை அனுப்புவதற்கு முன்பு நான் அடிக்கடி ஜெபிப்பேன்). தேவனுடைய வார்த்தை உங்களை குணப்படுத்தி விடுவிக்கும் வல்லமை கொண்டது.
எங்கள் சபை ஆராதனை ஒன்றில், குழந்தை இல்லாத ஒரு பெண்ணுக்காக நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான் ஜெபித்துக்கொண்டிருந்தபோது தேவனின் வாக்குக்குத்தத்தங்களை கூறிக்கொண்டிருந்தேன். மற்றொரு பெண்மணி தனது தொலைபேசியில் முழு விஷயத்தையும் பதிவு செய்து கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக குழந்தை இல்லாத தனது நண்பருக்காக அனுப்பினார்.
இந்தப் பெண் தினமும் ஒலிப்பதிவைக் கேட்டு, நான் பயன்படுத்திய வேதங்களைக் கூறி ஜெபிப்பார். சில மாதங்களில், இந்த பெண் அதிசயமான முறையில் கருத்தரித்தார். எங்கள் W3 கருத்தரங்கு ஒன்றில் அவரது நண்பர் கூட சாட்சியளித்தார். நீங்கள் பார்க்கிறீர்கள், தேவனின் வார்த்தை அவள் நிலைமையை மாற்றியது. தேவனுடைய வார்த்தையின் வல்லமையை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள்.
”என் மகனே, என் வார்த்தைகளைக் கவனி; என் வசனங்களுக்கு உன் செவியைச் சாய். அவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; அவைகளை உன் இருதயத்துக்குள்ளே காத்துக்கொள். அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.“ நீதிமொழிகள் 4:20-22

ஜெபம்
பிதாவே, உமது வார்த்தையை நான் எந்த விதத்திலும் புறக்கணித்திருந்தால் என்னை மன்னியுங்கள். உமது அருமையான வார்த்தையை தினமும் வாசிக்கவும் தியானிக்கவும் எனக்கு கிருபையருளும். ஏனெனில், உமது வார்த்தையே எனக்கு வாழ்வாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கிறது. இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● யாருக்கும் எதிர்ப்பு சக்தி இல்லை● ஏன் தேவ மனிதர்கள் வீழ்கின்றனர் - 5
● வாழ்க்கையின் எச்சரிக்கைகளுக்கு செவிசாய்த்தல்
● பாவ கோபத்தின் அடுக்குகளை அவிழ்ப்பது
● மன்னா, கற்பலகைகள் மற்றும் கோல்
● அற்புதத்தில் இயங்குவது: திறவுகோல் # 1
● உங்கள் விதியை மாற்றவும்
கருத்துகள்