தினசரி மன்னா
விதையின் வல்லமை - 2
Friday, 17th of May 2024
0
0
358
Categories :
விதை சக்தி (Power of Seed )
'விதையின் வல்லமை' என்ற தொடரைப் நாம் தியாணிக்கிறோம், இன்று நாம் பல்வேறு வகையான விதைகளைப் பற்றி பார்ப்போம்:
3. சாத்தியங்கள் மற்றும் திறன்கள்
ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணிற்குள்ளும், தேவன் ஆற்றல்கள் மற்றும் சிறப்புத் திறன்களை டெபாசிட் செய்துள்ளார், அவை "விதை" என்றும் அழைக்கப்படுகின்றன. உங்களில் சிலர் நன்கு பேசக்கூடியவர்களாகவும் , சிலர் நன்றாக எழுதக்கூடியவர்களாகவும் இருக்கலாம்.
உலக நன்மைக்காக தேவன் இந்த ஆற்றலை ஒவ்வொருவருக்கும் வைத்தார். தேவன் உங்கள் உள்ளத்தில் என்ன வைத்திருக்கிறார் என்பதைக் கணக்கிடுவதற்கான நேரம் இது. “நான் ஒன்றுமில்லை; என்னிடம் எதுவும் இல்லை". இந்த வார்த்தைகள் நன்றாகவும் மிகவும் பணிவாகவும் தெரிகிறது, ஆனால் உண்மை என்னவென்றால், தேவன் உங்களுக்குள் ஆற்றல் மற்றும் திறன்களை வைத்திருக்கிறார். நீங்களும் நானும் ஒவ்வொரு நாளும் ஜெபிக்க வேண்டும், “ஆண்டவரே, நீர் எனக்குள் வைத்த விதையை (பரிசு மற்றும் திறன்களை) கண்டுபிடித்து புரிந்துகொள்ள என் கண்களைத் திறந்தருளும் . இயேசுவின் நாமத்தில்."
பெரிய பிரச்சனை என்னவென்றால், நாம் எப்போதும் மற்றவர்களின் விதைகளைப் பார்த்து, அவர்களின் விதை நமதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். ஒவ்வொருவருக்கும் என்ன கொடுக்க வேண்டும் என்பது தேவனுக்கு தெரியும். தேவன் மற்றவர்களுக்குக் கொடுத்த விதையின் மீது பொறாமை அல்லது பாதுகாப்பற்ற நிலை ஏற்படும்போது, நம் விதை பயன்படுத்தப்படாமல் இருக்கும்.
ஒரு தாலந்து கொடுக்கப்பட்டவர், மற்றவர் தன்னை விட அதிக திறமைகளைப் பெற்றிருப்பதால், ஒருவேளை பாதுகாப்பற்றவராக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், தேவன் அவருக்குக் கொடுத்த திறமையை அவர் பயன்படுத்தியிருந்தால், பெருக்கியிருந்தால், அவருடைய எஜமான் அவரை "உண்மையும் உத்தமம்முள்ள வேலைக்காரனே" என்று அழைத்திருப்பார். (மத்தேயு 25:14-30)
இயேசுவின் நாமத்தில், நான் தீர்க்கதரிசனம் சொல்கிறேன், "நீங்கள் ஏதோ ஒரு கிராமத்தில் இருக்கலாம், சில தெளிவற்ற இடத்தில் இருக்கலாம், ஆனால் தேவன் உங்களுக்குள் வைத்த விதையின் காரணமாக, நீங்கள் பெரிய மனிதர்களுக்கு முன் வருவீர்கள்." ஜனங்கள் இயேசுவைப் பார்த்து, அவர் நாசரேத்திலிருந்து (தெரியாத இடம்) வந்ததைப் பார்த்தபோது, “நாசரேத்திலிருந்து ஏதாவது நன்மை வரக் கூடுமோ?” என்று கேட்டார்கள். (யோவான் 1:46) அவர்கள் எவ்வளவு தவறு செய்தார்கள்?
”ஒருவன் கொடுக்கும் வெகுமதி அவனுக்கு வழியுண்டாக்கி, பெரியோர்களுக்கு முன்பாக அவனைக் கொண்டுபோய்விடும்.“
நீதிமொழிகள் 18:16
அந்த இடம், அந்த அளவு அங்கே கூட்டமாக இருக்கலாம், ஆனால் உங்கள் திறமையின் காரணமாக, தேவன் உங்களுக்குள் வைத்துள்ள சாத்தியக்கூறுகளின் காரணமாக, உங்களுக்காக ஒரு இடம் உருவாக்கப்படும். ஜனங்கள் ஓர்வேலை உங்களுக்கு இடமளிக்க மருக்கலாம், ஆனால் உங்களுக்குள் இருக்கும் ஈவு உங்களுக்கான இடத்தை ஏற்படுத்தும்.
இந்த உலகில் தற்போது 7.5 பில்லியன் மக்கள் உள்ளனர், ஆனால் ஒவொருவரும் சிறப்புமிக்கவர்களாகவும், தனித்துவமானவர்களும் மற்றும் அசலுமாய் இருக்கிறார்கள். நமது ஆற்றல்கள் மற்றும் திறன்கள் உலகிற்கு தேவன் கொடுத்த பரிசு.
நமது ஆற்றல் மற்றும் திறன்கள் பூமியில் உள்ள ஒவ்வொருவரின் விதியை நிறைவேற்றுவதற்காக தேவன் ஒவ்வொருவருக்குள்ளும் மகத்துவத்தின் விதைகளை விதைத்துள்ளார்.
உங்கள் சொந்த கனவுகள் மற்றவர்களின் இருதயங்களில் நீங்கள் விதைக்கும் ஒரு சிறப்பு விதை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். உங்கள் கனவு விதையை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும்போது, சில நேரங்களில், அவர்கள் உற்சாகமாகவும், சிலிர்ப்பாகவும் இருப்பார்கள். அவர்கள் உங்கள் பார்வையை ஆதரிக்க தேவன் அனுப்பிய நபர்களாக இருப்பார்கள். சிலர் கேட்க கூட கவலைப்படாமல் உங்களை நிராகரிக்கலாம். பெரும்பாலும், இவர்கள் உங்களுக்கு நெருக்கமானவர்களாக இருப்பார்கள்.
அத்தகைய நிராகரிப்பை நீங்கள் சந்தித்தால், நீங்கள் ஒரு ஷெல்லுக்குள் திரும்பக் கூடாது. உங்கள் கனவை புதைக்காதீர்கள். ஒரு புத்திசாலி விவசாயி தனது விதையை நடவு செய்வதற்கு முன் தனது வயலுக்கு அதிக ஆயத்தம் தேவை என்பதை அறிவார். அதேபோல், உங்களைச் சுற்றியுள்ளவர்களின் மனதுக்கும் இருதயங்களுக்கும் ஆயத்தம் தேவைப்படலாம். பொறுமையாய் இருங்கள்.
யோசேப்பு தனது சொப்பனங்களை தனது சகோதரர்களுடன் பகிர்ந்து கொண்டான், அதற்காக அவர்கள் அவனை வெறுத்தனர். (ஆதியாகமம் 37:8) நீங்கள் தங்களுக்கு முன்னால் செல்வதை சிலர் விரும்ப மாட்டார்கள், நீங்கள் சிறந்து விளங்குகிறீர்கள் என்ற எண்ணமே அவர்கள் கேட்க விரும்பாமல் இருக்கலாம். நீங்கள் முழுமையாக நம்பும் ஒருவரை நீங்கள் கண்டுபிடிக்க முடிந்தால், மேலே சென்று அவர்களிடம் சொல்லுங்கள், ஆனால் உங்கள் தரிசனங்களை உங்கள் வழியில் வரும் அனைவருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள்.
4. பொருளாதாரம் மற்றும் பொருள் விதைகள்
நம்முடைய நிதி மற்றும் பொருள் உடைமைகள் தேவன் நம்மிடம் ஒப்படைத்த “விதைகள்”. நம்முடைய மிகுதியிலிருந்தும், கீழ்ப்படிதலாலும், தியாகத்தாலும் கொடுக்கலாம். ராஜ்யத்தின் வேலைக்கு நாம் எவ்வளவு கொடுத்தாலும் - அது ரூ. 10/- அல்லது ரூ. 10,000/- ஆக இருந்தாலும், அந்த விதவையின் மீது தாம் மிகவும் மகிழ்ச்சியடைந்ததை கர்த்தராகிய இயேசு லூக்கா 21: 1-4 இல் நமக்குத் தெளிவுபடுத்துகிறார். அவளுக்கு இரண்டு பணத்தை தியாகம் செய்தாள் - அதுதான் அவளிடம் இருந்தது.
விதை என்பது பழங்கள் மற்றும் மரங்களுக்கு மட்டும் அல்ல. பழங்கள் மற்றும் மரங்கள் விதைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைப் பற்றிய சிறந்த புரிதலை நமக்குத் தருகின்றன.
பணத்தைப் பெருக்குவதற்கு விதைக்கப்படும் ஒரு விதையாக நாம் பார்க்கத் தொடங்கும் வரை, இயற்கைக்கு அப்பாற்பட்ட வழங்கல் என்பது பலருக்கு எப்போதும் புதிராகவே இருக்கும். தேவா மனிதரான கென்னத் இ.ஹகின், நிதிக்காக தேவனை நம்புவதை விட கிறிஸ்தவர்கள் கடினமானதாகக் கருதும் விசுவாசப் பகுதி எதுவும் இல்லை என்று கூறினார். ஒரு கிறிஸ்தவர் ராஜ்யத்தில் பொருளாதார விதைகளை விதைக்க அல்லது ஏழைக்கு உதவ கற்றுக்கொண்டால், பொருளாதார முன்னேற்றங்களுக்காக தேவனை நம்புவது திடீரென்று மிகவும் எளிதாகிவிடும் என்றும் அவர் கூறினார்.
அந்த விதவை அவளுக்கு பண விதை கொடுத்தபோது, கர்த்தருடைய கண்கள் (அவரால் வானத்திலும் பூமியிலும் உண்டானவை - கொலோசெயர் 1:16) அவள் மீது விழுந்ததாக வேதம் கூறுகிறது. அவளுடைய விதை வானத்தையும் பூமியையும் உண்டாகின ஆண்டவரின் கவனத்தை ஈர்த்தது. அதுதான் விதையின் வல்லமை.
வாக்குமூலம்
பிதாவே, நீர் என்னில் வைத்துள்ள திறன்கள் மற்றும் ஆற்றலுக்காக உமக்கு நன்றி கூறுகிறேன். என் பணம் ஒரு விதை. நான் அதை விதைக்கும்போது பெரிய பொருளாதார முன்னேற்றங்களைக் காண்பேன். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Join our WhatsApp Channel
Most Read
● அன்பு - வெற்றியின் உத்தி -2● வாசல் காக்கிறவர்கள்
● போதுமானதை விட அதிசயம் செய்யும் தேவன்
● ஒரு பந்தயத்தை வெல்ல இந்த இரண்டு அவசியம்
● வதந்திகள் உறவுகளை அழிக்கின்றன
● தெளிந்த புத்தி ஒரு ஈவு
● ராஜ்யத்தில் பணிவு மற்றும் மரியாதை
கருத்துகள்