தினசரி மன்னா
கொடுப்பதன் கிருபை - 1
Sunday, 19th of May 2024
0
0
400
Categories :
கொடுப்பதன் (Giving)
சாரீபாத்தில் ஒரு பெண் இருந்தாள். அவளுடைய கணவன் இறந்துவிட்டான், இப்போது அவளும் அவளுடைய மகனும் பட்டினியில் இருக்கின்றனர். அவர்கள் ஒரு பரவலான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டனர். செல்ல இடமில்லை, அவர்களின் அவல நிலையைப் பற்றி எதுவும் செய்ய முடியவில்லை. இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் தேவன் தம்முடைய தீர்க்கதரிசியான எலியாவை அவர்களிடம் அனுப்பினார்.
அந்தப் பெண் தண்ணீர் எடுக்கப் போகும்போது, எலியா அவளைக் கூப்பிட்டு சொன்னார். "எனக்கும் ஒரு துண்டு ரொட்டி கொண்டு வரும்படி சொல்லிகிறார்." நீண்ட பஞ்சத்தின் விளைவாக அவளது உணவு தீர்ந்து போனதால் அவள் முகத்தில் ஒரு கவலை தெரிந்திருக்கலாம்.
"என்னிடம் ரொட்டி எதுவும் இல்லை - ஒரு ஜாடியில் ஒரு கைப்பிடி மாவும் ஒரு குடத்தில் சிறிது எண்ணெய் மட்டுமே இருக்கிறது. நான் சில குச்சிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று எனக்கும் என் மகனுக்கும் சாப்பாடு தயார் செய்கிறேன், நாங்கள் அதை சாப்பிட்டு மறித்து விடலாம் என்று இருக்கிறோம்“ என்றாள் விதவை.
கடைசி உணவு விதவைக்கும் அவளுடைய மகனுக்கும் போதுமானதாக இல்லை, ஆனால் அவள் தன்னிடம் இருந்த கொஞ்சத்தில் இருந்து கொடுத்தாள், அது அவளை அதிகத்திற்கும் போதுமானதிற்கும் அதிகமான அளவின் ஆசீர்வாதத்திற்கு அறிமுகப்படுத்தியது. தேவன் உங்களை ஆசீர்வதிக்க விரும்பினால், உங்கள் கீழ்ப்படிதலை நிரூபிப்பதற்காகவும், அவருக்கான உங்கள் அன்பின் அளவை சோதிக்கவும் உங்களிடம் உள்ளதை விடுவிக்கும்படி அவர் உங்களிடம் கேட்பார். அந்த விதவை கொடுக்கத் தவறியிருந்தால், அவள் அதிகரிப்பை அவளே தவறாவிட்டிருந்திருப்பாள்.
தேவனிடைய ராஜ்ஜியம் உலகத்தை ஆளும் இயற்கை விதிகளிலிருந்து வேறுபட்ட சட்டங்களுடன் தேவனின் ராஜ்யம் செயல்படுகிறது. நாம் இராஜ்ஜியதின் குடிமக்கள், நாம் ராஜ்ய நடைமுறைகளுக்கு நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும். உதாரணமாக, உலக அமைப்பு "பார்ப்பதை நம்புகிறது", ஆனால் ராஜ்ய வாழ்க்கை முறை மற்றும் சட்டத்தின்படி, "விசுவாசிக்கின்றதை பார்ப்பது".
அதிகரிப்பை அனுபவிக்க பல வழிகள் உள்ளன, ஆனால் நீங்கள் புறக்கணிக்கக் கூடாத ஒரு உறுதியான வழி "கொடுப்பதாகும்." உலகம் ஆசீர்வாதத்தின் ஒரு வடிவமாக "பெறுவதை" நம்புகிறது, ஆனால் தேவனுடைய ராஜ்யத்தின் படி, "கொடுப்பது" ஒரு ஆசீர்வாதம்
நீங்கள் மனதில் கொள்ள வேண்டிய மற்றொரு காரியம் என்னவென்றால், தேவன் நமக்குக் கொடுக்கக் கட்டளையிட்டார் (லூக்கா 6:38), நாம் எப்போது கொடுத்தாலும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறோம், மேலும் கீழ்ப்படிந்து வாழ்பவர்களுக்கு ஆவிக்குரிய ரீதியிலும் இயற்கையிலும் ஆசீர்வாதங்கள் உள்ளன... கீழ்ப்படிதலுடன் இணைக்கப்பட்டுள்ள சில ஆசீர்வாதங்களைப் பார்ப்போம்.
இப்போது, தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள், பலர் பணத்தை கொடுப்பது என்று மட்டுமே நினைக்கிறார்கள். கொடுப்பதை கிறிஸ்தவ வாழ்க்கையின் அனைத்து பகுதிகளிலும் பயன்படுத்தலாம்.
கொடுப்பது மிகவும் முக்கியமானது என்பதற்கான காரணங்கள்
1. கொடுப்பது உங்கள் அறுவடையை அதிகரிக்கிறது
2 கொரிந்தியர் 9:10 கூறுகிறது,
”விதைக்கிறவனுக்கு விதையையும், புசிக்கிறதற்கு ஆகாரத்தையும் அளிக்கிறவர் உங்களுக்கு விதையை அளித்து, அதைப் பெருகப்பண்ணி, உங்கள் நீதியின் விளைச்சலை வர்த்திக்கச்செய்வார்.“
கொடுப்பது எப்போதும் நீங்கள் விதைத்ததைப் பெருக்குகிறது. மன்னிப்பு, நேரம், நிதி போன்றவை எதுவாக இருந்தாலும், நீங்கள் விதைத்ததை விட நீங்கள் அறுவடை செய்வது நிச்சயமாக அதிகமாக இருக்கும். இந்தப் புரிதல் எப்பொழுதும் விதைக்க உங்களை ஊக்குவிக்க வேண்டும், அது நம்மிடம் உள்ளதை அதிகரிப்பதற்கான உடன்படிக்கை நடைமுறை என்பதை அறிந்துகொள்ள வேண்டும்.
வாக்குமூலம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், இன்று என் வாழ்க்கையில் உமது ஏராளமான ஏற்பாடுகளை ஏற்றுக்கொள்கிறேன். எழுதப்பட்ட அனைத்தையும் கடைப்பிடிக்க உமது வார்த்தையை நான் தியானிக்கையில், நான் என் வழியை செழிப்பாக்கி, நல்ல வெற்றியைப் பெறுவேன். உமக்கு நன்றி, பிதாவே, என் ஆவி, ஆத்துமா, சரீரம், சமூகம் மற்றும் பொருளாதாரம் ஆகியவற்றில் நான் குறைவை சந்திக்க மாட்டேன்....
Join our WhatsApp Channel
Most Read
● சிவப்பு எச்சரிக்கை● நேரத்தியான குடும்ப நேரம்
● சூழல்கள் பற்றிய முக்கிய நுண்ணறிவு - 3
● கடனில் இருந்து வெளியேறவும்: Key # 2
● நல்லது சிறந்ததிற்கு எதிரி
● அக்கினி விழ வேண்டும்
● அந்நிய பாஷை தேவனின் மொழி
கருத்துகள்