தினசரி மன்னா
இன்றைய காலத்தில் இதைச் செய்யுங்கள்
Thursday, 13th of June 2024
0
0
283
Categories :
மன்றாட்டு (Intercession)
இந்த கடந்த மாதங்களில் மில்லியன் கணக்கான மக்களுக்கு சவாலாகவும் மன அழுத்தமாகவும் இருந்திருகின்றன. ஒவ்வொரு முறையும் நான் எனது இரங்கலைத் தெரிவிக்கும்போதும், அவர்களின் வலிமிகுந்த சூழ்நிலைகளைப் பற்றி அனுதாபப்படும்போதும், எனக்குள் ஒரு ஆழமான குத்தலை உணர்கிறேன். பரிசுத்த ஆவியானவர், "மகனே, என் மக்களுக்காக ஊக்கமாக ஜெபியுங்கள்" என்று சொல்லி என்னை பாரப்படுத்தினார். உண்மையைச் சொல்வதென்றால், சில சமயங்களில் ஜெப விண்ணப்பங்களை எண்ணிக்கையில் நான் அதிகமாக உணர்கிறேன், ஆனால் நான் அவருடைய குரலுக்குக் கீழ்ப்படிய முடிவு செய்துள்ளேன்.
ஒரு நாள் கர்த்தராகிய இயேசு “தம் பன்னிரண்டு சீஷர்களையும் அழைத்து, அவர்களுக்கு பிசாசுகளை துறத்தவும்,நோய்களை குணமாக்கும் வல்லமையையும் அதிகாரத்தையும் கொடுத்தார், தேவனுடைய ராஜ்யத்தைப் பிரசங்கிக்கவும், வியாதியாஸ்தர்களை குணப்படுத்தவும் அவர்களை அனுப்பினார்.” (லூக்கா 9:1-2)
கர்த்தராகிய இயேசு தம்முடைய நாமத்தினாலே நோயுற்றவர்களைக் குணப்படுத்தும்படி தம் சீஷர்களுக்குக் கட்டளையிட்டார். ஒவ்வொரு சீஷனுக்கும் அதைச் செய்வதற்கு தெய்வீக அதிகாரம் அவர்களை ஆதரிக்கிறது என்பதே இதன் பொருள்.
”விசுவாசிக்கிறவர்களால் நடக்கும் அடையாளங்களாவன: என் நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்துவார்கள்; நவமான பாஷைகளைப் பேசுவார்கள்; சர்ப்பங்களை எடுப்பார்கள்; சாவுக்கேதுவான யாதொன்றைக் குடித்தாலும் அது அவர்களைச் சேதப்படுத்தாது; வியாதியஸ்தர்மேல் கைகளை வைப்பார்கள், அப்பொழுது அவர்கள் சொஸ்தமாவார்கள் என்றார்.“ மாற்கு 16:17-18
இந்த காலகட்டங்களில், சில கட்டுப்பாடுகள் ஜனங்கள் மீது கைகளை வைத்து அவர்களுக்காக ஜெபம் செய்ய அனுமதிக்காது. இருப்பினும், அவர்களுக்காக நீங்கள் பரிந்துரை செய்வதைத் தடுக்கக்கூடாது. அவர்களின் வியாதியை பற்றிய செய்திகளை நீங்கள் பெறும்போது, அவர்களின் பிரச்சனைகள் கேட்கும்போது - அவர்களுக்காகப் பரிந்து பேசுங்கள். அவர்களுக்காக அனுதாபப்படுவதற்குப் பதிலாக, நீங்கள் அவர்களுக்காக ஜெபிக்கப் போகிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள்.
கர்த்தராகிய இயேசு இன்னும் சிங்காசனத்தில் இருக்கிறார் என்றும், அவர் அவர்களை விட்டு விலக மாட்டார், கைவிட மாட்டார் என்றும் அவர்களிடம் சொல்லுங்கள். தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் இப்படிப்பட்ட மனப்பான்மையை நீங்கள் கடைப்பிடிக்கும்போது, அதைத் தொடர்ந்து வரும் விளைவுகளைப் பார்த்து நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். தேவனின் அற்புதமான தலையீட்டின் சாட்சியங்கள் எல்லா இடங்களிலிருந்தும் கொட்டத் தொடங்கும் - இயேசுவின் நாமம் உயர்த்தப்படும்!
நமது நோவா செயலியில் ஜெப வீரராக மாறுவதன் மூலம் நீங்கள் பலருக்கு ஆசீர்வாதமாக இருக்க முடியும். ஜெபிக்க யாரையாவது தேடி எங்கும் செல்ல வேண்டியதில்லை. ஜெப குறிப்புக்கள் நோவா பயன்பாட்டில் பாப் அப் செய்யும். நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம், KSM அலுவலகத்தை அழைத்து, ஜெப விண்ணப்பங்களுக்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய விரும்புகிறீர்கள் என்று அவர்களிடம் சொல்லுங்கள். அவர்கள் உங்களை பெயரை பதிவு செய்வார்கள் (இவை அனைத்தும் இலவசம்). நீங்கள் ஒரு விண்ணைப்பத்திற்காக ஜெபிக்கும்போது, அவர்களின் ஜெப குறிப்பிற்காக ஜெபித்ததாக அவர்கள் குறும் செய்தி பெறுவார்கள்.
“பாஸ்டர் மைக்கேல், எனக்கு என்ன பயன்?” என்று நீங்கள் கூறலாம். நல்ல கேள்வி! ஒரு பரிந்துரையாளர் தேவனின் இருதயத்திற்கு மிக நெருக்கமானவர் என்பது உங்களுக்குத் தெரியுமா? தீர்க்கதரிசிகள் தேவனின் ஊதுகுழலாக இருக்கிறார்கள், மற்றும் சுவிசேஷகர்கள் அவருடைய பாதங்கள், ஆனால் பரிந்து பேசுபவர்கள் அவருடைய இருதயம். பிறருக்காகப் பரிந்து பேசும் கிருபையை தேவனிடம் கேளுங்கள்.
பாருங்கள், தேவனுடைய ராஜ்யத்தில், மேலே செல்லும் வழி கீழே உள்ளது; பெற்றுக்கொள்ள நாம் கொடுக்கிறவர்களாக இருக்க வேண்டும். உங்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கான வழி மற்றவர்களின் பிரச்சனைகளை (தேவனின் உதவியுடன்) தீர்ப்பதாகும். நீங்கள் யோபுவை பற்றி படிக்கவில்லையா? நம்மில் பெரும்பாலானவர்களை விட அவருக்கு ஏராலமான பிரச்சினைகள் இருந்தன. அப்போதுதான் யோபு தன்னைச் சுற்றியிருந்தவர்களுக்காக ஜெபித்தார், என்ன நடந்தது என்று பார்க்க முடிவு செய்தார். பாருங்கள், என்ன நடந்தது ”யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப்பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்.“ யோபு 42:10
ஜெபம்
பிதாவே, இயேசுவின் நாமத்தில், ஒரு பரிந்துரையாளரின் இருதயத்தை நான் உம்மிடம் கேட்கிறேன். உம்மை பின்பற்ற எனக்கு உதவும். ஆமென்.
Join our WhatsApp Channel
Most Read
● நாள் 14: 40 நாட்கள் உபவாச ஜெபம்● விசுவாசத்தில் அல்லது பயத்தில்
● கீழ்ப்படிதல் ஒரு தெய்வீக அறம்
● ஆசீர்வதிக்கப்பட்ட நபர்
● சபை ஆராதனையை தவிர்த்துவிட்டு, வீட்டில் சபை ஆன்லைனில் பார்ப்பது சரியா?
● காணாமற்போன ஆட்டைக் கண்டுப்பிடித்த மகிழ்ச்சி
● மரியாதையும் மதிப்பும்
கருத்துகள்