தினசரி மன்னா
நமது தேர்வுகளின் தாக்கம்
Friday, 26th of July 2024
0
0
206
Categories :
தேர்வுகள் (Choices)
சில கிறிஸ்தவர்கள் ஏன் வெற்றி பெறுகிறார்கள், மற்றவர்கள் விசுவாசத்தைத் கொண்டிருப்பதாகத் தோன்றும் மற்றவர்கள் பரிதாபமாகத் தோல்வியடைகிறார்கள்? நம் வாழ்க்கை தேர்வுகளால் நிரம்பியுள்ளது. தேவன் இஸ்ரவேலரிடம் தம்முடைய ஜனங்களை நோக்கி, “எனக்கு விருப்பமில்லாததை நீ தேர்ந்தெடுத்தாய் (ஏசாயா 66:4)
இதிலிருந்து நமது தேர்வுகள் முக்கியம் என்பதை புரிந்து கொள்ளலாம். இன்று நாம் எடுக்கும் தேர்வுகள் நாளைய எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. இன்றைய நமது தேர்வுகள் நாளைய அறுவடைக்கான விதை. நம்முடைய தேர்வுகள் தேவனை பிரியப்படுத்துவதாக இருக்க வேண்டும், இல்லையெனில் அது அவருடைய பார்வையில் தீயது.
கர்த்தர் சொன்னார், “ஊரீம் தும்மீம் என்பவைகளை வைப்பாயாக; ஆரோன் கர்த்தருடைய சந்நிதானத்தில் பிரவேசிக்கும்போது, அவைகள் அவன் இருதயத்தின்மேல் இருக்கவேண்டும்; ஆரோன் தன் இருதயத்தின்மேல் இஸ்ரவேல் புத்திரருடைய நியாயவிதியைக் கர்த்தருடைய சந்நிதானத்தில் எப்பொழுதும் தரித்துக்கொள்ளவேண்டும்.”
யாத்திராகமம் 28:30
இங்கே நாம் பார்க்கிறோம், பிரதான ஆசாரியரான ஆரோனின் மார்பகத் துண்டில் வச்சிட்டிருப்பது "ஊரீம் தும்மீம் - சில முக்கியமான முடிவுகள் அல்லது தேர்வுகள் செய்யப்பட வேண்டியிருக்கும் போது தேவனின் விருப்பத்தைப் பற்றிக் கேட்கப் பயன்படுத்தப்பட்ட இரண்டு கற்கள். ஊரீம் மற்றும் தும்மீம் இஸ்ரவேல் தேசத்திற்கு ஒரு அற்புதமான பரிசு, ஆனால் அவை இஸ்ரவேலின் பிரதான ஆசாரியனால் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.
மறுரூப மலையில் (தாபோர்), கர்த்தராகிய இயேசு தம்முடைய நெருங்கிய சீஷர்களான பேதுரு, யாக்கோபு மற்றும் யோவான் ஆகியோருடன் இருந்தார், அவர்கள் தேவனின் சத்தத்தை கேட்டபோது: “இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன், இவருக்குச் செவிகொடுங்கள்”
(மத்தேயு 17:5)
இந்த சீஷர்கள் அன்று தேவ குமாரனாகிய இயேசுவின் மகிமையுடன் ஒரு வல்லமைவாய்ந்த சந்திப்பைக் கொண்டிருந்தனர். இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்த பிறகு இந்த நிகழ்வை அவர்கள் புரிந்து கொள்ளவில்லை, ஆனால் தேவன் சொன்னதை அவர்கள் நினைவு கூர்ந்தனர்: “அவர் சொல்வதைக் கேளுங்கள்!”
"உங்கள் இருதயத்தைக் கேளுங்கள்", "நன்றாக இருந்தால் அதைச் செய்யுங்கள்" என்று உலகம் நம்மைக் பார்த்து சொல்லகிறது. நீங்களும் நானும் நமது தேர்வுகள் மற்றும் வாழ்க்கை முடிவுகளை நாம் எப்படி உணர்கிறோம் அல்லது நமக்கு தெரிந்ததை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டியதில்லை.
இன்று நாம் நம்முடைய பிரதான ஆசாரியராகிய, தேவனுடைய ஜீவனுள்ள வார்த்தையாகிய கர்த்தராகிய இயேசுவை நம்ப வேண்டும். நாம் தேவனுக்கு உண்மையாக செவிசாய்த்தால், நம்முடைய தேர்வுகளும் வாழ்க்கை முடிவுகளும் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் இருக்க வேண்டும்.
தேவனுடைய வார்த்தை கூறுகிறது, ““அன்றியும், பாலியத்துக்குரிய இச்சைகளுக்கு நீ விலகியோடி, சுத்த இருதயத்தோடே கர்த்தரைத் தொழுதுகொள்ளுகிறவர்களுடனே, நீதியையும் விசுவாசத்தையும் அன்பையும் சமாதானத்தையும் அடையும்படி நாடு.”
(2 தீமோத்தேயு 2:22)
தேவனுடைய வார்த்தையின் தாக்கத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்மானங்கள் காணப்படுகின்ற காணப்படாத ஆசீர்வாதங்களை விளைவிக்கும். இருப்பினும், உணர்வுகள், உணர்ச்சிகள், சகாக்களின் அழுத்தம் ஆகியவற்றின் அடிப்படையில் தவறான தேர்வுகள் இருக்கலாம் மற்றும் பெரும்பாலும் "ஆசீர்வாதம்-தடுப்பான்களாக" இருக்கும்.
ஜெபம்
1. ஆண்டவரே, ஒவ்வொரு நாளும் ஞானமான தேர்வுகளைச் செய்ய எனக்கு உதவும்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தில், எல்லாவற்றிலும் சரியான தேர்வுகளைச் செய்வதற்கான ஞானத்தையும் புரிதலையும் நான் உங்களிடம் கேட்கிறேன்.
3. இயேசுவின் நாமத்தில், இனி உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையில் நான் தேர்வு செய்ய மாட்டேன், ஆனால் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் தேர்வு செய்வேன் என்று கட்டளையெடுகிறேன்.
4. இயேசுவின் நாமத்தில், இனி என் தேர்வுகள் நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையையும் எதிக்கொள்ளும் என்று கட்டளையெடுகிறேன்.
2. பிதாவே, இயேசுவின் நாமத்தில், எல்லாவற்றிலும் சரியான தேர்வுகளைச் செய்வதற்கான ஞானத்தையும் புரிதலையும் நான் உங்களிடம் கேட்கிறேன்.
3. இயேசுவின் நாமத்தில், இனி உணர்வுகள் மற்றும் உணர்ச்சிகளின் அடிப்படையில் நான் தேர்வு செய்ய மாட்டேன், ஆனால் தேவனுடைய வார்த்தையின் அடிப்படையில் தேர்வு செய்வேன் என்று கட்டளையெடுகிறேன்.
4. இயேசுவின் நாமத்தில், இனி என் தேர்வுகள் நான் எதிர்கொள்ளும் ஒவ்வொரு சூழ்நிலையையும் எதிக்கொள்ளும் என்று கட்டளையெடுகிறேன்.
Join our WhatsApp Channel
Most Read
● கடனில் இருந்து விடுபடுங்கள் : திறவுக்கோள் # 1● மற்றொரு ஆகாப் ஆக வேண்டாம்
● கீழ்ப்படிதல் ஒரு தெய்வீக அறம்
● உங்கள் ஆவிக்குரிய பலத்தை எவ்வாறு புதுப்பிப்பது -2
● சுய மகிமை என்னும் கண்ணி வலை
● உங்கள் விசுவாசத்தை சமரசம் செய்யாதீர்கள்
● வாழ்க்கையின் புயல்களுக்கு மத்தியில் விசுவாசத்தை கண்டறிதல்
கருத்துகள்