தினசரி மன்னா
ஊக்கமின்மையின் அம்புகளை முறியடித்தல்-I
Tuesday, 11th of June 2024
0
0
502
Categories :
விடுதலை (Deliverance)
”தாவீது மிகவும் நெருக்கப்பட்டான்; சகல ஜனங்களும் தங்கள் குமாரர் குமாரத்திகளினிமித்தம் மனக்கிலேசமானதினால், அவனைக் கல்லெறியவேண்டும் என்று சொல்லிக்கொண்டார்கள்; தாவீது தன் தேவனாகிய கர்த்தருக்குள்ளே தன்னைத் திடப்படுத்திக்கொண்டான்.“ 1 சாமுவேல் 30:6
ஏதோ ஒரு வகையில் ஏமாற்றத்தை சந்திக்காத மனிதர்கள் இந்த பூமியில் இல்லை. நம் திட்டங்களின்படி காரியங்கள் நடக்காதபோது, நாம் ஏமாற்றமடைந்து சோர்வடைகிறோம். துளிர்விடவில்லையென்றால் ஏமாற்றம் விரைவில் மனச்சோர்வாக வளரும். ஊக்கமின்மையின் வேர் ஏமாற்றம். இந்த கடைசி காலத்தில், தேவ பிள்ளைகளை முடக்குவதற்கு பிசாசு பயன்படுத்தும் ஒரு முக்கிய ஆயுதம் ஊக்கமின்மை.
”நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியினாலும் வல்லமையினாலும் அபிஷேகம் பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராயும் பிசாசின் வல்லமையில் அகப்பட்ட யாவரையும் குணமாக்குகிறவராயும் சுற்றித்திரிந்தார்.“அப்போஸ்தலர் 10:38 இதுவும் ஒரு காரணமாக இருக்கிறது.
தம்முடைய பூமிக்குரிய ஊழியத்தின் போது, கர்த்தராகிய இயேசு பிசாசின் வல்லமையிலிருந்து ஜனங்களை விடுவித்தார். ஊக்கமின்மையிலிருந்து தலை நிமிர்ந்து நிற்கும் இதே வல்லமை நம் அனைவருக்கும் உள்ளது என்பது நற்ச்செய்தி . நீங்கள் மனச்சோர்வில் மூழ்குவது தேவனின் விருப்பம் அல்ல என்பதை அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் ஒடுக்கப்பட்டு விரக்தியடைவது தேவனின் விருப்பம் அல்ல.
ஊக்கமின்மையின் முக்கிய ஆபத்துகளில் ஒன்று, ஒருவர் ஊக்கம் இழக்கும்போது, அவர் அல்லது அவள் அதே இடத்தில் இருக்க முனைகிறார்; அதே அளவில். தேக்க நிலையும் வரம்புகளும் விரைவில் உருவாகின்றன. அப்படிப்பட்ட ஒருவரால் தேவன் தன்னில் வைத்த தரிசனத்தையும் நோக்கத்தையும் தொடர முடியாது. எனது ஊழியத்தின் போது, ஊக்கமின்மையின் அம்புகளால் தாக்கப்பட்ட பல நபர்களை நான் கண்டிருக்கிறேன்.
இந்த பதிப்பை நீங்கள் படிக்கும்போது கூட, இயேசுவின் நாமத்தில் ஜெயங்கொள்ளும் அபிஷேகம் இப்போது உங்கள் மீது வருகிறது.
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், எனக்கு எதிரான ஊக்கமின்மையின் ஒவ்வொரு அம்புகளும் இயேசுவின் நாமத்தில் ஆக்கினியால் துண்டிக்கப்படும்.
இயேசுவின் நாமத்தில், எனக்கு எதிரான ஒவ்வொரு வகையான ஊக்கத்தையும் தோல்வியையும் நான் நிராகரிக்கிறேன்.
தந்தையே, இயேசுவின் நாமத்தில், நீர் என்னைச் அழைத்த ஆழைப்பை தொடர்ந்து செய்ய தைரியமும் உற்சாகத்தின் ஆவியை உங்களிடம் கேட்கிறேன்.
இயேசுவின் நாமத்தில், எனக்கு எதிரான ஒவ்வொரு வகையான ஊக்கத்தையும் தோல்வியையும் நான் நிராகரிக்கிறேன்.
தந்தையே, இயேசுவின் நாமத்தில், நீர் என்னைச் அழைத்த ஆழைப்பை தொடர்ந்து செய்ய தைரியமும் உற்சாகத்தின் ஆவியை உங்களிடம் கேட்கிறேன்.
Join our WhatsApp Channel
Most Read
● குற்றத்தின் பொறியில் இருந்து விடுபடுதல்● தேவனுக்கு முதலிடம் கொடுப்பது #2
● பாலியல் சோதனைகளை எவ்வாறு மேற்கொள்வது
● உங்கள் வாழ்க்கையில் நீடித்த மாற்றங்களை எவ்வாறு கொண்டு வருவது -2
● நீங்கள் தேவனிடமிருந்து தொலைவில் இருப்பதாக உணரும்போது எப்படி ஜெபிப்பது
● செல்வாக்கின் பெரிய பகுதிகளுக்கான பாதை
● அன்பு - வெற்றியின் உத்தி -2
கருத்துகள்