தினசரி மன்னா
சிவப்பு எச்சரிக்கை
Friday, 14th of June 2024
0
0
448
Categories :
செழிப்பு (Prosperity)
"ஒரு காலத்தில் ஒரு பணக்காரர் இருந்தான், அவன் கற்பனை செய்யக்கூடிய மிகச் சிறந்த காரியங்களை கொண்டிருந்தான், ஒவ்வொரு நாளும் தனது செழுமையான ஆடம்பர வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்தான். அவனது மாளிகையின் வாயிலுக்கு வெளியே லாசரஸ் என்ற ஏழை பிச்சைக்காரன் இருந்தான். அவர் தினமும் அங்கேயே படுத்துக் கொண்டான், அவன் சரீரம் கொப்பளங்களால் மூடப்பட்டிருக்கும், அக்கம் பக்கத்து நாய்கள் அனைத்தும் வந்து அவனது திறந்த புண்களை நக்கும். பணக்காரன் தூக்கி எறிந்த குப்பைதான் அவன் சாப்பிடும் வேண்டிய உணவு.
“ஒரு நாள் ஏழை லாசரரு மறித்து போனான், தேவ தூதர்கள் வந்து அவருடைய ஆவியை பரலோகத்திற்கு அழைத்துச் சென்றனர். “செல்வந்தனும் அப்படியே மறித்து போனான். நரகத்தில், அவன் தனது வேதனையிலிருந்து நிமிர்ந்து பார்த்தான், தூரத்தில் ஆபிரகாமைக் கண்டான், மேலும் லாசரரு என்ற பிச்சைக்காரன் மகிமையுடன் அவருக்கு அருகில் நின்றான். செல்வந்தன் , ‘தகப்பனாகிய ஆபிரகாமே! தந்தை ஆபிரகாமே! என் மீது கருணை காட்டுங்கள். லாசரரு தன் விரலைத் தண்ணீரில் நனைத்து, என் நாக்கைக் குளிரச் செய்ய வருமாறு அனுப்பும், ஏனெனில் இந்த நெருப்புச் சுடர்களில் நான் வேதனைப்படுகிறேன்!’
”அதற்கு ஆபிரகாம்: மகனே, நீ பூமியிலே உயிரோடிருக்குங்காலத்தில் உன் நன்மைகளை அநுபவித்தாய், லாசருவும் அப்படியே தீமைகளை அநுபவித்தான், அதை நினைத்துக்கொள்; இப்பொழுது அவன் தேற்றப்படுகிறான், நீயோ வேதனைப்படுகிறாய்.“
லூக்கா 16:19-25
பணக்காரராக இருப்பது அல்லது செல்வந்தராக இருப்பது தவறல்ல. உண்மையில், வேதவார்த்தை கூறுகிறது, "தமது ஊழியக்காரனுடைய சுகத்தை விரும்புகிற கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக என்று எப்போதும் சொல்லக்கடவர்கள்.“
(சங்கீதம் 35:27). ஜனங்கள் தங்கள் வாழ்க்கையை தேவனிடமிருந்து முற்றிலும் சுதந்திரமாகவும், அவருடைய ஜனங்கள் மற்றும் அவர்களின் தேவைகளைப் பற்றி அலட்சியமாகவும் வாழும்போது பிரச்சனை. இன்றைய வாசிப்பில், பணக்காரன் பணக்காரனாக இருந்ததற்காக தண்டிக்கப்படவில்லை (பலர் நினைக்கிறார்கள் மற்றும் தவறாக கற்பிக்கிறார்கள்). ஏழை மனிதனாகிய லாசருவின் தேவைகளை சந்திக்கதாதால், அவன் நகரத்திற்கு அனுப்பப்பட்டார்.
தற்காலிக காரியங்களை விரும்பும் ஒரு மனிதன் இருந்தான். அவர் தனக்குச் சொந்தமான மற்றும் உடைமையாக்கக்கூடிய அனைத்தையும் தேடினான். அந்த நபர் இறந்துவிட்டான் மற்றும் அவனது சரீரம் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவனது உடலில் இருதயம் இல்லை என்பது தெரியவந்தது. அவனது குணத்தை அறிந்த அவனுடைய நண்பர்கள் அவனுடைய பொக்கிஷங்களின் களஞ்சியத்திற்கு ஓடிச்சென்றனர், அங்கே அவனுடைய எல்லா உடைமைகளுக்கிடையிலும் அவனுடைய இரத்தம் சிந்தும் இருதயத்தைக் கண்டார்கள்.
கற்றுக்கொள்ள: உங்கள் பொக்கிஷம் எங்கே இருக்கிறதோ, அங்கே உங்கள் இருதயமும் இருக்கிறது. மேற்கூறிய தொடர்புடைய கற்பனையான கதை உலகப் பொக்கிஷத்தைப் பற்றி நமக்கு நினைவூட்டுகிறது. பூமிக்குரிய பொக்கிஷம் "உங்களால் அதை எடுத்துச் செல்ல முடியாது" என்ற சொற்றொடருடன் சிறப்பாகப் பார்க்கப்படுகிறது. தேவனும் அவருடைய வார்த்தையும் இல்லாத செல்வம் நித்தியத்தின் வெளிச்சத்தில் ஆபத்தானது.
ஜெபம்
தந்தையே, என் செழிப்பை உமது மகிமைக்காகப் பயன்படுத்த எனக்குக் கற்றுக் தாரும். இயேசுவின் நாமத்தில். ஆமென்!
Join our WhatsApp Channel
Most Read
● நாள் 12: 40 நாட்கள் உபவாசம் மற்றும் ஜெபம்● முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாயிருக்கிறோமே
● ஆராதனையை ஒரு வாழ்க்கை முறையாக்குதல்
● உங்கள் சொந்த கால்களைத் தாக்காதீர்கள்
● உங்கள் வேலையைப் பிசாசு எப்படித் தடுக்கிறான்
● போற்றப்படாத கதாநாயகர்கள்
● விதை பற்றிய திடுக்கிடும் உண்மை
கருத்துகள்