தினசரி மன்னா
வேலை ஸ்தலத்தில் ஒரு நட்சத்திரம் II
Thursday, 18th of April 2024
0
0
418
Categories :
வேலை ஸ்தலம் (Workplace)
தேவ மனிதர் ஒருமுறை கூறினார், "நீங்கள் எதை மதிக்கிறீர்களோ அது உங்களை நோக்கி வரும், நீங்கள் மதிக்காதது உங்களை விட்டுப் போய்விடும்."
வேதம் நமக்குக் கட்டளையிடுகிறது, "ஒவ்வொரு பணியாளரும் தங்கள் முதலாளிகளை மதிக்கவும் கனப்படுத்தவும் அறிவுறுத்துங்கள், ஏனெனில் இந்த அணுகுமுறை தேவனின் உண்மை மற்றும் புகழின் தெளிவான சான்றாக அவர்களுக்கு முன்வைக்கிறது. அவர்களின் செயல்களால் தேவனின் பெயரை இழிவுபடுத்துவதற்கான காரணத்தை அவர்களுக்கு வழங்க வேண்டாம்.
”தேவனுடைய நாமமும் உபதேசமும் தூஷிக்கப்படாதபடிக்கு, அடிமைத்தன நுகத்திற்குட்பட்டிருக்கிற வேலைக்காரர் யாவரும் தங்கள் எஜமான்களை எல்லா கனத்திற்கும் பாத்திரரென்று எண்ணிக்கொள்ளக்கடவர்கள். விசுவாசிகளாகிய எஜமான்களை உடையவர்கள், தங்கள் எஜமான்கள் சகோதரராயிருக்கிறதினாலே அவர்களை அசட்டைபண்ணாமல், நல்வேலையின் பலனைப் பெற்றுக்கொள்ளுகிற அவர்கள் விசுவாசிகளும் பிரியருமாயிருக்கிறபடியால், அவர்களுக்கு அதிகமாய் ஊழியஞ்செய்யக்கடவர்கள்; இந்தப்படியே போதித்துப் புத்திசொல்லு.“
1 தீமோத்தேயு 6:1-2
இப்போது, நீங்கள் ஒரு கால் மிதியாய் ஆகிறீர்கள் என்று அர்த்தம் இல்லை. ஆயினும்கூட, நம்மில் பலர் (கிறிஸ்தவர்கள்) நம் உயர் அதிகாரிகளுக்கு (குறைந்தபட்சம் நம் இ௫தயங்களிலிருந்து) மரியாதை காட்டுவதில்லை என்பது இரகசியமல்ல.
ஒரு எளிய புன்னகை அல்லது 'காலை வணக்கம்' போன்ற ஒரு வாழ்த்து இந்த விஷயத்தில் போதுமானதாக இருக்கும். ஆனாலும், நாம் கசப்பினாலும் காயத்தினாலும் உந்தப்படுகிறோம். இது நமது பணியிடங்களில் தேவன் நமக்காக வைத்திருக்கிற முழுத் திட்டத்தையும் மோசமாக்குகிறது (எரேமியா 29:11). உங்கள் முதலாளி யாராக இருந்தாலும் அல்லது எப்படிப்பட்டவராக இருந்தாலும் சரி, நேர்மையான மரியாதை உங்களுக்கும் உங்கள் முதலாளிக்கும் இடையே நம்பிக்கையின் சூழ்நிலையை உருவாக்கும்.
இப்போது இதைப் புரிந்து கொள்ளுங்கள், பல சந்தர்ப்பங்களில், நீங்கள் மரியாதை காட்டும்போது, காட்டப்படும் அதே மரியாதையை நீங்கள் உடனடியாக திரும்பப் பெற முடியாது. இதற்கு சிறிது நேரம் ஆகலாம், எனவே தேவனுடைய வார்த்தையைப் பிடித்துக் கொள்ளுங்கள். கர்த்தர் உங்களை கனம்பண்ணுவார். தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் கிருபையை அளிக்கிறார் என்பதை நினைவில் கொள்ளுங்கள். (யாக்கோபு 4:6)
வாக்குமூலம்
ஆண்டவரே, மேன்மை கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ அல்லது தெற்கிலிருந்தோ வரவில்லை, ஆனால் அது உம்மிடமிருந்து வருகிறது ஆண்டவரே. இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Join our WhatsApp Channel
Most Read
● மன்னிப்பதற்கான நடைமுறை படிகள்● வேலை ஸ்தலத்தில் ஒரு நட்சத்திரம் - 1
● போற்றப்படாத கதாநாயகர்கள்
● நாள் 13: 40 நாட்கள் உபவாசம் & ஜெபம்
● அசுத்த வடிவங்களை உடைத்தல்
● கீழ்ப்படிதல் ஒரு தெய்வீக அறம்
● யாருக்கும் எதிர்ப்பு சக்தி இல்லை
கருத்துகள்