தினசரி மன்னா
0
0
960
ஆராதனையை ஒரு வாழ்க்கை முறையாக்குதல்
Thursday, 28th of March 2024
Categories :
ஆராதனை (Worship)
”இவ்விதமாய், மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.“
மத்தேயு 5:16
நீங்கள் தினமும் தேவனின் பிரசன்னத்திற்குள் பிரேவிசிக்க கற்றுக்கொண்டால், நீங்கள் மீண்டும் ஒருபோதும் அப்படி இருக்க மாட்டீர்கள். சூழ்நிலைகளும் விஷயங்களும் தேவனின் பார்வையில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாகத் தெரிகிறது. இது நீங்கள் நடந்து கொள்ளும் விதம், நீங்கள் பேசும் விதம் போன்றவற்றை மாற்றிவிடும். வேறுவிதமாகக் கூறினால், நீங்கள் இதுவரை வாழ்ந்த விதத்தையே மாற்றிவிடும். எஸ்தர், ஒரு சாதாரண விவசாயப் பெண் ராஜாவுடன் ஒரு இரவுக்காக ஒரு வருடம் முழுவதும் ஆயத்தம் செய்தாள்.
அந்த ஒரு சந்திப்பிற்குப் பிறகு அவள் ராஜாவை மீண்டும் பார்ப்பாள் என்பதற்கு அவளுக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. முடிவைப் பற்றி யோசிக்காமல், தன்னை ஆயத்தப்படுத்திக் கொண்டாள். அவளது ஆயத்த நேரம் முடிந்ததும், அவள் மன்னரின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டாள், அன்று முதல் அவள் 'கைபற்றப்பட்ட தேசத்திலிருந்து வந்த ஒரு 'விவசாயி பெண்' அல்ல, அவள் ஒரு ராணி. அன்று முதல், அவள் நடந்தாள், பேசினாள், அவள் ராணியைப் போல தன்னைத்தானே காண்ப்பித்தாள். அவளது ஆயத்தமே அவளுடைய வாழ்க்கைமுறையாக மாறியது.
ஆராதனை என்பது ஒரு ஜெபக் கூட்டத்திலோ அல்லது தேவாலய ஆராதனையிலோ ஒரு மணிநேரம் அல்லது இரண்டு மணிநேரம் அல்லது நாம் தேவனின் பிரசன்னத்தில் தனியாக நேரத்தை செலவிடும் போது மட்டும் நடக்காது. அதுவே நமது வாழ்க்கைமுறையாக மாற வேண்டும். நீங்கள் எங்கு சென்றாலும், எதைச் செய்தாலும், அதில் ஆராதனையின் மணம் இருக்க வேண்டும். எந்த சூழ்நிலையில் இருந்தாலும் சரி. ராஜா தம்முடைய பரிசுத்த ஆவியின் மூலம் நம்மில் தங்கியிருப்பதால், நாம் எங்கு சென்றாலும் அவருடைய பிரசன்னத்தை நம்முடன் எடுத்துச் செல்கிறோம். எனவே, ஒவ்வொரு நாளின் ஒவ்வொரு கணமும் வழிபாட்டிற்கான வாய்ப்பாகவும், காரணமாகவும் அமைகிறது.
வழிபாடு என்பது நாம் செய்வதல்ல; அது நாம் யார்! நாம் இயல்பிலேயே வழிபடுபவர்கள். ராஜாவின் விருப்பமானவர்களாக, நம் முழு வாழ்க்கையும் தொடர்ந்து வழிபாட்டுச் செயல்களாக இருக்க வேண்டும்! மத்தேயு 5 இல், கர்த்தராகிய இயேசு ஒரு வழிபாட்டாளரின் தன்மையை விவரித்தார். அவர்கள் ஆவியில் ஏழைகள் என்று கூறினார். (உலகின் பாவத்திற்காக), சாந்தமான (மென்மையான), பசி மற்றும் நீதிக்காக தாகம் கொண்ட, இரக்கமுள்ள, தூய்மையான இதயம் மற்றும் சமாதானம் செய்பவர்கள். நீதியின் பொருட்டு அவர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள் என்றும் அவர் கூறினார். சுருக்கமாக, அவர்கள் தங்கள் தந்தை, ராஜாவின் தன்மையை வெளிப்படுத்துகிறார்கள்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நாம் செய்யும் அல்லது சொல்லும் அனைத்தும் அவருடைய பெயர் மற்றும் குணத்தின் மகிமையை பிரதிபலிக்க வேண்டும். இந்தக் கேள்வியை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்: எனது அன்றாட வாழ்க்கை ஒரு தொடர்ச்சியான வழிபாட்டுச் செயலா? என் வார்த்தைகளும் நடத்தைகளும் கர்த்தராகிய இயேசுவிடம் மக்களை இழுக்கிறதா அல்லது அவர்களை விரட்டுகிறதா? உங்கள் ஒளி பிரகாசிக்கட்டும்!
ஜெபம்
தந்தையே, என் முழு இதயத்துடனும், மனதுடனும், வலிமையுடனும் உம்மை வழிபடுமாறு வேண்டுகிறேன். வழிபாட்டு முறைகளில் என்னை நடக்கச் செய்யும். கர்த்தராகிய இயேசுவிடம் மக்கள் ஈர்க்கப்படுவதற்கு நான் செய்யும் அல்லது சொல்லும் அனைத்தும் உமது மகிமையையும் குணத்தையும் பிரதிபலிக்க வேண்டும். என் ஒளி பிரகாசிக்கட்டும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel

Most Read
● தேவன் எப்படி வழங்குகிறார் #3● ஜனங்கள் சாக்குப்போக்கு கூறும் காரணங்கள் - பகுதி 2
● நாள் 20:40 நாட்கள் உபவாச ஜெபம்
● கொடுப்பதன் கிருபை - 2
● நல்ல வெற்றி என்றால் என்ன?
● பயனுள்ள 40 நாட்கள் உபவாச ஜெபத்திற்கான வழிகாட்டுதல்கள்
● தெபொராளின் வாழ்க்கையிலிருந்து பாடங்கள்
கருத்துகள்