தினசரி மன்னா
துளிர்விட்ட கோல்
Saturday, 29th of June 2024
0
0
323
Categories :
கடவுளின் இருப்பு (Presence of God)
”பின்பு கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இஸ்ரவேல் புத்திரரோடே பேசி, அவர்கள் பிதாக்களின் வம்சங்களாகிய ஒவ்வொரு வம்சத்தினுடைய பிரபுவினிடத்தில், ஒவ்வொரு கோலாகப் பன்னிரண்டு கோலை வாங்கி, அவனவன் கோலில் அவனவன் பேரை எழுதுவாயாக.“
எண்ணாகமம் 17:1-2
கோலானது அதன் மூலத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருப்பதைக் கவனியுங்கள். எளிமையாக சொல்லவேண்டுமானால், கோலானது அதின் வளர்த்த மரதிலிருந்து துண்டிக்கப்பட்டதால், கோலானது வளர்ந்து கனி தரும் திறனை இழந்துவிடுகிறது.
நீங்கள் இதைப் படிக்கும் போது, உங்கள் வாழ்க்கையின் சில பகுதிகள் நான் சொன்ன இந்தக் கோலைப் போல வறண்டு போயிருக்கலாம். ஒருவேளை உங்களுக்கு ஒரு கனவு, ஒரு பார்வை இருந்திருக்கலாம், அது காலப்போக்கில் மங்கிஇருக்கலாம். உங்கள் காரியம் இன்று மாறும் என்று நான் நம்புகிறேன்.
சுவாரஸ்யமாக, பண்டைய இஸ்ரேலிய கலாச்சாரத்தில், ஒரு கோல் இருந்தது:
1. வல்லமை மற்றும் அதிகாரத்தின் அடையாளம் (யாத்திராகமம் 4:20; யாத்திராகமம் 7:9-12)
2. நியாயத்தீர்ப்பின் அடையாலம் (சங்கீதம் 2:9; நீதிமொழிகள் 10:13) செங்கோலுடன் தொடர்புடையது (எசேக்கியேல் 19:14)
”அவைகளை ஆசரிப்புக் கூடாரத்திலே நான் உங்களைச் சந்திக்கும் ஸ்தானமாகிய சாட்சிப்பெட்டிக்கு முன்னே வைக்கக்கடவாய்.“
எண்ணாகமம் 17:4
கர்த்தர் மோசேயிடம் காய்ந்த கோல்களை தம் முன்னிலையில் வைக்கச் சொன்னார் - எங்காவது அல்ல, அவருடைய முன்னிலையில். உங்கள் நிலைமை என்னவாக இருந்தாலும், அனுதினமும் தேவனின் முன்னிலையில் உங்களைப் அர்ப்பணியுங்கள். அவரைப் துதித்து, ஆராதனை பாடல்களை கேட்பதன் மூலம் அந்த பிரசனத்தை நாள் முழுவதும் அனுபவியுங்கள். அவருடைய பிரசனத்தை இழக்காதீர்கள். இதுதான் திறவுகோல்.
”மறுநாள் மோசே சாட்சியின் கூடாரத்துக்குள் பிரவேசித்தபோது, இதோ, லேவியின் குடுப்பத்தாருக்கு இருந்த ஆரோனின் கோல் துளிர்த்திருந்தது; அது துளிர்விட்டு, பூப்பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது.“
எண்ணாகமம் 17:8
கணிகளின் மூன்று நிலைகள்
1. மொட்டுகள்
2.பூக்கள்
3.பாதாம் - கனி
இரவு முழுவதும் தேவனுடைய சந்நிதியில் கோல் கிடந்தபோது இவை அனைத்தும் நடந்தன. ஏது வருடங்கள, மாதங்கள் எடுத்ததோ, அவைகள் தேவனின் பிரசன்னத்தில் சில நாட்கள் மட்டுமே எடுக்கும். கடினமான காரியங்கள் பலனைத் தரத் தொடங்கும். உங்கள் மனத்தால் கூட புரிந்துகொள்ள முடியாத ஒரு வேலையை தேவன் விரைவாகச் செய்வார்.
நான் இந்தியாவின் இந்த குறிப்பிட்ட மாநிலத்தில் சுவிசேஷத்தைப் பிரசங்கித்துக்கொண்டிருந்தேன். வாயில் புற்றுநோய் கட்டியால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் இருந்தார். அன்று மாலை, நான் இப்போது உங்களிடம் சொன்னதையே அவர்களிடம் சொன்னேன். உங்களை தேவனின் முன்னிலையில் கொண்டு வாருங்கள். அன்று மாலை இந்த பெண் மேடைக்கு வந்து, புற்றுநோய் கட்டி உடைந்ததாக சாட்சி அளித்தார்; வாய் முழுவதும் இரத்தம் இருந்தது. இரத்தத்தை துடைக்க தன்னார்வலர்கள்ளிடம் துண்டுகளைப் பெற்றுக் கொண்டனர். உண்மையாகவே, நான் கொஞ்சம் அதிர்ந்தேன். மறுநாள் அதிகாலையில், அவள் மருத்துவமனைக்குச் சென்றாள், அங்கு சோதனைகள் நடத்தப்பட்டன. அவள் புற்றுநோய் முற்றிலும் நீங்கியது. மருத்துவர்கள் கூட ஆச்சரியப்பட்டார்கள்.
அவருடைய வார்த்தை எவ்வளவு உண்மை!
”ஜீவமார்க்கத்தை எனக்குத் தெரியப்படுத்துவீர்; உம்முடைய சமுகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலதுபாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு.“
சங்கீதம் 16:11
உங்களை அவருடைய முன்னிலையில் கொண்டு வாருங்கள். உங்கள் கதை இப்போது மாறுகிறது.
ஜெபம்
பரலோகத் தகப்பனே, உமது பரிசுத்த தெய்வீக பிரசன்னத்தை என் வாழ்வில் தினமும் உணர விரும்புகிறோம். எப்பொழுதும் என்னோடுகூட இரும், என் இருதயத்தை தொட்டு, என்னை வடிவமைத்து, என்னை ஒருவாக்கும், உபயோகியும். இயேசுவின் நாமத்தில். ஆமென்.
Join our WhatsApp Channel
Most Read
● தேவனுடைய வார்த்தை உங்களை புண்படுத்த முடியுமா?● நாள் 21:40 நாட்கள் உபவாசம் மற்றும் பிரார்த்தனை
● பூமியின் ராஜாக்களுக்கு மேல் ஆளுகை
● வீழ்ச்சியிலிருந்து மீட்புக்கு ஒரு பயணம்
● சரியான தரமான மேலாளர்
● அகாபே அன்பில் வளருதல்
● அன்பு - வெற்றியின் உத்தி -2
கருத்துகள்