தினசரி மன்னா
விசுவாசத்தில் மிகுதியாய் வளருதல்
Friday, 31st of May 2024
0
0
271
Categories :
விசுவாசம் ( Faith)
”நீங்கள் தெரிந்துகொள்ளப்பட்டவர்களென்று நாங்கள் அறிந்து, எங்கள் ஜெபங்களில் இடைவிடாமல் உங்களைக்குறித்து விண்ணப்பம்பண்ணி, உங்களெல்லாருக்காகவும் எப்பொழுதும் தேவனை ஸ்தோத்திரிக்கிறோம்.“
(1 தெசலோனிக்கேயர் 1:3-4 )
உங்கள் விசுவாசம் வளரக்கூடும் என்பதை நீங்கள் அறிவீர்களா? வாழ்க்கையின் கஷ்டங்களைப் பற்றி நீங்கள் கவலைப்படாமல், தேவனின் மீது கவனம் செலுத்தும் அளவுக்கு நீங்கள் விசுவாசத்துடன் வாழ முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? உங்கள் சுகம் பொருள்முதல்வாதத்திலிருந்து பெறப்படவில்லை, மாறாக பரிசுத்த ஆவியிலிருந்து பெறப்படுகிறது.
ஏசாயா 40.31 இல் இலைப்படையாத பலத்தையும் வரம்பற்ற சாத்தியங்களையும் அனுபவிக்கும் ஒரு குறிப்பிட்ட வகையான ஜெனங்களை பற்றி வேதம் நமக்குச் சொல்கிறது ”கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.“ இந்த வசனம், நீங்கள் ஒருபோதும் சோர்வோ, இலைப்போ அல்லது பேலவீனமோ இல்லாத ஒரு கிறிஸ்தவ வாழ்க்கையை வாழ வாய்ப்பு உள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது! மனதைக் கவருகிறதாக இருக்கின்றது, இல்லையா.
வளர்ச்சி என்பது நாம் ஜீவனோடு இருக்கிறோம் என்பதற்கு அடையாளமாக இருப்பது போல், தேவன் மீதான விசுவாசத்தையும் நம்பிக்கையும் அதிகரிப்பது தேவன் மீதான உயிரோட்டமான விசுவாசத்தின் அடையாளமாக இருக்கின்றது. விசுவாசத்தில் மிகுதியாய் வளர, உங்கள் வேர் மாறாத தேவனுக்குள் ஆழமாகச் செல்ல வேண்டும். பாருங்கள், தேவனுடைய வார்த்தைக்குக் கீழ்ப்படிவது விசுவாசத்தின் பெரும் ஊக்கமாகும்! தேவனுடைய வார்த்தையின்படி வாழ வில்லை என்றால், உங்கள் விசுவாச -வாழ்க்கைக்கு மரணம் நிச்சயம். இங்கே இன்னொரு காரியம்; ஜெபம் உங்கள் அன்றாட வாழ்க்கையாக இருக்க வேண்டும். உங்கள் விசுவாசத்தை கட்டியெழுப்புவதில் தேவனிம் திறன்களைப் பெறுவதற்கான சிறந்த வழிகளில் ஜெபம் ஒன்றாகும். (யுதா 20)
விசுவாசமுள்ள ஒரு மனிதன், அவனுடைய பிழைப்பே தேவனில் வேரூன்றியிருக்கும். இந்த குணம் நம் விசுவாச தகப்பனாகிய ஆபிரகாம், ஈசாக்கு , எலியா, தாவிது, கர்த்தராகிய இயேசு மற்றும் இன்னும் பல வேதாகம கதாபாத்திரங்களில் காணப்படுகிறது. இரட்சிப்பின் போது பெறப்பட்ட விசுவாசத்தின் விதையானது, விளைச்சலைக் கொடுக்க வார்த்தையினாலும் ஜெபத்தினாலும் நீர் பாய்ச்சப்பட வேண்டும்.
விசுவாசத்தை அளவிடுவதற்கான ஒரு வழி அன்பு. “...மேலும் உங்கள் ஒவ்வொருவரின் அன்பும் ஒருவரையொருவர் நோக்கி பெருகுகிறது” உங்கள் வாழ்க்கை எப்படி இருக்கிறது? நீங்கள் தேவனை எவ்வளவு நேசிக்கிறீர்கள்? உங்கள் அண்டை வீட்டாரை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள்? விசுவாசத்தில் வளர்வது அன்பில் வளர்வது. விசுவாசம் பெற, முதலில் அன்பு வேண்டும்; இது கலாத்தியர் 5:22ல் கூறப்பட்டுள்ளது.
விசுவாசத்தில் வளர்வது என்பது ஆவிக்குரிய அறிவிலும், சத்தியத்திலும், உண்மைகளிலும் வளர்வதாகும். தேவனுடைய வார்த்தையை எவ்வளவு அறிந்திருக்குறீர்கள்? அதில் எவ்வளவு உங்கள் வாழ்க்கையை மாற்றியுள்ளது? நீங்கள் என்ன வார்த்தையை விட்டுவிட்டீர்கள்? வேதத்தில் காணும் ஒவொரு தேவ மனுஷரும் மறுரரூபத்தின் பாதையில் சென்றனர். பொன்னைப்போல அதன் சிறந்த பகுதியை வெளிக்கொணர புடமிடுத்தலின் பாதையில் வந்தனர்.
விசுசாத்தில்வளரும் வாழ்க்கை அர்ப்பணிப்பு மற்றும் தியாகத்தின் வாழ்க்கை. தேவனுக்கு கொடுப்பதற்கு எதுவும் பெரிதாக ஆகாது, தேவனிடமிருந்து எந்த வார்த்தையும் செய்ய முடியாத அளவுக்குச் சிறியதாக இருக்காது. கிறிஸ்தவர்களாகிய நாமும் தெசலோனிக்கரைப் போலவே விசுவாசத்தில் நன்கு வளர வேண்டும். நம்முடைய விசுவாசம், ஜெனங்கள் கடவுளைத் துதிப்பதற்கு தூண்டுதலாகவும் காரணமாகவும் இருக்க வேண்டும். இன்று முதல் விசுவாசத்தில் வளரத் தேர்ந்தெடுங்கள்.
ஜெபம்
பிதாவே, நான் விசுவாசத்தில் நன்கு வளர்ந்து, உமக்கு மகிழ்ச்சியின் ஆதாரமாக மாற விரும்புகிறேன். எனவே எனக்கு உதவும் , ஆண்டவரே. இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Join our WhatsApp Channel
Most Read
● நீங்கள் எளிதில் காயப்படுகிறீர்களா?● தேவன் இவ்வளவாய் உலகத்தில் அன்பு கூர்ந்தார்
● பயப்படாதே
● சுய ஏமாற்றுதல் என்றால் என்ன? - I
● விசுவாசித்து நடப்பது
● மாற்றத்திற்கான தடைகள்
● அவர்கள் சிறிய இரட்சகர்கள்
கருத்துகள்